Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:55:11 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9706
#KOTW9706
Increase Font Size Decrease Font Size
வியாழன், நவம்பர் 29, 2012
DCW ஆலையின் அத்துமீறலுக்கெதிரான போராட்டம்! முழு கடையடைப்பு காரணமாக நகரே வெறிச்சோடிக் கிடக்கிறது!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5947 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (17) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையின் சில பகுதிகளை மூடுமாறு, தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பரிந்துரை செய்தும், இதுவரை அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்தும், அரசின் மாசு கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையைக் கண்டித்தும், அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் ஊர் நலக் கமிட்டியினர் ஆதரவுடன்,

29.11.2012 வியாழக்கிழமையன்று (இன்று), காயல்பட்டினத்தில் ஒருநாள் அடையாள முழு கடையடைப்பு நடத்திடவும், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் அன்று மாலை 04.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டமும், இரவு 07.00 மணிக்கு பொதுக்கூட்டமும் நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், காயல்பட்டினத்தில் இன்று அரசு நிறுவனங்கள், மருந்துக் கடைகள், பால் கடைகள் உள்ளிட்ட ஒரு சிலவற்றை நிறுவனங்களைத் தவிர அனைத்துப் பகுதிகளிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. நகர் முழுக்க சுமார் 6 கடைகளும், ஓரிரு நடைபாதைக் கடைகளும் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. எல்.கே.மேனிலைப்பள்ளி அருகிலுள்ள காயல்பட்டினம் நகராட்சி தினசரி சந்தை, பரிமார் தெருவிலுள்ள மீன் சந்தை உள்ளிட்ட சந்தைகள் முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ளன.

பேருந்துகள் வழமை போல் இயங்கின. அவசரத் தேவைகளுக்காகவே தவிர ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. பள்ளி - கல்லூரிகள் வழமைபோல் இயங்குகின்றன. அவற்றின் வாகனங்களும் எவ்வித இடர்பாடுகளுமின்றி இயக்கப்பட்டது.

இன்றைய கடையடைப்பு காரணமாக வணிக நிறுவனங்கள் நிறைந்துள்ள காயல்பட்டினம் பிரதாத வீதி, கூலக்கடை பஜார், எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, ஸீ-கஸ்டம்ஸ் சாலை, கே.டி.எம். தெரு, விசாலாட்சியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பரபரப்பான பகுதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. மக்கள் ஆங்காங்கே கூட்டங்கூட்டமாக நிற்கின்றனர். கடையடைப்பு காட்சிகள் பின்வருமாறு:-









































































































































கள உதவி:
A.S.புகாரீ


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Muhsin Kamil (Chennai) [29 November 2012]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 24185

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் முயற்சியில் வெற்றி கிடைக்க உதவி செய்வானாக ஆமீன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...காயல் பந்த்
posted by YMSaleh (Makkah) [29 November 2012]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24191

மாஷா அல்லாஹ், இந்த காயல் பந்திற்கு ஒத்துழைத்த அணைத்து வியாபாரிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by MAC.Mujahith (Mumbai) [29 November 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 24192

இதோ நான் கிளம்பி விட்டேன் ஜனாதி பதிக்கும், பாரத பிரதமருக்கும் மற்றும் தமிழக முதலமைச்சருக்கும் DCW பிரச்னை பற்றி Telegram தந்தி அனுப்ப..."

காயல் வெளி நாடு மற்றும் வெளி ஊரில் வசிக்கும் காயலர்கலே நீங்கள் கிளம்பி விட்டீர்களா...?

Hurry Up .." Hurry Up .."

By -MAC .முஜாஹித்
மும்பை
29 -11 -2012.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. விழிப்புணர்வின் மகத்தான சாட்சி!
posted by kavimagan (qatar) [29 November 2012]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 24193

உறங்கும் வீதிகளின் காட்சி
விழிப்புணர்வின் மகத்தான சாட்சி!

ஆட்கொல்லி அன்னியர்கள்
அச்சடித்த நோட்டில் புரள்வதற்கு
நாமேன் உண்ணவேண்டும் நச்சுக் கழிவை?

அமிலம் கலக்கும் ஆலை நிர்வாகமே!
வங்கக்கடலை செங்கடலாக்கும்
உங்கள் கனவினி தொடராமல்
பொங்கும் எங்கள் மக்கள் சக்தி
பொசுக்கும் உன்னை மறவாதே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. மாஷா அல்லாஹ்.
posted by Mohamed Salih (Bangalore) [29 November 2012]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 24195

மாஷா அல்லாஹ்..

எல்லாம் வல்ல இறைவனின் துணை கொண்டு மிக ஆழகாக நடை பெற்று கொண்டு இருக்கிறது இந்த மாபெரும் போராட்டம் ..

என்னக்கு சின்ன டவுட் அது என்ன முபீன் கோழி கடை மட்டும் திறந்து இருக்கிறது ...

வெளி ஊரில் இருக்கும் எங்களுக்கு இந்த போட்டோ பார்க்கும் போது நாங்களும் கலந்து கொண்டது போல் இருக்கிறது ...

எல்லாம் வெற்றி பெற வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன் இன்ஷா அல்லாஹ் ..

என்றும் அன்புடன் ,
பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் ஸாலிஹ் . கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Focus on Things That'd hurt DCW
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [29 November 2012]
IP: 103.*.*.* India | Comment Reference Number: 24200

Masha Allaah, good to see the concerted efforts by KEPA and others. May Allaah shower His blessings upon you, your family and business.

These are emotional days. At the same time, we need to focus on things that hurt the violators (i.e. DCW).

1. As Dr. D MOHAMED KIZHAR suggested (Comment Reference Number: 24143), we should contact ENVIRONMENTAL IMPACT ASSESSMENT agency. Dr. Kizhar, please let us know how to contact them. (I am not sure of benefits of telegraming the President. If anyone thinks it'd be useful, please share your thoughts)

2. Comment Reference Number: 24150. The suggestion (Loss of Ecology (Prevention and Payments of Compensation)) from Kona AbuBakr & Bros is a good one too.

By focusing on things that hit them directly, we can achieve some quick successes, by the Will of Allaah.

Finally, let's not forget the MOST POTENT WEAPON OF A BELIEVER: DU'AA. Ask Allaah.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. யாரை ஏமாற்ற பார்கிறீர்கள்?
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [29 November 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24201

தயவு செய்து கல கல வென்றிக்கும் கூலைக்கடைபஜார் போன்ற பல பஜார்களுடைய காயல்பட்டணத்தை காட்டுங்கள்.

காயலர்கள் நடமாடும் நாங்கள் பார்த்திராத இடங்களை படம் பிடித்து பைத்தியமா விளையாடுகிறீர்கள்! அந்த அளவிற்கு எங்கள ஊரை தெரியாத பேக்கர்களா நாங்கள்!
உரிமையுடன் கலாய்க்கும்,
முஹம்மது ஆதம் சுல்தான் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by izzadeen (chennai) [29 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24209

more photos, small villege, all tyhe best.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. May Almighty Allah bless us
posted by m.a. seyed ahamed(vilak) (hong kong) [29 November 2012]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 24210

May Almighty allah bless our kayal people success for this great effort


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. சரியாக ஒருவருடத்தில்!!!!!!
posted by Habeeb Mohamed Nasrudeen (Qatar) [29 November 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 24211

கலக்டர் ஆபீஸில் கலந்தாய்வு கூட்டம் (29 .11 .2011 ) நடந்து சரியாக ஒருவருடத்தில் (29 .11 .2012 ) இந்த கண்டனபோராட்டம் நடைபெறுகிறது. போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [29 November 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24213

அஸ்ஸலாமு அலைக்கும்

மாஷா அல்லாஹ்.....தங்களின் ஒவ்வொரு போட்டோவையும் ரொம்பவும் நிதானத்துடன் பார்த்து ரசித்தேன் ....நம் ஊரையே எம் கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள்....பாராட்டுக்கள் .....இவ்வளவு சீக்கிரமாகவே பந்து ...போட்டோவை தந்தமைக்கு நன்றி ........

இருப்பினும் தாங்கள் மத்திய காயல் ....பக்கம் கொஞ்சம் போட்டோவை கொண்டு செண்டு இருக்கலாம் ....அந்த பகுதிலும் நிறையவே ...சின்ன ....சின்ன ...குட்டி பஜார்கள் ...பொது மக்கள் அதிகம் கூடும் பகுதி உள்ளது ........

நம் ஊர் வணிகர்களும் சரி ....நம் ஊர் பொது மக்களும் சரி ....( பந்தை ) கடை அடைப்பை ...நல்ல முறையில் தான் ...நடத்தி காட்டி விட்டீர்கள் ....THANK'S .. வெற்றி நம் பக்கமே.....

இந்த பந்தை நாம் பார்க்கும் போதே ...நம் போராட்டதின் ஒரு பகுதி நமக்கு முழு வெற்றிதான் கிட்டியது என்றே கூறலாம்....

இன்று நடக்க கூடிய பொது கூட்டதிலும் நமக்கே வெற்றி கிடைக்கும் ....தாங்கள் இன்று இரவு நடக்க கூடிய பிரச்சார பொது கூட்ட....முழு ..வீடியோ கிளிப்பை தருவீர்கள் என்றே நாங்கள் முழு நம்பிக்கையுடன் காத்து உள்ளோம்..............

மக்களே இந்த பொது கூட்டத்துக்கு...படையென ...அலையென ....திரண்டு செல்லுங்கள் .....வல்ல இறைவன் நம்மோடுதான் இருக்கிறான்....

இந்த போராட்டத்தை நம் தமிழக அரசு அதிகாரிகள் பார்த்தாவது. நம் ஊருக்கு நல்லது செய்வார்கள் என்று நம்புவோமாக......நம் ஊர் மக்களை காப்பாற்றுவது ....இனி நம் கையில் தான் உள்ளது ...இனியும் நாம் '' காலம் தாழ்த்தாது '' நம் ஒவ்வொரு போராட்டத்தையும் விரிவு படுத்த வேணும் .

இந்த நாசமா போன >>> D.C.W. <<< தொழிற்சாலையை இழுத்து மூடாத வரையில் நாம் ஓயவே கூடாது.......

நம் தமிழக மீடியாக்கள் இந்த கடை அடைப்பை ''ஒளிபரப்பினார்களா ?? என்ன ....நமக்கு மீடியாவின் முழு ஒத்துழைப்பு கண்டிப்பாகவே தேவை.......

நாம் ஒரு இலக்கை அடைய வேணும் ....என்றால் நிச்சயமாகவே மீடியாக்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவை .......அந்த ஒத்துழைப்பு இருப்பின் ..100 % வெற்றி நமக்கே............. வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by kulam.kabeer (chennai) [29 November 2012]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 24216

Assalamu Alaikum

Masha Allah! Its very nice to see the whole hearted support from the belongings of kayalpatnam for our future welfare. May allah keep as united untill we get succeed.Finally many congrats to the KEPA and all who been a part in today's activity and i hope this would be the start but not an end....!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...இந்த வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்.
posted by OMER ANAS (DOHA QATAR.) [29 November 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 24218

நிச்சயம் இந்த வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்.
இப்படை தோற்றால் எப்படை இதை வெல்லும்?
நீதிக்கு இது ஒரு போராட்டம்

இன்று இல்லை என்றாலும் எங்களை நாளைய சமுதாயம் நிச்சயம் பாராட்டும்.

வீணா வெங்காய கடை திறந்து இருக்கே என்று யாரும் இகழ வேண்டாம். சிலருக்கு விபரம் போய் சேராமல் இருக்கலாம். இதையே காரணமும் காட்ட வேணாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by Cnash (Makkah) [29 November 2012]
IP: 84.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24224

மாஷா அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by AM.NOORMOHAMEDZAKARIYA (KAYALPATNAM) [29 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24225

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு !ஆம் ! ஒற்றுமையுடன் ஒன்றுபட்டால் உண்டு வெற்றி !!எனவே ஒற்றுமை எனும் கையிற்றை பற்றிப் பிடிப் போம் !!! வெற்றிக் கனியை எட்டி பிடிப் போம் !!!! சுற்றுப் புரத்தை பாதுகாத்தே தூய்மையான நகரை உருவாக்க என்றென்றும் துணை நிற்போம்.இன்ஷா அல்லாஹ் !!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. DCW வுக்கு மக்கள் கொடுத்த பேதி மருந்து...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [29 November 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24233

முதலில் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

காலை 5 மணிக்கு துவங்கி 6;30 மணிக்கெல்லாம் பளபளவென பொழுது விடியும் போதே பரபரப்போடு இயங்கி.மதியம் 2 முதல் 4 மணிவரை சற்று ஓய்வு எடுத்து மீண்டும் மாலை 5:30-ல் இருந்து இரவு 11 மணி வரை களைகட்டும் காயல்பட்டினமா இது? ஓய்ந்த வீதிகளும், ஆளாரவாரமில்லாத தெருக்களும், மயானத்தின் அமைதியும், இன்று என்ன சூரிய கிரகணமா? மக்கள் வெளியில் வர அச்சப்படுகின்றனர்? எனும் அளவிற்கு இதுநாள் வரை காயல் காணாத வெரிச்சோடல்! ஒரு ஊரே புலம் பெயர்ந்து போய்விட்டதோ? எனத் தோன்றும் காட்சிகள்! கடையடைப்பு பல கண்டுள்ளோம். காயலையே அடைத்து வைத்த காட்சியை நாங்கள் இன்று தான் காண்கின்றோம்!

ஒட்டுமொத்த ஊரார்களின் உள்ளக் குமுறல்களை வெளிபடுத்திய விதம் அபாரம்! எவன் வீட்டில் இழவு விழுந்தால் நமக்கென்ன? எனும் மனோபாவம் மக்களிடத்தில் கிஞ்சிற்றும் இல்லை என்பதை காயல்மாநகரத்தின் அனைத்து சமுதாய நன்மக்களும், வியாபாரி பெருமக்களும், ஓட்டுநர், உழவர், வித்தகர், விற்பன்னர் என அத்தனை பேரும் இக் கடையடைப்பு மூலம் DCW எனும் உயிர்க்கொல்லி அரக்கனின் கன்னத்தில் செருப்பால் அரைந்திருக்கின்றனர். இதைவிடக் கடுமையான வாசகம் எனக்குத் தோன்றவில்லை!

சுற்றுவட்டாரங்களில் படிப்பறிவில்லாத பாமர மக்களின் பாழாய்ப்போன இயலாமையை பயன்படுத்திக்கொண்டு அவர்களில் சிலருக்கு வேலை. சிலருக்கு அலங்கார பதவி (ஒரு மண்ணுக்கும் உதவாது) பாமரர்களுக்கு எலும்புத்துண்டு என தன்னை சிலாகித்துக் கொண்டு சர்வாதிகார தோரணையில் தன் உற்பத்திகளை மாற்றியும், பெருக்கியும் கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் குஜராத் குபேரனே? இங்குள்ள குசேலர்களின் விலைமதிக்க இயலாத இன்னுயிரை நீ விலை பேசிக் கொண்டிருக்கின்றாய்!

அன்று, கண் எரிச்சல் ஏற்பட்டாலும், கன்றுக்குட்டி செத்தாலும் “அட! கெமிக்கல்லெ ஏதோ திறந்து விடுறாங்க” என பொறுத்துப் போன எம் மூதாதையர்களுக்கு உன் வீரியம் தெரியாமலேயே போய்ச் சேர்ந்துவிட்டனர்.

இன்று, அந்த சத்தியவான்களின் சந்ததியினரான சிங்கக்குட்டிகள் காயல்பதியில் கல்வியறிவு, சிந்தனை ஆற்றல், சீர்தூக்கிப்பார்க்கும் தன்மை, திறமை என எங்கள் இளைய சமுதாயம் வேரூன்றிய விருட்சமாய்த் தழைத்து நிற்கின்றது. உனது பம்மாத்து வேலைகளும், மாமிச உணவு சாப்பிட்டதால்தான் ஆரோக்கியம் கெடுகின்றது எனும் பாசாங்கு சூழ்ச்சிகளும் இனி எம் மக்களிடம் பலிக்காது. எங்க பாஷையிலெ சொன்னா “நோண்டி நொங்கெடுத்துடுவாங்க”.

உன் வளர்ச்சியில் அல்லது உன் வருமானத்தில் எமக்கு பொறாமையில்லை! நீ எங்கள் மக்களின் சுவசத்தை உறிந்து உயிர்வாழ்கின்றாய்! நீ விடும் விடும் விஷ மூச்சு, உன் உடல் வெளியேற்றும் விஷக்கழிவு எம் மண்ணில் காற்றிலும் கடலிலும் கலந்து எங்கள் மனித வளம், கடல் வளம், மீன் வளம், நிலத்தடி நீர் வளம், இப்படி ஏகப்பட்ட வளமான வளங்களை மென்று விழுங்கி ஏப்பம் விட்டு கொண்டிருக்கின்றாய்.

உன் செமியாக்குணத்திற்கு (செரிமானத்திற்கு) கொடுக்கப்பட்ட பேதி மருந்து தான் இன்றைய ஆர்ப்பாட்டமும், கடையடைப்பும். இனியும் இத்தகைய விஷக்கழிவுகளை வெளியேற்ற முற்பட்டால் இனி நாங்கள் கொடுக்கும் மருந்து பேதி மருந்தாக இருக்காது. உணர்ந்து கொள்!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by MUHSIN (Hong Kong) [30 November 2012]
IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 24262

மாஷா அல்லாஹ் ! கடை அடைப்பு வெற்றியாக நடைபெற்றதை படத்தில் கண்டு பெர்மிதம் அடைந்தோம். படங்களை பார்க்கும்போது நமது ஊர்தானா என்கின்ற சந்தேகம் வந்துவிட்டது. படங்களில் எந்த எந்த தெரு என்று குறிப்பிட்டு இருந்தால் மிக்க உதவியாக இருந்திருக்கும்.

உங்களது இந்த முயற்சிக்கு கூடிய விரைவில் பலன் கிட்டடுமாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved