அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் கிளையின் முன்னாள் அவைத்தலைவரும், நடப்பு நிர்வாகிகளுள் ஒருவருமான எம்.எஸ்.எம்.ஷாஃபீ 09.11.2012 அன்று நண்பகல் 12.30 மணியளவில் காலமானார். அன்னாரின் ஜனாஸா, அன்றிரவு 08.00 மணியளவில் காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறைவை முன்னிட்டு, அதிமுக - ஜெயலலிதா பேரவையின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கே.விஜயகுமார், 20.11.2012 செவ்வாய்க்கிழமையன்று (இன்று) காலை 11.30 மணியளவில், காயல்பட்டினம் ஹாஜியப்பா தைக்கா தெருவிலுள்ள அவரது இல்லத்திற்குச் சென்று, அவரது மகனும் - காயல்பட்டினம் அதிமுக நகர நிர்வாகிகளுள் ஒருவரும், நகர்மன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், உறவினர்களான ‘நட்புடன் தமிழன்’ முத்து இஸ்மாஈல், எல்.எம்.இ.கைலானீ உள்ளிட்ட குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது, காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்களான காழி அலாவுத்தீன், ஓடை கண்ணன், அதிமுக ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் ஜி.சேகர், ஒன்றிய முன்னாள் துணைச் செயலாளர் இளந்தளிர் முத்து, ஜெயலலிதா பேரவை ஆழ்வை நகர செயலாளர் எஸ்.கந்தன், நகர அதிமுக நிர்வாகிகளுள் ஒருவரான மீசை மெய்தீன், அதிமுக 06ஆவது வார்டு செயலாளர் எம்.இ.எல்.புகாரீ, 07ஆவது வார்டு செயலாளர் ஹஸன், ஷேக் முஹம்மத், எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ், மாணவரணி ஒன்றிய செயலாளர் ஷாஹுல் ஹமீத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக, சில நாட்களுக்கு முன் காலமான - அதிமுக காயல்பட்டினம் நகர 17ஆவது வார்டு செயலாளர் அலெக்ஸ் பாண்டியன் இல்லத்திற்கும், அதிமுக - தூத்துக்குடி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.விஜயகுமார் இன்று காலை 11.00 மணியளவில் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
[செய்தி திருத்தப்பட்டுள்ளது @ 15:34 / 20.11.2012] |