காயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கையாகிவிட்டது. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.
21.11.2012 அன்று (நேற்று) மாலை 05.50 மணிக்கு பதிவுசெய்யப்பட்ட கடல் காட்சிகள் பின்வருமாறு:-
காயல்பட்டினம் கடற்பரப்பின் 19ஆம் தேதி காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக!
1. நகர் மக்களின் எதிர்ப்பு மட்டுமே இதற்க்கு தீர்வு... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[22 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24018
நகர் மக்களின் எதிர்ப்பு மட்டுமே இதற்க்கு தீர்வு...
வருகின்ற 29 ஆம் தேதி காலை கடை அடைப்பு - மாலை ஆர்ப்பாட்டம் மற்றும் மக்கள் மத்தியில் இரசாயன கழிவுகளின் ஆபத்து குறித்த விழிப்புணர்வு பொது கூட்டம் அறிவித்துள்ள அணைத்து ஜமாஅத் மற்றும் பொதுநல அமைப்புகளுக்கு நன்றி...
நகரில் இரசாயன கொடிய கழிவு நீரால் பாதிக்கப்பட்டு இன்று புற்று நோயால் அவதி பெரும் நோயாளிகளின் நல் துவாவை பெறுவோம்.. வாருங்கள் 29 ஆம் தேதி... நகர் மக்கள் அனைவர்களும் ஒன்றுபட்டு நமது எதிர்ப்பை பதிவு செய்ய 29 ஆம் தேதி தவறாமல் கலந்து கொள்வோம்... இன்ஷா அல்லாஹ்,,
2. கடலின் நிறம் என்ன ? posted byM.S.Kaja Mahlari (Singapore)[22 November 2012] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 24019
வர வர நமதூர் கடலின் நிறம் செந்நிறமாக மாறிவருவது கவலை அளிக்கிறது. கடல் உணவின் மூலம் ஏற்படும் அணைத்து விதமான நோய்களை விட்டும் நம் அனைவரையும் வல்ல அல்லாஹ் பாதுகாப்பானாக!
இப்படியே நிலைமை சென்றுக்கொண்டு இருந்தால் இனி நமதூர் பள்ளிக்கூடத்தில் பரீட்சை பேப்பரில் கடலின் நிறம் நீலம், செந்நிறம் என சாய்ஸ் கொடுக்கப்பட்டு ,டிக் செய்யவும் என சொல்லப்பட்டால் நமதூர் மாணவ,மாணவிகள் கண்டிப்பாக "செந்நிறம்" என்பதை தான் டிக் செய்வார்கள் !
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross