தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் 2013 பணிகள் 01.10.2012 அன்று துவங்கப்பட்டு, 20.11.2012 தேதி வரை, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் - நிர்ணயிக்கப்பட்ட அலுவலரால்,
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம் 6,
வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கம் செய்ய படிவம் 7,
வாக்காளர் பட்டியலில் விபரங்களை திருத்தங்கள் செய்ய படிவம் 8,
அதே தொகுதியில் முகவரி மாறி குடியிருந்தால் படிவம் 8ஏ
ஆகியவற்றில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
தகுதியுள்ளோர், இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி - 20.11.2012 தேதிக்குள் விண்ணப்பங்களை அளித்திடுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
|