பத்து நிமிடமித்தில் வாசிக்கப் போதுமான ஓர் ஆக்கத்தில்,
பத்திற்கும் மேற்பட்ட வரலாற்று நிகழ்வுகளை, எந்தவித
முரண்பாடுமின்றி, அழகிய முத்துமாலை போல கோர்த்துத்
தந்திருக்கின்ற, மதிப்பிற்குரிய ஷாஜகான் மாமா அவர்களை,
மூன்று மாதம் முன்பு வரை, ஒழுக்கமும், நேர்மையும் கொண்ட
ஒரு வியாபாரியாக மட்டும்தான் அறிந்து வைத்திருந்தேன். (என்னை அவர்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன்).
கடந்த சில கட்டுரைகள், அவர்களது செயல்பாடுகள் அனைத்தையும் ஆழமாக நோக்கும்போது, துரை அவர்கள்
சிறந்ததோர் இலக்கியவாதியாகவும், சமூகப் போராளியாகவும்,
வயதால் மட்டுமல்ல மனதாலும் பெரியவர் என்பதை உணர
முடிகிறது.
பணம் இருந்தால் மாத்திரம் போதும், ஜால்ராக்களின் துணையுடன் என்ன ஆட்டம் போட்டாலும் தடுத்து நிறுத்த
எவருமில்லை என்ற மமதையில், உண்மையான சமூக
ஊழியர்களை பினாமிகளை வைத்து புழுதி வாரித் தூற்றும்
புகழ் விரும்பிகளுக்கு மத்தியில், ஷாஜகான் துரையைப் போன்ற
பெரியவர்கள், உண்மையை உலகிற்கு எடுத்துச் சொல்ல,
எழுதுகோலை கையில் எடுத்திருப்பது, மன ஆறுதலையும்,
தைரியத்தையும் தருகிறது.
ஷாஜகான் துரை அவர்களே! நீங்கள் இந்த மண்ணின் மைந்தர்.
இந்த நகரம் உங்களை எப்போதும் மலர்த்தூவி வரவேற்கும்.
உறங்குவதற்காக அல்ல! இந்த நகரின் நன்மைக்காக பணியாற்றக் காத்திருக்கும் எண்ணற்ற இளைஞர்களை, இன்ஷா அல்லாஹ் இன்னும் அரை நூற்றாண்டு காலமேனும்
வழிநடத்த! அதற்காக நாங்கள் துஆ செய்கிறோம்.
மறக்க முடியாத மாமனிதர் மர்ஹூம் டாக்டர் சுலைமான்
அவர்கள் மறைந்து விட்டாலும், அவர்கள் விதைத்து சென்ற
மனித நேயம், நமது மண்ணில் தொடரட்டும். மாண்புகள் நிறையட்டும். அன்னாரின் மறுமை நல்வாழ்விற்காக நாம்
அனைவரும் இறைவனை இருகரமேந்தி இறைஞ்சிடுவோம்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross