இம்மாதம் 24, 25 தேதிகளில் (சனி, ஞாயிறு) முஹர்ரம் 09ஆம், 10ஆம் நாட்கள் என்பதால், அந்நாட்களில் முஸ்லிம்கள் பலர் நோன்பு நோற்றனர்.
அதனடிப்படையில், 25.11.2012 ஞாயிற்றுக்கிழமையன்று ஆஷூறா இரண்டாம் நாள் நோன்பு நோற்றவர்களுக்காக, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் - அதன் நிறுவனரும் - ஆலோசகருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் இல்லத்தில் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அனைவருக்கும் நோன்புக் கஞ்சி, வடை வகைகள், பேரீத்தம்பழம், குளிர்பானம் உள்ளிட்ட பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், ஆஷூரா நோன்பு நோற்ற மன்ற உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். முன்னதாக, வழமை போல ஹாஃபிழ் உறுப்பினர்களின் திருக்குர்ஆன் மனன மீள்பார்வை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தகவல் & படங்கள்:
ஹாஃபிழ் M.A.K.செய்யித் இஸ்மாஈல்
துணைக்குழு உறுப்பினர்,
காயல் நல மன்றம், சிங்கப்பூர். |