அனுசரித்து போவது தான் நல்லது...! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[18 November 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23935
ஓட்டுநரின் கவனக்குறைவு, வாகங்களின் முறையற்ற பராமரிப்பு, வண்டிக்குள்ளேயே ஓட்டை விழுந்து அதுக்குள்ளே குழந்தை விழுந்து அநியாயமா செத்துப்போன அவல நிலை! பள்ளி வாகனங்கள் விபத்துக்குள்ளாகி காவு வாங்கிய மழலைகள் தான் எத்தனை...எத்தனை...?
விபத்துக்களை தடுக்க வேகத்தைக் குறைத்து இது பள்ளி வாகனம் என தெரியும் விதம் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களுக்கு மஞ்சள் நிறத்தைக் கட்டாயப்படுத்தியது அரசாங்கம். இவர்களுக்கான விதிகள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும். மேலை நாடுகளில் இது போன்ற வாகனங்களுக்கு சலுகைகளும் அதே நேரத்தில் கடுமையான விதிமுறைகளும் உள்ளன.
விலை மதிக்கவியலாத பொக்கிஷங்களான மாணவ-மாணவியர், மழலைப் பூக்களை பாதுகாப்புடன் சுமந்துச் செல்லும் மாபெரும் பொறுப்பு இவ்வாகன ஓட்டுநர்களுக்கும் உரிமையாளர்களுக்கும் உண்டு என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
இவ்விஷயத்தில் அரசு விதிக்கும் அனைத்து ஆணைகளும் வருங்கால இந்தியாவின் தூண்களான மாணவ மாணவியர்களின் நன்மைக்காகவே இருக்கும். அனுசரித்து போவது தான் நல்லது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross