சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், நலத்திட்ட உதவிகளுக்காக ரூ.90,000 நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
உலகெல்லாம் படைத்தாளும் வல்லிறை ஏகன் அல்லாஹ்வின் நல்லருளால்.
ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் (RKWA) 32 வது செயற்குழு மற்றும் விடை பெற்று செல்லும் மூத்த உறுப்பினர் களுக்கு பிரிவு உபசார கூட்டம் கடந்த நவம்பர் 15.11.2012 வியாழன் பின்னேரம் 7 .30 மணியளவில் மன்றத்தின் தலைவர்ஹாஜி M.N.மின்ஹாஜ் முஹிய்யதீன் அவர்கள் இல்லத்தில் மன்றத்தின் முன்னாள் தலைவர் ஹாஜி M .E .L. நுஸ்கி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அல் ஹாபிழ் ஷெய்க் தாவூத் இத்ரீஸ் அவர்கள் திருமறையின் வசந்த வார்த்தைகளை ஓதி துவங்கி வைத்தார்.
தொடர்ந்து M.N. மின்ஹாஜ் அவர்கள் வந்தோரை வரவேற்று நமது ரியாத் மாநகரில் பணிபுரிந்து விடை பெற்று செல்லும் நமது மன்றத்தின் முன்னாள் தலைவர் ஹாஜி N.T. பாதுல் அஸ்ஹாப் (எமது மன்றத்தின் முதலாம் தலைவர்) மற்றும் ஹாஜி S .S .ஷாகுல் ஹமீத் (மூத்த உறுப்பினர்) ஆகியோர்கள் நமது மன்றத்திற்கும், நமதூர் மக்களுக்கும் தமது ஸ்தாபனத்தை, மற்றும் தமது இல்லத்தை எந்த நேரமும் பயன் படுத்தி கொள்ளவும் முகம் கோணாது ஒத்துழைத்தார்கள் என்றும். இவ்விருவரும் நம்மிடம் இருந்து விடைபெற்று காயல் மாநகரில் தொழில் ஸ்தாபனத்தை நடத்த இருக்கிறார்கள். அவர்கள் மேற்கொள்ள இருக்கும் தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் கண்டு எல்லா நலமும் வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்வை உளமார பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து தலைமை உரை ஆற்றிய நுஸ்கி அவர்கள் தமது உரையில் ”நமது காயல் மக்கள் ஒன்று கூடும் கேந்திரமாக சிங்கபூர் பிளாசா மற்றும் டிசைன் பார்க் இருந்ததாகவும். இவ்விரு ஸ்தாபனங்களும் நமக்கு எல்லா வகையிலும் உதவியாக இருந்தது மட்டுமல்ல இவர்களின் இல்லம் பல்வேறு சமயம் நமது மன்ற செயற்குழு மற்றும் ஆலோசனை செய்யும் இடமாகவும் இருந்தது என்றும், இன்று இவ்விருவரும் நம்மிடம் இருந்து விடைபெற்று தாயகம் திரும்புவது நமக்கு ஒரு பேரிழப்பாகும். இருந்த போதிலும் 30 வருடங்களுக்கு மேலாக சவுதி அரேபியாவில் பணியாற்றி தாயகம் சென்று குடும்பத்தினருடன் இருந்து அங்கேயே தொழில் துவங்க இருப்பதை எண்ணி பெருமிதம் அடைகிறோம் என்றும். அவர்கள் மேற்கொள்ளும் தொழில் துறையில் நல்ல அபிவிருத்தி அடையவும், எல்லா நலமும், வளமும் நீண்ட ஆயுளும் பெற்று நீடுழி வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்வை உளமார பிரார்த்திகிறோம் என்று குறிப்பிட்டார்.”
அடுத்து வழமை போன்று நமதூர் வறிய மக்களிடம் இருந்து வந்த கடிதங்கள் வாசிக்கப்பட்டு கீழ் கண்டவாறு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- மருத்துவ வகைக்கு நான்கு பேர்களுக்கு ரூபாய் 80 ,000 /=(எண்பதாயிரம் )
- சிறுதொழில் வகைக்கு ஒரு நபருக்கு ரூபாய் 5 ,000 /= (ஐந்து ஆயிரம் )
- கல்வி வகைக்கு ஒரு மாணவருக்கு ரூபாய் 5 ,000 /= (ஐந்து ஆயிரம் ) ஆக மொத்தம் 90 ,000 /= ஒதுக்கீடு செய்யப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லாப்புகளும் புகழ்சியும்.
நடப்பு ஆண்டு 2012 –ல் இதுவரை எமது அமைப்பின் முலம் 1 மில்லியன் இந்திய ரூபாய் உதவியாக வழங்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த ஆண்டு அதிகபடியான ஒரு இலக்கை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனை செயற்குழு உறுப்பினர்களின் பரந்த மனப்பான்மை மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் கருணை உள்ளத்தினாலேயே எங்களால் எட்ட முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ். இதில் பங்களித்த அனைத்து நல்லுல்லங்களுக்கும் அல்லாஹ்வின் கருணை உண்டாகட்டுமாக. ஆமீன்!
எமது செயற்குழுவின் உறுப்பினர்களான அல்ஹாபிழ். பி.எம். முஹம்மது சர்ஜுன் மற்றும் எஸ்.எம். முஹம்மது லெப்பை ஆகியோர் வேலை நிமித்தம் ரியாதைவிட்டு சென்றதையடுத்து, அவர்களின் இடத்திற்கு அல்ஹாபிழ். ஏஸ்.ஏ.ஸி. அஹ்மது ஸாலிஹ் மற்றும் கே.எஸ். செய்யது சபீயுல்லாஹ் ஆகியோர் சென்ற கூட்டத்தின் அலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய செயற்குழு உறுப்பினர்களுக்கு எங்களின் மனமாற்ந்த வாழ்த்துக்கள்.
தொடர்ந்து மன்றத்தின் உறுப்பினர் ஹாஜி ஹைதர் அலி தனது உரையில் நமது மன்றத்தின் செயல்பாடுகள் சிறப்பாகவும், நேர்த்தியாகவும் இருப்பதாகவும் தம்மால் இயன்ற அளவு மன்றத்தின் செயல் பாடுகளில் பங்கு கொள்வேன் என்றும் தெரிவித்தார். இன்னும் விடை பெற்று செல்லும் மூத்த உறுப்பினர்களின் சேவையை நினைவு கூர்ந்தார். இவ்விருவர்களும் நமதூர் பெண் மக்கள் சிறு தொழில் கூட்டாக செய்ய ஆவன செய்யுமாறும், அதற்கு நமது மன்றம் என்றென்றும் துணை நிற்க வேண்டும் என்ற அன்பான வேண்டுகோளை வைத்தார்.
தொடர்ந்து நமது பொதுக்குழு உறுப்பினர் லால்பேட்டையைச் சார்ந்த அப்துல் நாசர் அவர்கள் நமது மன்றத்தின் சேவை எனக்கு மிகவும் பிடிதிருக்கிறது, எத்தனையோ மன்றங்கள் பொழுது போக்குக்காக மட்டுமே இருக்கிறது. ஆனால் ஊரில் உள்ள வறிய மக்களுக்கு உதவும் மனப்பாங்கு உங்களை போன்ற வாலிப பிள்ளைகளுக்கு இருப்பதை எண்ணி அல்லாஹ்விடம் உங்களுக்காக என்றென்றும் பிரார்த்தனை செய்வதாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டார். எல்லாம் வல்ல அல்லாஹ் விடைபெற்று செல்லும் மூத்த உறுப்பினர்களின் எஞ்சிய காலம் சிறப்பாகவும், சந்தோசமாகவும் அமைய பிரார்த்திகிறேன் என்று வாழ்த்தினார்.
தொடர்ந்து ஹாஜி வாவு கிதுறு முஹம்மது நமது அமைப்பின் செயல்பாடுகளை வாழ்த்தி வரவேற்றார்.
அடுத்து மன்றத்தின் தலைவர் மின்ஹாஜ், விடைபெற்று செல்லும் மன்றத்தின் முன்னாள் தலைவர் ஹாஜி N.T. பாதுல் அஸ்ஹாப் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசும் வழங்கினார் . மன்ற துணை தலைவர் ஹாஜி முஹம்மது நூஹு நமது மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஹாஜி S .S .ஷாகுல் ஹமீது அவர்களுக்கு பொன்னாடை போர்த்தினார். தொடர்ந்து விடை பெற்று செல்லும் ஹாஜி S .S .ஷாகுல் ஹமீது அவர்கள் நன்றி தெரிவித்தார்.
அடுத்து விடை பெற்று செல்லும் ஹாஜி N.T . பாதுல் அஸ்ஹாப் அவர்கள் தமது நன்றயுரையில் ஐந்து ஆறு பேர்கள் இணைந்து ஆரம்பித்த இம்மன்றம் தற்போது இருநூறுக்கும் மேற்பட்ட நமதூர் மக்களை கொண்ட மிகப்பெரும் அமைப்பாக செயல்பட்டு வருவது மிகுந்த வாழ்த்திற்குரியது. நானும் ஷாகுல் ஹமீது அவர்களும் தொழில் ஸ்தாபனம் நடத்தி வந்த காரணத்தினால் ஒரு கூட்டத்திற்கு கூட வரமுடியாத சூழ்நிலை, பொது குழு கூட்டத்திற்கு மட்டும் வந்து தலைகாட்டி விட்டு சென்று விடுவோம் . இந்த செயற்குழு கூட்டத்திற்கு மட்டும் தான் முழுமையாக கலந்து கொள்ள முடிந்தது. இதில் கலந்து கொண்டது மிகுந்த சந்தோசமாக இருக்கிறது.
எவ்வளவு அற்புதமான வேலை, வாலிப பிள்ளகைகள் போட்டி போட்டு நமதூர் வறியவர்களின் துயர் துடைக்கும் பணியில் வாரி வழங்குகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. உங்களை போன்ற எண்ணம் நமதூரில் எல்லா மக்களுக்கும் ஏற்படுமேயானால் நிச்சயமாக அல்லாஹ்வின் துணை கொண்டு எவ்வளவோ சாதிக்க முடியும். ஒரு குறுகிய நேரத்தில் 90 ,000 /= ரூபாய் ஒப்புதல் வழங்கி எல்லாம் வல்ல அல்லாஹ்விடத்தில் நல்ல பெயர் வாங்கி விட்டீர்கள். இதற்கு ஈடு இணை ஏதும் இல்லை. தொடர்ந்து வழிநடத்தி செல்லுங்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் வாழ்வில் வசந்தம் தொடர்ந்து தருவான். நாங்கள் ஊரில் இருக்கும் சமயம் நமது மன்றத்திற்கு எங்களால் முடிந்த எல்லா உதவிகளும் இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து செய்வோம். எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் யாவருக்கும் எல்லா நலமும் வளமும் தந்து நமது மன்றம் என்றென்றும் நமதூர் மக்களுக்கு தொய்வின்றி சேவை ஆற்றிட அருள் புரிவானாக. ஆமீன்! என்று தனது நன்றியுரையில் எடுத்துரைத்தார்.
இறுதியாக செயற்குழு கூட்ட நன்றியுரை, ஹாஜி சம்சுதீன் அவர்கள் வழங்கினார். அல்ஹாபிழ் P .S. J. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் துஆ ஓதி மற்றும் ஸலவாத்து ஓதி கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்குளும், சிறப்பழைப்பாளர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் சுவையான சமூசா, கட்லெட், தம்மடை, நானாகத்தா, மற்றும் சுவையான டீ வழங்கப்பட்டது.
இவ்வாறு, ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
A.H.முஹம்மது நுஹ்
துணைத்தலைவர்
ரியாத் காயல் நற்பணி மன்றம் |