அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் கிளையின் முன்னாள் அவைத்தலைவரும், நடப்பு நிர்வாகிகளுள் ஒருவருமான எம்.எஸ்.எம்.ஷாஃபீ 09.11.2012 அன்று நண்பகல் 12.30 மணியளவில் காலமானார். அன்னாரின் ஜனாஸா, நேற்றிரவு 08.00 மணியளவில் காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறைவையொட்டி, தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், 17.11.2012 சனிக்கிழமையன்று மதியம் 01.00 மணியளவில், காயல்பட்டினம் ஹாஜியப்பா தைக்கா தெருவிலுள்ள அவரது இல்லத்திற்குச் சென்று, உறவினர்களான ‘நட்புடன் தமிழன்’ முத்து இஸ்மாஈல், எல்.எம்.இ.கைலானீ உள்ளிட்ட குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர், வெளியூரிலிருந்த காயல்பட்டினம் நகர்மன்ற 13ஆவது வார்டு உறுப்பினரும் - அதிமுக நகர நிர்வாகிகளுள் ஒருவருமான எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீனுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு அமைச்சர் ஆறுதல் தெரிவித்தார்.
அதிமுக காயல்பட்டினம் நகரச் செயலாளர் செய்யது காஸிம், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலாளர் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம், ஜெயலலிதா பேரவை நகரச் செயலாளர் எல்.எஸ்.அன்வர் உட்பட கட்சியினர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர். |