வரும் டிசம்பர் மாதம் 18ஆம் தேதியன்று பொது மருத்துவ இலவச முகாமை - ஷிஃபா சிறப்பு மருத்துவமனை மற்றும் கே.வி.ஏ.டி. அறக்கட்டளை இணைந்து காயல்பட்டினத்தில் நடத்திடுவதென அதன் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கே.வி.ஏ.டி. அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
பேரன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மர்ஹூம் கே.வி.ஏ.டி. புஹாரி ஹாஜி அவா;களின் நினைவு தினமான டிசம்பர் 18 அன்று கடந்த 8 ஆண்டுகளாக, இலவச கண் மருத்துவ முகாம், பொது மருத்துவ முகாம், புற்று நோய் மருத்துவ முகாம், இருதய நோய் மருத்துவ முகாம் மற்றும் இலவச சீருடை வழங்குதல், பசுமை புரட்சியை ஏற்படுத்தும் வகையில் பள்ளிகூடங்கள், மருத்துவமனைகள், அனாதை நிலையம், சாலை ஓரங்களில் “மரம் நடுதல்”, மருத்துவமனைகளில் நோயாளிகளை சந்தித்து சுகம் விசாரித்து நலன்பெற துஆ செய்து, சத்தான ஆகாரங்களை வழங்குதல், பள்ளி படிப்பை தொடர முடியாதவர்களை கண்டறிந்து தொடர்ந்து படிப்பதற்கு கல்வி உதவி வழங்குதல் எல்லா சமய மக்களோடும் இணங்கி வாழும் வகையில் சமய நல்லிணக்க நிகழ்ச்சிகளை நடத்தி சிறந்த நல்லிணக்கவாதிகளை தெரிவு செய்து ஒவ்வொரு ஆண்டும் கவுரவித்தல், அன்னதானம் வழங்குதல் மருத்துவ உதவிகள் மற்றும் உபகாரணங்கள் வழங்குதல் போன்ற செயல்திட்டங்களை ஜாதி மத பேதமின்றி தெடா;ந்து செய்து வருகின்ற எம் கே.வி.ஏ.டி. அறக்கட்டளையின் சார்பாக, இன்ஷாஅல்லாஹ் வருகிற டிசம்பர் 18 அன்று நமது காயல் மாநகரில் எல்.எஃப். ரோட்டில் அமைந்துள்ள ஷிஃபா சிறப்பு மருத்துவமனையில் வைத்து மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாம் சம்பந்தமாக 19-11-2012 திங்கள் கிழமை இரவு 9 மணியளவில் ஷிஃபா மருத்துவமனை வளாகத்தில் கே.வி.ஏ.டி. அறக்கட்டளை செய்தி தொடர்பாளர் மன்னர் பாதுல் அஸ்ஹாப் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஷிஃபா மருத்துவமனை பொறுப்பாளர் எம்.எல்..செய்து இபுராகிம் ஏ.தமிமுல் அன்சாரி, அக்பர், கே.வி.ஏ.டி. அறக்கட்டளை மேலாளர் ஆஷிக், முஹம்மது புகாரி, செய்கு அலி, அப்துற் ரஜாக், அப்துற் ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நடைபெற உள்ள பொது மருத்துவ முகாமில், வாசன. கண் மருத்துவமனை மருத்துவர்களால் கண் சிகிச்சை முகாம், பல் மருத்துவம், குழந்தை நல மருத்துவம், தோல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், சர்க்கரை நோய், இருதயம் சம்பந்தபட்ட நோய், எலும்பு, மூட்டு சிறப்பு மருத்துவம், பொது மருத்துவம் போன்ற முகாம்கள் சிறந்த மருத்துவ நிபுணர்களால் நடத்தபடவுள்ளது.
இம்முகாமில் சர்க்கரை நோய் பரிசோதனை, இ.என்.டி., இரத்தகொதிப்பு மற்றும் இரத்தப் பரிசோதனை இலவசமாக செய்யப்பட உள்ளது. இம்முகாமில்,
டாக்டர் சரவணன், டாக்டர் ஜெயராம், டாக்டர் அய்யம் பெருமாள், டாக்டர் ரவிசங்கர், டாக்டர் சந்தான கிருஷ்ண குமார், டாக்டர் சுரேஷ் மில்லர், டாக்டர் தாமஸ் கிங்ஸ்லி, டாக்டர் மாலி சந்திரசேகர் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் பரிசோதனைகள் மேற்கொள்ளவுள்ளனர்.
பொதுமக்கள் இம்முகாமை பயன்படுத்திக் கொள்ள கே.வி.ஏ.டி. அறக்கட்டளை உங்களை அன்புடன் வேண்டுகிறது.
மேலதிக விபரங்களுக்கு, எம்.எல்.செய்யது இபுராகிம் (9442307251), ஆஷிக் (9865855070), மன்னர் பாதுல் அஸ்ஹாப் (9842790176) ஆகியோரைத் தொடர்புகொண்டு கேட்டறியலாம்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |