மழைப்பருவத்தையொட்டி, காயல்பட்டினத்திலுள்ள பல இடங்களில் உயர்ந்து வளர்ந்திருக்கும் பன்னீர் பூ மரங்கள் பூத்துக் குலுங்கிய காட்சிகளும், பின்னர் அம்மரங்களில் கம்பளிப் பூச்சிகள் (முசுக்கொட்டைப் புழு) கொத்து கொத்தாக உற்பத்தியான செய்தியும், காயல்பட்டணம்காம் இணையதளத்தில் செய்திகளாக வெளியிடப்பட்டிருந்தன.
காயல்பட்டினம் தீவுத்தெருவில் பொதுமக்களுக்கு பெரும் தொந்தரவளித்துக் கொண்டிருந்த அம்மரத்தை வெட்டலாம் என சிலரும், மருந்தடித்து புழுக்களை ஒழிக்கலாம் என சிலரும் கருத்து தெரிவித்தனர். நிறைவில், மருந்தடிக்கத் தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில், கம்பளிப் பூச்சி ஆக்கிரமித்திருந்த கிளைகளில் மருந்தடிக்கப்பட்டதுடன், மிக அதிகளவில் புழுக்கள் குடியிருந்த மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டுள்ளது.
|