காயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கையாகிவிட்டது. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.
24.11.2012 அன்று (இன்று) நண்பகல் 12.00 மணிக்கு பதிவுசெய்யப்பட்ட கடல் காட்சிகள் பின்வருமாறு:-
காயல்பட்டினம் கடற்பரப்பின் 23ஆம் தேதி காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக!
1. துல்லியமாக கண்காணித்து வரும் அருமை சகோதரர்களுக்கு பாராட்டுக்கள்.. posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[24 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24085
தினமும் காயல்பட்டினம் கடற்பரப்பின் காட்சிகளை துல்லியமாக கண்காணித்து வரும் அருமை சகோதரர்களுக்கு பாராட்டுக்கள்.. அவர்கள் ஒருக்கிணைத்து நடத்தும் கடை அடைப்பு, ஆர்ப்பாட்டம், மற்றும் விழிப்புணர்வு பொது கூட்டம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்...!
DCW தொழிற்சாலையின் அமில கழிவுகள் நமது கடற்பரப்பில் கலக்காத மாற்று ஏற்பாட்டை இந்த ஆர்பாட்டத்தின் மூலம் பயன் பெற நாம் அனைவர்களும் கலந்து கொள்வோம்... வெற்றி அடைவோம்...
2. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[24 November 2012] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24088
மக்கள் அனைவர்களும் DCW ஆலைக்கு எதிராக திரும்பி விட்டார்கள், ஆர்ப்பாட்டம் என்று அறிவிப்பும் கொடுத்து விட்டார்கள், இப்படி பரபரப்பாக இருக்கும் சூழ்நிலையில் கூட, கொஞ்சமாவது கட்டுப்பாட்டுடன் நடக்காமல், ஆலைக்கழிவுகள் மீண்டும் மீண்டும் திறந்து விட்டுக்கொண்டே இருக்கின்றார்கள் என்றால், எவ்வளவு மனஅழுத்தம்.
யாராலும் ஒரு ஆணியைக்கூட புடுங்க முடியாது என்ற இறுமாப்பு. மக்களே ஒற்றுமைதான் பலமே.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross