இம்மாதம் 24, 25 தேதிகளில் (சனி, ஞாயிறு) முஹர்ரம் 09ஆம், 10ஆம் நாட்கள் என்பதால், அந்நாட்களில் முஸ்லிம்கள் பலர் நோன்பு நோற்றனர்.
அதனடிப்படையில், இன்று ஆஷூறா இரண்டாம் நாள் நோன்பு நோற்றவர்களுக்காக, காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக்கல்லூரி வளாகத்தில், இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில், மஹ்ழரா அரபிக்கல்லூரியின் செயலாளர் ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூதல்ஹா, துணைச் செயலாளர் ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல், கணக்குத் தணிக்கையாளர் ஹாஜி எம்.கே.முஹ்யித்தீன் தம்பி துரை, ஹாஃபிழ் எஸ்.எல்.ஷெய்கு அப்துல் காதிர், காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் தலைவர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை உள்ளிட்டோரும், கல்லூரியின் ஆசிரியர்கள் - மாணவர்களும் திரளாகக் கலந்துகொண்டு நோன்பு துறந்தனர். அவர்களுக்கு நோன்புக் கஞ்சி, வடை, பேரீத்தம்பழம், குளிர்பானம் உள்ளிட்ட பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.
இஃப்தார் ஏற்பாடுகளை, கல்லூரியின் செயற்குழு உறுப்பினர் ஹாஜி சாளை முஹம்மத் அப்துல் காதிர் செய்திருந்தார்.
கள உதவி:
M.W.ஹாமித் ரிஃபாய் |