இந்திய தொடர்வண்டித் துறையின் புதிய ஆணையின்படி, தொடர்வண்டி முன்பதிவு பெட்டியில் தட்கல் முறையில் பயண முன்பதிவு செய்வோர், தமது பயணத்தின்பொழுது - முன்பதிவுக்காக சமர்ப்பித்த அடையாள அட்டையின் அசல் பிரதியைக் காண்பிக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது போல, (I Ac, II Ac, 3 Ac, SL, Fc உள்ளிட்ட) பொது முன்பதிவு சீட்டுகளுக்கும் - வரும் டிசம்பர் மாதம் 01ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தொடர்வண்டியில் முன்பதிவு செய்து பயணம் செய்வோர், தொடர்வண்டித் துறை அறிவித்துள்ள அடையாள ஆவணங்களுள் ஒன்றின் அசல் பிரதியை பயணத்தின்போது காண்பிக்க வேண்டும் என்றும், முன்பதிவில்லாத (unreserved) பயணச்சீட்டுகளுக்கு இந்நடைமுறை பொருந்தாது என்றும் தொடர்வண்டித்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் நலன் கருதி இத்தகவலை, காயல்பட்டினம் அல்அமீன் இளைஞர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். |