Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[15 November 2012] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23862
பாராட்டுக்கள்.. தொடர்ந்து இது மாதிரி கண்காட்சிகளை நடத்துங்கள்.
இன்றைய காலகட்டத்தில் புத்தங்கள் வாசிப்பது என்பது மாணவர்களிடம் அபூர்வமாக ஆகிவிட்டது.
ஏன் பாடப்புத்தங்களை கூட வாசிக்க ஆர்வப்படுவது இல்லை. மதிப்பெண்கள் எடுக்கனும் என்ற ஒரே குறிக்கோளுக்காக ஒவ்வொரு பாடத்திற்கும் உள்ள கைடு புக்கை வாங்கி விடுகிறார்கள். அல்லது ஒவ்வொரு கேள்விக்கும் உள்ள பதிலை கோடு போட்டு வைத்து, அந்த கோட்டை தாண்டி ஒரு வார்த்தையை கூட வாசிப்பது கிடையாது.
இந்த மாதிரி புத்தக கண்காட்சிகள் அதிகம் நடத்தி, மாணவர்களிடம் படிக்கும் திறனை ஊக்குவிக்கனும்.
ஏதோ கண்காட்சி நடத்தினோமா, மாணவர்களை அந்த புத்தத்தை வாங்கு, இந்த புத்தத்தை வாங்கு என்று சொல்லி, ஒவ்வொரு வீட்டிலும் பிரிக்கப்படாத நான்கு, ஐந்து டிக்சனரி புத்தகம் சேருவதை நிறுத்தனும்.
** ஒரு சகோதரர் அவரின் மகனை முடி வெட்டும் கடைக்கு அழைத்து வந்தார். கூட்டம் அதிகம். உடனே அங்கு இருந்த ஒரு புத்தகத்தை எடுத்து மகனிடம் கொடுத்தார்.
அவனோ.. நெருப்பை தொட்ட மாதிரி வெடுக்கென்று கீழே போட்டுவிட்டான்.
தந்தையோ "மூதி.. மூதி.. படிப்பது என்றாலே கசப்புதான்" என்று பாட்டு பாடி விட்டார். இதான் அதிக மாணவர்களின் இன்றைய நிலை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross