நகரில் தகுந்த இடம் கிடைத்தால், புதிய ஏ.டி.எம். கருவி நிறுவ ஆவன செய்யப்படும் என இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர் குறைகேட்புக் கூட்டத்தில் அதன் மேலாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி காயல்பட்டினம் கிளையின் வாடிக்கையாளர் குறைகேட்புக் கூட்டம், 22.11.2012 வியாழக்கிழமை மாலை 05.00 மணியளவில், வங்கி வளாகத்தில் நடைபெற்றது.
வங்கியின் மூத்த வாடிக்கையாளர்களுள் ஒருவரான ஜெஸ்மின் ஏ.கே.கலீல் முன்னிலை வகித்தார். வங்கி மேலாளர் குணசேகரன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, வாடிக்கையாளர்களின் பல்வேறு கோரிக்கைகளைக் கேட்டறிந்ததோடு, அவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார்.
*** வங்கியின் பெண் வாடிக்கையாளர்கள் பொதுப்பகுதிக்கு வருவதைத் தவிர்க்கும் வகையில், பெண்கள் பகுதியில் திருப்தியான சேவை தரப்பட வேண்டும்...
*** வங்கி அலுவலர்கள் அடிக்கடி பணியிட மாற்றம் செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்...
*** பழுதடைந்துள்ள ஜெனரேட்டர் விரைவில் சரிசெய்யப்பட வேண்டும்...
*** வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குப் புத்தகங்களைப் பாதுகாத்து வைத்து, அவர்கள் கேட்கும்போதே கொடுக்கப்பட வேண்டும்...
*** வங்கியின் பணப்பரிமாற்றத் தேவைக்கான அனைத்து வகைப் படிவங்களும் வாடிக்கையாளர்களுக்கு எளிதில் கிடைக்கும்படி வைக்கபட வேண்டும்...
*** வங்கி வளாகத்திற்கும், ஏ.டி.எம். கருவிக்கும் காவலர் நியமிக்கப்பட வேண்டும்...
*** பணப் பரிமாற்றம் நடைபெறும் அனைத்து கவுண்டர்களிலும் பணம் எண்ணும் கருவி இருக்க வேண்டும்...
*** 6 மாதங்களுக்கொருமுறை நடைபெறும் இந்த வாடிக்கையாளர் குறைகேட்புக் கூட்டம் முற்கூட்டியே அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் - ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்கப்பட வேண்டும்...
*** Online Banking வசதி குறித்த விரிவான தகவல்கள் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்...
*** நகரின் இதர பகுதிகளிலும் ஏ.டி.எம். கருவி நிறுவப்பட வேண்டும்...
என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இக்கூட்டத்தில் வாடிக்கையாளர்களால் முன்வைக்கப்பட்டது.
அவற்றுக்கு விளக்கமளித்து வங்கி மேலாளர் குணசேகரன் பேசுகையில்,
*** தற்போது வங்கியில் போதிய அளவுக்கு அலுவலர்கள் இல்லாத காரணத்தால் பெண்கள் பகுதியில் சில நேரங்களில் சேவை தடைபடுகிறது...
வாடிக்கையாளர் குறைகேட்புக் கூட்டம் வங்கி வளாகத்தில் அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது... எனினும், இனி வருங்காலங்களில் உள்ளூர் ஊடகங்கள் வாயிலாகவும் அறிவிக்க ஆவன செய்யப்படும்...
*** ஆன்லைன் பேங்கிங் வசதி குறித்த தகவல்கள் விரைவில் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைக்கப்படும்...
*** கடைகள் அமைந்துள்ள பகுதிகளில், பாதுகாப்பான இடம் கிடைத்தால், அங்கு ஏ.டி.எம். கருவி நிறுவ ஆவன செய்யப்படும்...
என்று தெரிவித்தார். இக்கூட்டத்தில், வங்கி வாடிக்கையாளர்களும், அலுவலர்களும் திளராகக் கலந்துகொண்டனர்.
|