2. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[17 November 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23905
அஸ்ஸலாமு அலைக்கும்
நம் நகராட்சியால் செயல்படுத்தி வருகின்ற இந்த கொசு ஒழிப்பு ...நம் ஊருக்கு கண்டிப்பாக இப்போதைய சூழ்நிலமைக்கு தேவைதான் ....நல்ல செயல் பாடு .....
ஒரு சின்ன சந்தேகம் ....இந்த கொசு ஒழிப்பு திட்டம் நம் ஊர் பூராவும் துரிதமாக செயல் படுத்தபடுமா ??? அல்லது ...அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் வளாகத்தில் மட்டும் தான் அடிக்கப்படுமா ?? என்ன ....
இங்கு ( சவுதி அரேபியா ) கொசு மருந்து பல்தியாவால் ....ஒரு சிங்கிள் பிக்கபில் வைத்து பெரிய மிஷின் மூலமாக தெரு தெருவாக கொசு புகை அடித்து செல்வார்கள் ....நல்ல பலனும் இங்கு தெரிகிறது .... நம் நகராட்சியோ ஒரு சைக்கிளில் வைத்து ...சினதாக ஒரு மிஷின் மூலம்..... கொசு புகை அடித்து வருவது ...சாத்தியபடுமா ?? நம் ஊர் கொசுக்கள் எங்கே சாக போகிறது..........அது எல்லாம் நம் ஊர் மக்களின் ரத்தத்தை நல்லா குடித்து ...ரொம்பவும் திடகாத்திரமாகவே ...தடித்து இருக்கிறது அல்லவா ....இதில் பவர் கட் வேறு ...இந்த கொசுக்களுக்கு டபுள் கொண்டாட்டமே ........
நம் நகராட்சி இந்த கொசுக்களின் '' பதுவாக்களை .... & கோபத்தை ...ஏந்தாமல் இருப்பது நல்லதே .... தமாஸ் .
வஸ்ஸலாம்
Moderator: நகராட்சி சார்பில் நகரின் பல இடங்களில் கொசு ஒழிப்பு மருந்துப் புகை அடிக்கும் செய்திகள் முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. பல இடங்களில் ஒன்றாக ஜாமிஉல் அஸ்ஹரிலும் அடிக்கப்பட்டு்ள்ளது என்பது கவனத்திற்கொள்ளத்தக்கது.
4. Re:... posted byOMER ANAS (DOHA QATAR.)[18 November 2012] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 23907
முதலில், moderator அவர்களுக்கு, தங்களின் தகவலை தமிழர் முத்து இஸ்மாயிலின் கருத்தில் பதிவதற்கு பதிலாக KDN முஹம்மது லெப்பையின் கருத்தில் பதிந்து உள்ளீர்கள் போல் தெரிகிறது.
அப்புறம், அரபு நாட்டில் ஒரு அரபி சும்மா ரோட்டில் நின்று கத்தினாலே போதும் பலதியா (அதான் பஞ்சாயத்து)கலகலத்து போகும். ஆனா நம் நாட்டில் ஒரு ஊரே ஒண்ணா நின்னு கத்தினாலும், ஒரு பய கேட்க மாட்டாங்களே!
நம் நாடு நல்லா இருக்க வேண்டும் என்று எப்பவும் நினைக்கும் அரபிக்கும், எக்கேடாவது நாட்டு மக்கள் கெட்டுப் போகட்டும் நான் மட்டும் நல்லா இருக்கணும் என்று நினைக்கும் நம் நாட்டு மன்னர்களோடு அரபு நாட்டை ஒப்பிட்டு பேசலாமா நண்பர் லெப்பை அவர்களே?
மற்றபடி கொசுப்புகை ஆங்காகே தேவையான இடங்களில் அடிக்கடி அடிக்கிறார்கள். மருந்தில் வீரியம் இல்லையோ என்னவோ, கொசுக்கள் மட்டும் மொத்தமாக கூடி கும்மாளமே அடிக்கிறது. செத்தபாடில்லை!
5. Re:...கொசுத்தொல்லை posted byNIZAR AL (kayalpatnam)[18 November 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 23909
கொசுத்தொல்லைன்னு இததான் சொல்லுவாங்களோ, எப்பா தாங்க முடியல, இரவான எங்கயும் உட்கார முடியல, ஒரே பிடில்தான் வாசகிக்க வேண்டி உள்ளது.
ஆல்அவுட், குடுநயிட், எல்லாம் வாங்கி வச்சாலும் எங்க அடங்குது, கொசுவை அடக்க முடியலைன்னா பாருங்கலேன்.
இதுல வேற மனுசாலை பிரிச்ச மாதிரி, எத்தனை வகை சொல்றாங்க, நல்லதண்ணி கொசு, சேத்து தண்ணி கொசு, மாட்டுகொசு, எப்பா முடியல, டெங்கு வேற வேகமா காலையில் உற்பத்தியாகும் நல்ல தண்ணி கொசுவை அனுப்பி மக்கள் உயிரை காவு வாங்கி வருதுன்னு அரசு சொல்லுது.
என்ன பண்றது மழை காலங்கள் வருவதுக்கு முன்னமே முன்னேசெரிக்கை வேலைகளை நகராட்சி செய்யணும், அனால் பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான் ஸ்பாட்டுக்கே போறாங்க, இந்த கொசு மருந்தயாவது நகராட்சி தீவிர படுதுனா நல்லா இருக்கும், எங்க தெருக்கும் வருமா, இல்ல ஜாமிஉல் அஷர் ரோட நிற்குமா?அணைத்து தெருக்கள், முடுக்குகளில், பொதுஇடங்களில், இதை தீவிர படுத்தினால் கொசுதொல்லையை கொஞ்சம் அடக்கலாம். இம்டிகாணு இருந்துகிட்டு என்னா பெரிய வேலையெல்லாம் இந்த கொசு செய்றதுன்னா பாருங்களேன்.
6. கொசு(று) யோசனைகள்...! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[18 November 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23936
கொசுக்களை தடுக்க ஓர் எளியமையான வழி! மாலை இருட்டுவதற்கு முன் (மஃரிப் வேளை) சுமார் ஒரு மணிநேரம் வீட்டு ஜன்னல் மற்றும் கதவுகளை அடைத்தே வைத்திருக்கவும். நன்கு இருட்டிய பின் திறந்து கொள்ளலாம். இதனால் வெளியிலிருந்து வீட்டிற்குள் தஞ்சம் புக வரும் கொசுக்கள் வழியின்றி மரம் செடி கொடிகளிலேயே தங்கி விடும்.
அப்ப வீட்டுக்குள்ளே இருக்கும் கொசுவை என்ன பண்ணன்னு கேட்குறீங்களா? வெரி சிம்பிள்! ஆல் அவுட், கொசுவர்த்தி போன்றவற்றைப் பயன்படுத்தியதும் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அடைத்து வைத்திருக்கும் அறைக் கதவுகள் ஜன்னல்களைத் திறந்து விடுங்கள். கொசுக்கள் அலறியடித்துக் கொண்டு பறந்து விடும்.
மாலை நேரங்களில் வேப்பை இலைகளை எரித்து அதன் புகையினை வீடு முழுவதும் பரவச் செய்தால் விஷ ஜந்துக்கள், கொசு, பூச்சிகள் குட் பை செல்லி போய் விடும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross