பள்ளிக் குழந்தைகளுக்காக இயக்கப்படும் வாகனங்களைப் பராமரிப்பதற்கும், அதற்குண்டான தகுதிச் சான்றிதழை மாவட்ட போக்குவரத்து அதிகாரியிடமிருந்து பெறுவதற்கும், தமிழக அரசால் கூறப்பட்டுள்ள விதிமுறைகளில் சிலவற்றின் நடைமுறை சாத்தியம் குறித்து, 07.11.2012 அன்று கோயமுத்தூரில் நடைபெற்ற தனியார் பள்ளிகள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டுள்ளது.
பின்னர், சில விதிமுறைகள் நடைமுறை சாத்தியமற்றதெனக் கூறி, அதிலுள்ள சிரமங்களை அரசின் கவனத்திற்குக் கொண்டு வரும் விதமாக இம்மாதம் 19ஆம் தேதி திங்கட்கிழமையன்று (நாளை) தனியார் பள்ளி வாகனங்கள் இயக்கப்பட மாட்டாது என முடிவு செய்யப்பட்டது.
அதனடிப்படையில், காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி உள்ளிட்ட தனியார் பள்ளிகளின் வாகனங்கள் நாளை ஒருநாள் மட்டும் இயக்கப்படாது என்றும், வகுப்புகள் வழமை போன்று நடைபெறும் என்றும் அப்பள்ளிகளின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |