அறிவை பயன்படுத்தி சிந்தித்தாலே... posted byN.S.E. மஹ்மூது ( காயல்பட்டணம் )[17 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23896
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
திருந்தவும் வேண்டாம், திருத்தவும் வேண்டாம் - இறைவன் தந்த அறிவை பயன்படுத்தி சிந்தித்தாலே போதும் எல்லாம் சீராகும்.
இந்த செய்திக்கு கருத்து அதிகம் எழுத வேண்டிய தேவை இல்லை என்று நினைக்கிறேன் - சமீபத்தில் எழுத்து மேடையில் வெளிவந்த " குப்பைக் கொட்டுதலும்! குணங்கெட்ட மக்களும்!! " என்ற கட்டுரையை படித்தாலே எல்லாம் விளக்கமாக புரியும்.
----------------------------------------------
பாராட்டு விழா! :
" சாலையோரத்தில் வெட்டப்பட்ட மரக்கிளை குப்பைகளை மொத்தமாகக் கொட்டியவரிடம் இதுகுறித்து வினவுகையில், அதற்கான கட்டணத்தைத் தந்துவிடுவதாகவும், நகராட்சி மூலம் இக்குப்பை அகற்றப்படாவிட்டால் - நடு வீதியில் அவற்றை வைக்கப்போவதாகவும் தெரிவித்தார். "
இந்த செய்தி உண்மையானால் இப்படி சொன்ன அந்த "புண்ணியவான்" யார் ? தெரியப்படுத்தினால் பாராட்டு விழா! நடத்தலாமே!
-----------------------------------------------
இறைவனின் கோபம் :
எவனுக்கோ வந்த விதி என்று கண்ட ,கண்ட இடங்களிலும் - நினைத்த நேரத்திலும் குப்பைகளை கொட்டியும் இன்னும் பல வகைகளிலும் வேண்டும் என்றே மக்களுக்கு இடையூறு செய்பவர்கள் ஒருகாலமும் நிம்மதியாக இருக்க மாட்டார்கள்.
தெரியாமல் செய்பவர்கள் மீது குற்றம் சுமத்தப்படாது - தெரிந்தே செய்பவர்கள் மீது இறைவனின் கோபம் சும்மா விடாது.
இவர்கள் எல்லாம் சிந்தித்து செயல்பட்டால் இறைவனின் கோபத்திலிருந்து விடுபடுவார்கள் - சிந்திப்பார்களா?.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross