Re:...நகராட்சி விதிமுறைகள்... posted bymackie noohuthambi (kayalpatnam)[16 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23880
சொல்வதெல்லாம் உண்மைகள் உண்மையை தவிர வேறொன்றுமில்லை என்று கோர்டில் கூண்டில் நிர்கபோகும்போது ஒரு வாக்குமூலம் வாங்குவார்கள். சொல்பவனுக்கே தெரியாது தான் என்ன சொல்கிறோம் என்று. இது பழக்கப்பட்டு போன ஒரு மந்திரம் மாதிரி மொழியும். அதை வைத்து அவன் சொல்வதெல்லாம் சாத்தியமானது என்று நம்பி விட முடியாது.
நகராட்சியினர் சொல்வதும் சரிதான் மக்கள் செய்வதும் சரியில்லைதான். அப்படியானால் என்ன செய்வது. நல்ல கேள்வி. விடை வெறும் சிம்பிள். முன்பு நகராட்சியில் ஒரு சட்டம் இருந்தது. வீடு கட்டுபவர்கள் அவர்கள் வீட்டின் சிமென்ட், கல் கழிவுகளை வெளியில் இத்தனை நாளைக்குத்தான் போடலாம் அதை அப்புறப்படுத்துவதற்கு அவகாசம் கொடுப்பார்கள். பிளான் பாஸ் பண்ணும்போதே இதற்காக ஒரு தொகை பிடித்தம் செய்வார்கள். அது நகர்மன்றமே அந்த கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு உள்ள கட்டணம். அது இப்போது நடைமுறையில் இருப்பதாக தெரியவில்லை.
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது
அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது.
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது.
நடக்கிறது நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு நகராட்சிதான் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு உறுப்பினர்களும் அவரவர்கள் வார்டு சுத்தத்தை கவனிக்க வேண்டும். அந்த வார்டு பெண்களை அவர்கள் கனிவுடனும் கண்டிப்புடனும் பேச முடியும்.
அதே போல் தேவையான கழிவுகளை அப்புறப்படுத்த வண்டிகளும் துப்புரவு பணியாளர்களையும் நிறை வேலையில் அமர்த்த வேண்டும். வீடு தீர்வை பாக்கி, தண்ணீர் தீர்வை லட்சகணக்கில் பாக்கி என்றெல்லாம் இருக்கிறது. இதை எல்லாம் முறையாக வசூல் செய்தாலே போதும், எத்தனை வண்டிகள் வாங்கலாம் எத்தனை ஆளையும் வேலைய்க்கு சேர்க்கலாம். புதிதாக ஒன்றும் வசூல் செய்ய தேவை இல்லை.
நகரமன்ற தலைவி இதை கருத்தில்கொண்டு இந்த மாத கூட்டத்தை அவசரமாக கூட்டுங்கள் பொதுமக்களிடம் ஆலோசனை கேளுங்கள். பிரச்சினைகள் தீரும்.
IF YOU CANNOT SOLVE A PROBLEM. THEN YOU ARE PART OF THAT PROBLEM. EVERY PROBLEM HAS A SOLUTION.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross