காயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கையாகிவிட்டது. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.
09.11.2012 தேதி முதல் இன்று வரை கடலின் மேற்பரப்பு செந்நிறமாகவே உள்ளது. இன்று மாலை 05.45 மணிக்கு பதிவுசெய்யப்பட்ட கடல் காட்சிகள் பின்வருமாறு:-
காயல்பட்டினம் கடற்பரப்பின் 15ஆம் தேதி காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக!
1. என் மீது அவதூறு வழக்கு தொடரலாம்..! வழக்கை எதிர்கொள்ள நான் தயார்...! கோடியில் புரளும் நிர்வாகம் தயாரா...? posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[17 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23899
டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது... இது செய்தியின் வாசகம்..
அதுன்ன... கருதப்படுகிறது...! கருதப்படுகிறது...! திரும்ப திரும்ப நானும் பல முறை சுட்டி காட்டிக்கொண்டே உள்ளேன்... துணிந்து செய்தியை போடுங்கள் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் நச்சு கலந்த கழிவு நீர் கடலில் கலக்கப்படுகிறது என்று உறுதியான செய்தியை போடுங்கள்... (என்னிடம் புகைப்பட ஆதாரம் உள்ளது...) தான் (DCW) நச்சு கழிவு நீர் திறந்து விடவில்லை என்றும் இவர் அவதூறு கருத்து பதிகிறார் என்று இந்த நிர்வாகம்... என் மீது அவதூறு வழக்கு தொடரலாம்..! வழக்கை எதிர்கொள்ள நான் தயார்...! கோடியில் புரளும் நிர்வாகம் தயாரா...?
கடலில் கலக்கப்படும் நச்சு கலந்த கழிவுநீருக்கு விரைவில் நகர் மக்கள் இதற்க்கு எதிராக எழுவார்கள்... இது உறுதி... விரைவில் எதிர் பாருங்கள்... நகர் நலன் மீது அக்கறை கொண்டோர்களே கைகோர்க்க நீங்களும் வாருங்கள்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross