Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:44:54 PM
ஞாயிறு | 18 மே 2025 | துல்ஹஜ் 2117, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4112:2003:4106:3507:47
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்05:58Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:25
மறைவு18:30மறைவு10:28
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4305:0905:36
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5219:1819:44
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9705
#KOTW9705
Increase Font Size Decrease Font Size
வியாழன், நவம்பர் 29, 2012
DCW ஆலையின் அத்துமீறலுக்கெதிரான போராட்டம் தொடர்பாக அந்த ஆலையின் ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் - அலுவலர்கள் அறிக்கை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5518 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (31) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 5)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையின் சில பகுதிகளை மூடுமாறு, தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பரிந்துரை செய்தும், இதுவரை அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்தும், அரசின் மாசு கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையைக் கண்டித்தும், அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் ஊர் நலக் கமிட்டியினர் ஆதரவுடன்,

29.11.2012 வியாழக்கிழமையன்று (இன்று), காயல்பட்டினத்தில் ஒருநாள் அடையாள முழு கடையடைப்பு நடத்திடவும், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் அன்று மாலை 04.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டமும், இரவு 07.00 மணிக்கு பொதுக்கூட்டமும் நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தைத் தொடர்புபடுத்தி, “DCW-ல் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள்” என்ற பெயரில் அறிக்கை ஒன்று பொதுப்பிரசுரமாக பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளது:-




Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by M.S.ABDULAZEEZ (H K) [29 November 2012]
IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 24177

மூளை சலவை செய்யப்பட்ட மிக தெளிவான குழப்பம்...? எல்லாம் அறிந்த அல்லாஹ் நம்யாவர்களையும் பாதுகாத்து உண்மையை நம் யாவருக்கும் அரிய செய்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. சும்மா டென்ஷனை ஏத்தாதீங்க...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [29 November 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24179

ஆடு நனைகின்றதே என்று ஓநாய் அழுத கதையாக உள்ளது.

கை நிறைய சம்பளமும், வாரிசுகளுக்கு வேலையும் வாங்கி வாழ்நாள்தனை அர்பணம் செய்து ஓய்வு பெற்று நிம்மதியாக இருக்கும் முன்னாள் ஊழியர்களின் பெயரில் வெளியிடப்பட்ட இவ்வறிக்கையில் பல வேடிக்கையும் விநோதங்களும், குத்தலும் குடைச்சலும் பரிவட்டமாகத் தெரிகின்றது.

ஆலை உங்களுக்கு வேண்டுமானால் சோறு போடலாம். எம் மக்களை கூறு போட்டு வருகின்றது. கழிவுகளை எங்கள் பகுதியில் உள்ள கடலில் கலப்பதால்தான் பிரச்சனையே! சந்தடி சாக்கில் காவி சிந்தனையை கலந்துள்ளது (கலக்குறது தான் காலா காலமாக கை வந்த கலையாயிறே) மாமிச உணவு சாப்பிட்டதால்தான் கான்ஸர் வருகின்றதாம். சரி இனி நான் பதில் சொன்னா டென்ஷனாயிடுவேன்.

ஒவ்வொரு கேள்விக்கும் சுத்தியலை திருப்பிப் போட்டு ஆணியப் புடுங்கின மாதிரி கருத்தாளர்கள் பதில் சொல்லுவார்கள் அவர்களுக்கு வழி விட்டு அடியேன் ஒதுங்கிக் கொள்கின்றேன்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by salai s nawas (singapore) [29 November 2012]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 24180

ஓய்வு பெற்ற தொழிலாளர்களே !!! (நீங்கள் இதை படிக்க நேர்ந்தால்)

இது நீங்களா எழுதியதா அல்லது எழுத வைக்கபடீர்களா? என்பதை எங்கே முதலில் தெரியபடுந்துங்கள்.

" இன்று மிருகங்களுக்கு வருகின்ற வருகின்ற வியாதிகளை பார்க்கும் பொது நான் உண்ணும் அசைவ உணவே ஆபத்தானதுதான் " நீங்கள் எங்கே வருகின்றீர்கள் என புரிகிறது. ஏன் மிருங்கங்களுக்கு வியாதி வருகிறது, DCW போன்ற chemical factory இல் இருந்து வரும் கழிவுகள்தான் மிருகங்கள் சாப்பிடும் புற்கள், குடிக்கும் தண்ணீர் சுவாசிக்கும் காற்று எல்லாவற்றையும் மாசி படுத்தி வருகின்றதே, அதனால்தான் மிருகங்களுக்கும் வியாதி வருகிறது. யோசித்து பாருங்கள், அப்போ சைவ உணவாளர்களுக்கு புற்றுநோய் வருவதில்லையா? பல குடும்பங்கள் வாழ வேண்டும் என்பதற்காக பல குடும்பங்களை அளிக்க வேண்டுமா? சொல்லுங்கள்.

ஓய்வு பெற்ற தொழிலாளர்களே நீங்க என்ன வேலை செய்தீர்கள் என்று தெரியாது, குறிப்பாக அங்கே என்ன நச்சு தன்மை வெளியிடப்படுகிறது என்பதை எந்த தொழிலாளர்களுக்கும் எந்த நிறுவனமும் சொல்ல மாட்டார்கள். சொன்னால் நீங்கள் இருக்க மாடீர்களே...

நாங்கள் ஒன்றும் கூலிகொடுத்து போராட வரவில்லை.. எல்லா ஆதாரங்களயும் திரட்டி தான் போராட வந்து இருக்கிறோம். நீங்கள் சொல்வதை பார்த்தல் புகை பிடித்தல் உடன் நலத்திற்கு கேடு என்று விளம்பர படுத்தி அதே அட்டையில் போட்டு சிகரெட் விற்கிறார்களே, அது சரி என்பதை போலே இருக்கிறது. ஆபத்தில்லாமல் வாழ்க்கை இல்லை. அதற்காக ஓடுகிற ரயிலின் குறுக்கே விழ முடியாது.

எரியும் வரை நெருப்பு. போராடும் வரை மனிதன். நாங்கள் மனிதர்கள்.

காயல் மண்ணுக்காக
- மண்ணின் மைந்தன்
( haseen70 @ yahoo .com )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...உண்மைகள் தூங்கவும் ஊமைகள் ஏங்கவும்...
posted by mackie noohuthambi (kayalpatnam) [29 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24181

காயல்பட்டினம் சுற்று சூழல் பாதுகாப்பு அமைப்பு ஏற்பாடு செய்துள்ள கடையடைப்பு, கண்டன ஆர்பாட்டம் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் இன்று காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடக்கவிருக்கிறது

இந்த செய்தி அறிந்து DCW வின் ஒய்வு பெற்ற தொழிலாளர்கள் அலுவலர்களின் உள்ளக் குமுறல்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்கள். இதைபோல் எத்தனை உள்ளங்கள் மீனவர்கள் உப்பள தொழிலாளிகள் தங்கள் மனக்குமுறல்களை வெளியிட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் KEPA என்ற அமைப்பு முதன் முறையாக மக்கள் மன்றத்தை அணுகி நியாயம் கேட்க புறப்பட்டிருக்கிறார்கள். அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.

நீரோட்டம் இல்லாமல் நிலம் விளையாது,
போராட்டம் இல்லாமல் நலம் விளையாது.

உங்கள் சாத்வீகமான, அகிம்சை போராட்டம் வெற்றி பெற எல்லா மக்களும் துணை நிற்பார்கள்.

ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை. இங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும் நாம் பார்த்துக்கொண்டிருப்பதா ஒரு இறைவன் உண்டு, அவன் துணை கொண்டு, இந்த உயிர் கொல்லும் அபாயத்தை மக்களுக்கு உணர்த்திட . DCW நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கும் அவர்கள் வருங்கால சந்ததிகளுக்கும் சேர்த்து போராடும் KEPA இயக்கத்தை வாழ்த்துகிறோம்.

இளைஞர்கள்தான் சாதித்து காட்டியிருக்கிறார்கள். முன்னேற்றங்கள், நல்ல மாற்றங்கள் அவர்களால்தான் உண்டாகியிருக்கிறது என்று உலக வரலாறுகள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.முன்னேற்றம் என்பதெல்லாம் கேள்விகள் கேட்பதனாலே, உரிமைகளை பெறுவதெல்லாம் கடமையை செய்வதனாலே....

உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள், நாளை நமது என்று சிந்து பாடுங்கள். மேடு பள்ளம் இல்லாத, நோய் நொடி இல்லாத சமுதாயம் காண என்ன வழி என்று எண்ணி பாருங்கள், நம் பெரியவர்கள் சொன்ன வழி சென்று நன்மை தேடுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...நீங்கள் ஆதாயம் மற்றும் DCW வில் பலன் அடைந்ததற்காக இவ்வாறு அறிக்கை விடுகிறீர்களா..?
posted by MAC.Mujahith (Mumbai) [29 November 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 24183

சரி.." அப்படியென்றால் கடலில் அடிக்கடி கலர் மாற்றம், ஊரில் ஒரு வித கண்ணெரிச்சல் மற்றும் அமிலம் கலந்த புகை மூட்டம் இதுவெல்லாம் என்ன வென்று சொல்லுவது...?

நீங்கள் ஆதாயம் மற்றும் DCW வில் பலன் அடைந்ததற்காக இவ்வாறு அறிக்கை விடுகிறீர்களா..?

சரி இப்பொழுதும் நாங்கள் உங்களிடம் வினவுவது ஒன்றே ஒன்று.." 100 % நீங்கள் அரசு சொல்லிய பாதுகாப்பு மற்றும் சுற்று சூழல் விதி முறைகளை சிறிதும் மீறாமல் DCW கடைபிடித்து இயங்கி வருகின்றதா...? மேலும் நீங்கள் கூறிகின்றீர் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கின்றது என்று.."

நீங்கள் நோயையும் கொடுத்து விட்டு சிறிது சம்பளத்தையும் கொடுத்து என்ன பயன்..? நோயற்ற வாழ்வே சிறந்த வாழ்வு.."

Health is Wealth .." மேலும் நீங்கள் சொன்ன அதே Quran இல்தான் தவறு நடந்தால் தட்டி கேளுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது..".

ஆக நீங்கள் தயவு கூர்ந்து மக்களின் நலனுக்காக குரல் கொடுங்கள் மாறாக DCM நிறுவனத்தின் முதலாளிகளுக்காக ஒரு போதும் குரல் மற்றும் அறிக்கை விடாதீர்கள். ஏன் என்றால் DCW க்கு அருகில் உள்ளவர்கள் அறியாத, படிக்காத மக்கள். ஆக அறிந்தவர்கள்தான் அறியாதவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். எங்களுக்கு இதுவே மிகுந்த மகிழ்ச்சி. அது என்ன வெனில் எங்களது செய்தி, ஆதங்கம் மற்றும் எங்களது ஆர்ப்பாட்ட நோக்கம் உங்களை அடைந்து இரண்டு பக்க பிரசுரம் வெளியிடும் அளவிற்கு தாக்கம் எற்பட்டுள்ளது..!!!

அல்ஹம்து லில்லாஹ்.."

By - MAC.முஜாஹித்
மும்பை
29 - 11 -2012


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by nizam (INDIA) [29 November 2012]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 24184

இதுவரை எந்த ரியாக்சனும் காட்டாமல் இருந்த DCW நிர்வாகம் தற்போது மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வை கண்டு கலக்கம் அடைந்துதான் இந்த நோட்டிசை வெளியிட்டிரிகிறது. அதனால் இந்த நோட்டிசை நமக்கு இந்த விசயத்தில் கிடைக்கபோகும் நீதியின் தொடக்கமாக எடுத்துகொள்ள வேண்டும்.

இந்த நோடிசிர்க்கு அதிகமாக கம்மன்ட் எழுதினால் நம்முடைய நோக்கம் திசை திரும்ப வாய்ப்பாக அமைந்து விடும். ஏனென்றால் இந்த நோட்டிசை வெளியிட்டதின் நோக்கமே நம்மை திசைதிருப்பதான்.

கவுண்டமணி பாசையில் சொல்வதாக இருந்தால் இதெல்லாம் சகஜமப்பா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:... வெற்றி நமக்கே
posted by Seyed Ismail (Singapore) [29 November 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 24186

இந்த அறிக்கை தான் நமக்கு வெற்றியின் முதற்படி.. ஆம், இந்த அறிக்கை அவர்களின் பயத்தின் வெளிப்பாடே அன்றி வேறில்லை. இதை நினைத்து நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பதே எனது ஆசை...

யாரும் பின்வாங்காமல் முன் விரைந்து போராடுவோம். அல்லாஹ்வின் உதவியால் நமது ஊரின் சந்ததியை காத்திடுவோம்... அல்லாஹு அக்பர்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by AbuRushda (Dubai) [29 November 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24187

சாப்பிட்ட கடனுக்கு நன்றி உள்ளவர்களாக இருகிறீர்கள். வாழ்த்துக்கள். கை நிறைய சம்பளம், வாரிசுகளுக்கு வேலை, ரெடைர்மேன்ட்கு அப்புறம் பென்ஷன் பணம்.... ஏன்யா எழத மாட்டீங்க.

காயல்பட்னத்தில் இருந்து எதனை பேர் அங்க வொர்க் பண்ணிட்டு பாரீன் போயிருகன்ன்கனு புள்ளிவிவரம் தர முடியுமா? உங்க தேவைக்கு அல்-குரான் ஆதாரம் வேற? shameless.....

ஒரு 30 வருஷம் உப்பை தின்னதால, உங்களுக்கு உங்க முதலாளிகள் மேல இத்தனை loyalty இருந்தால்...... எங்கள் மண்ணின் மேல் எங்களுக்கு எவ்வளோ loyalty இருக்கும் தெர்யுமா?

அய்யாமார்களே this is not that old kayalpatnam, when you guys makes a sheepish smile and carryout your hawkish plan. we do know science and technology, perhaps much better than you guys.

ஒரு வெள்ளை சாரமும் தலையில் தொப்பி போட்டுட்டு போறதால என்ங்களை முட்டாபசங்கனு நெனய்காதேங்க. உண்மையிலேய நீகள் வாய்மை உள்ளவர்களானால், உங்கள் முதலாளிகளிடம் ஒரு competant independant third party இடம் ISO 14001 - environmental complience certification, British Safety Council Five star environmental audit எடுக்க சொல்லுங்கள். அப்புறம் எங்களை குறை சொல்லுங்கள்.

50 வருடம் for your personal benefit, you guys poisoned our shorelines and our environment. உங்களுகெல்லாம் மனசாட்ச்யே கிடையாதா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by MAC.Mujahith (Mumbai) [29 November 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 24188

இதோ நான் கிளம்பி விட்டேன் ஜனாதி பதிக்கும், பாரத பிரதமருக்கும் மற்றும் தமிழக முதல் அமைச்சருக்கும் DCW பிரச்சனை பற்றி TELEGRAM தந்தி அனுப்ப.."

வெளி நாடு மற்றும் வெளி ஊரில் வசிக்கும் காயலர்கலே.. நீங்கள் கிளம்பி விடீர்களா...?

Hurry Up ...Hurry Up ...!!!

By - MAC .முஜாஹித்
மும்பை
29 -11 -2012.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. DCW ஆலையின் அத்துமீறலுக்கெதிரான போராட்டம்
posted by Zainul Abdeen (Dubai) [29 November 2012]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24189

ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் - அலுவலர்கள்
இதை நீங்கள் பார்க்க நேர்ந்தால். . .

நண்பர்கள் அன்பர்கள் என்றெல்லாம் பேசி முடிவில் அசைவத்தை பற்றி பேசி அசிங்கமாக நடந்து கொண்டீர்களே. நாங்கள் அசைவத்தை சாப்பிடுபவர்கள்தாம் ஆனால் பன்றியை சாப்பிடுபவர்கள் இல்லை. எங்களுக்கு ஊர் மேல் உள்ள அக்கறை, ஊர் மக்கள் மேல் உள்ள பரிவும்தான் இந்த போரட்டத்துக்கு உந்துகோல். நாங்கள் மற்றவர்கள் எறியும் எலும்பை சாப்பிடுபவர்கள் இல்லை.

நான் அந்த நிறுவனம் நடத்தும் பள்ளியில் படித்த காலத்தில் என் கண்ணால் பார்த்தவை.

அப்போ அப்போ சில மாணவர்கள் மயக்கம் அடைவதுண்டு, சில சமயம் ஒரே புகை மூட்டமா இருக்கும், சில சமயம் பள்ளியும் விடுமுறை இடுவதுமுண்டு. இதெற்கெல்லாம் காரணம் என்னவா இருக்கும்.

அறிக்கை விட்டவர்களுக்கு ஒரு அண்பான வேண்டுகோள்,

மேலும் இது போன்ற ஒரு அறிக்கையை வெளியிட்டு உங்களுடைய ஓய்வூதிய பணத்தை வீண்விரயம் செய்யாதீர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [29 November 2012]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24190

கேடு கேட்ட DCW நிருவாகம் சில எலும்பு துண்டுகளை வீசி இந்த அறிக்கையை அளித்து இருக்கிறது நன்கு புலபடுகிறது.

நாம் நடத்தும் போராட்டம் போன்று கடந்த காலங்களில் சில அமைப்புக்கள் போராட்டம் நடத்த அறைகூவல் விட்டது. சில சல்லி காசுகளை அள்ளி தெளித்து வாயடைக்க வைத்து விட்டது.

DCW தொழிற்சாலை வேண்டாம் என்று சொல்லவில்லை. சுற்றுப்புற சூழலுக்கு இடையூறு தராதே என்றுதான் போராடுகிறோம்.

இந்த மாதிரி POLUSION ஏற்படுத்தும் DCW உனது சொந்த மாநிலமான குஜராத்தில் இது போன்று நடத்த முடியுமா? அருகில் உள்ள கேரளாவில் நடத்த முடியுமா? இளிச்ச வாயன் தமிழன் என்றுதான் நமது தலையில் மண்ணை அள்ளி நமது கையால் போடுகிறான். இது உணராமல் அறிக்கை வேறு. நிலம் கொடுத்தவர்கள் நாங்கள். எங்கள் மக்கள் எத்தனை பேருக்கு வேலை கொடுத்து இருக்கிறது? உங்கள் வருங்காலம் உங்களை மன்னிக்காது.

காயல் சொந்தங்களே ஒரு அன்பான வேண்டுகோள். கமலவதி பள்ளியில் படிக்கும் நமது பிள்ளைகளை இந்த கல்வி ஆண்டோடு நிறுத்தி கொள்வோம் என்ற சபதத்தை இன்றைய ஆர்ப்பாட்டத்தின் மூலம் சபதம் ஏற்போம். நமதூரில் படிக்கும் பிள்ளைகள் சாதிகிறார்கள். கமலவதியில் படிக்கும் எத்தனை பேர் சாதித்து இருக்கிறார்கள் விரல் விட்டு எண்ணி விடலாம்.

களம் கண்டுள்ளோம் ஓய மாட்டோம். உறங்கமாட்டோம் இறைவன் அருளால் DCW கொட்டம் அடங்கும் வரை அடங்க மாட்டோம்.இன்ஷாஅல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. இன்ஷா அல்லாஹ் நாளையும் வெற்றியும் இனி நமதே.......................
posted by SK Shameemul Islam (Chennai) [29 November 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 24197

இப்பிரசுரம் ஒரு அச்சுறுத்தல் போல உள்ளது. இவர்களின் (DCW நிர்வாகம்) பேச்சையே காணோமே என்று இவ்வளவு நாட்கள் எதிர்பார்த்த வேளையில் இவர்களின் முதற் குமுறல் இப்போது துவங்கி இருக்கிறது. கடுமையான செய்தியை மென்மை கலந்து வெளியிடப்பட்டுள்ள முதல் எச்சரிக்கையாகவே இப்பிரசுரத்தை நாங்கள் காண்கிறோம்.

மேலும் ஒரு காயல்வாசி எதைச் செய்ய வேண்டும் எதை உண்ண வேண்டும் என்ற நல்லுபதேசம் வேறு வழங்கப்பட்டுள்ளது. அப்புறம் "நிச்சயமாக நாங்கள் பூமியில் சீர்திருத்தம் தான் செய்து வருகிறோம் (குர்ஆன் 2:11)" என்று கூறிய முற்காலத்து குழப்பவாதிகளின் தொனியும் தென்படுகிறது. "அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பவாதிகள்; எனினும் அவர்கள் (இதை) உணரமாட்டார்கள். (குர்ஆன் 2:12)" என்ற அறிவுரை அதே குர்ஆனில் தான் (உங்களைப்பற்றி) எங்களுக்கும் தரப்பட்டுள்ளது.

அடுத்து எங்கள் முதியோர்களை நாங்களே வெறுப்புடன் பார்க்க வைத்திடும் ஒரு சிண்டு முடிச்சி வேலையும் செய்யப்பட்டுள்ளது. இன்றிருக்கும் பிரச்சினைகள் அவர்கள் காலத்தில் நிகழ்ந்திருந்தால் அவர்கள் தான் இப்போராட்டத்தை துவக்கி வைத்திருப்பார்கள். ஏனெனில் இன்று அதிகமதிகம் மாண்டு போவதும் அவர்களின் பிள்ளைகள் தானே.

காயல்வாசிகளுக்கு வேலைவாய்ப்பு தரவில்லை எனக்கூறுவதை மறுத்தும் காயல்பட்டணம் ஏற்கனவே ஒரு வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பூமி என்பதையும் சொல்லி அருகிலுள்ள ஊர் மக்களுக்கு மிகவும் பயனளிக்கின்ற வகையில் இந்நிறுவனம் வேலைவாய்ப்புகள் வழங்கி வருவதாகவும் வேஷம்காட்டி நாங்கள் ஆண்டாண்டு காலம் காத்து வரும் சமய நல்லிணக்கத்திற்கு வேட்டு வைக்கும் சாத்தானியச் செயலையும் செய்துள்ளீர்கள்.

எங்களைவிட பார்போற்றும் அளவிற்கு வணிகத்தில் விஞ்சி நிற்பவர்கள் எங்களின் அக்கம்பக்கத்து ஊர்காரர்கள் என்பதை அருகிலிருந்து பார்த்து வரும் நாங்கள் ஆனந்தத்துடன் கூறிக்கொள்கிறோம். அவர்களுக்கு நீங்கள் இல்லை எனில் செய்வதற்கு ஒன்றுமே இல்லை என்ற பூச்சாண்டி எல்லாம் காட்டாதீர்கள்.

அப்புறம் மெர்குரி தயாரிப்பை நிறுத்தி அந்த கட்டடத்தையும் நொறுக்கி விட்டதாக கூறுகிறீர்களே. ஒழுங்காக சுத்தப்படுத்தி விட்டீர்களா. மெர்குரி... தகர்ப்பு... என்றதுமே பகீர் என்று ஆகிவிட்டது. இதற்குத்தானே எங்களின் நேசமிகு மக்கள் பலரையும் நாங்கள் காவு கொடுத்திருக்கிறோம்.

அன்பார்ந்த ஊர்மக்களே!

இது ஒரு தொடர்போராட்டம். அஹிம்சா வழியில் இந்த அறப்போர் தொடரவேண்டும். மாசற்ற நோயற்ற ஒரு காயல்பதியை அமைத்துத் தரும் வரை ஓயாமல் போராடுவோம். இவர்கள் ஒன்றும் நமக்கு எமனல்ல. இன்ஷா அல்லாஹ் நாளையும் வெற்றியும் இனி நமதே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by M.S.ABDULAZEEZ (H K ) [29 November 2012]
IP: 173.*.*.* United States | Comment Reference Number: 24198

மகுடி ஊதா பாம்பு வந்த கதை..... ஒரு பாம்புக்கு ஊதினா பல விஷ பாம்புக மாட்டும் போலிருக... ஆர்வகோளாறு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by mhsalih (Antananarivo) [29 November 2012]
IP: 197.*.*.* | Comment Reference Number: 24203

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

அட்ரஸில்லாதவர்களுக்கெல்லாம் கமெண்ட்சு பதிந்து நமது பொன்னான நேரத்தை வீணாக்கவேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.

DCW தொழிற்சாலை சுற்றுவட்டாரத்தை சுற்றி மக்கள் கேன்சர் நோயினால் பலபேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏன் அங்கு வேலை பார்க்கும் மிகுதியாவனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது யாருக்கும் தெரியாது என்று DCW நிர்வாகம் மூடி மறைக்க ஏற்படுத்திய சதியின் கைக்கூலிப் பட்டாளம் தான் இந்த மொட்டை நோட்டீஸ் அடித்தவர்கள்.

இந்த கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட அதன் ஊழியர்கள் DCW நிர்வாகம் சொல்லும் மருத்தவமனைக்குச் சென்று தான் பரிகாரம் பார்க்கவேண்டும் என்பது அங்கு எழுதாத படாத சட்டம். வேறு எங்கும் சென்று மருத்துவம் பார்க்கக்கூடாது. அவர்கள் சொல்லும் மருத்துவமனை அந்த நோயின் உண்மை நிலையை மறைத்து வேறு விதமான நோய் என்று அறிக்கை கொடுக்கும். இது காலகாலமாக நடந்துவருகிறது என்று அங்கு தற்போது வேலைப்பார்க்கும் நண்பர் என்னிடம் கூறியதை தான் நான் இங்கு பகிர்ந்துள்ளேன்.

மேலும் நோயினால் பாதிக்கப்பட்ட நிறையபேர் இன்னும் அங்குதான் தங்களுடைய மீதி காலத்தை ஒட்டுவதற்காக நிர்வாகத்திற்கு பயந்து உண்மை நிலையினை வெளிப்படுத்தாமல் காலத்தை கடத்திவருகிறார்கள் என்பதுதான் உண்மை.

ஒரு காலம் வரும் அவர்கள் யார் என்று பட்டியலிடப்படுவார்கள். அல்லாஹ் இந்த போராட்டத்தை வெற்றி ஆக்கி தந்தரிள்வானாக ஆமீன்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by kulam kabeer (chennai) [29 November 2012]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 24204

Ha ha ha nice comedy ball bowled by the workers of DCW on behalf of their management.That bowled ball was hit to the SIX....!

It is a continous ahimsa war by the people of kayalpatnam for their welfare of their present and future generation.We the people of kayal should be united to break the walls against our people...may allah be with us to get a good result in this issue...AAmeen!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. சந்ததியினரை வாழவிடுங்கள்.
posted by இப்னு சாகிப் (சதக்) (Dammam, Saudi Arabia) [29 November 2012]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24205

ஏதோ காயல் மக்கள் போராடி DCWவை மூட சொல்வது போன்றும், அதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதரத்தை கேள்விகுறியதாக ஆக்கி விடுவது போன்றும் உங்களுடைய நோட்டிஸ் உள்ளது. காயல் மக்களின் ஆதங்கத்ததை முழுமையாக உள்வாங்குங்கள்.

DCW வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால் எங்கள் மண்ணை / கடலை மாசுபடுத்தாதீர்கள்.

எங்கள் மற்றும் உங்கள் உறவுகளை தொழிற்சாலை முதலாளியின் லாப வெறிக்காக காவு கொடுத்து கொண்டுதான் இருக்க வேண்டுமா?

ஏன் இந்த தொழிற்சாலைக்காக, லாரி லாரியாக நிலத்தடி நீரை உறுச்சி கொண்டு செல்கிறார்களே? இந்த தொழிற்சாலைக்காக நம் சந்ததியினர் நீர் இல்லாமல் இடம் பெயர்ந்து செல்ல வேண்டுமோ?

இது காயல்பட்டினத்தின் போராட்டம் மட்டும் அல்ல. இது இந்த நாசகார தொழிற்சாலையை சுற்றியுள்ள பல ஊர் மக்களின் நீண்ட நாள் அங்களாய்ப்பு. இதற்கு முன் பல ஊர் மக்கள் போராடி இருக்கிறார்கள். இன்று காயல் விழித்துள்ளது.

தயவு செய்து வாங்கிய சம்பளத்திற்காக கூனி குறுகி நிற்காதீர்கள். குறைந்தபட்சம் உங்கள் வருங்கால சந்ததியினரை நினைத்து சிறுது தலை நிமிர்ந்து எங்களோடு தோள் கொடுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. குருட்டு விசுவாசம்
posted by Mauroof (Dubai) [29 November 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24214

ஆஹா! என்னே ஒரு அருமையான விளக்கம்!!

ஓய்வு பெற்ற இத்தொழிலாளர்கள் ஓய்வூதியதாரர்கள் மட்டுமல்ல, மாறாக "முதலாளிகள்" கூட. இப்படியான முதலாளிகளை நினைக்கையில் எனக்கு "பராசக்தி" திரைப்படப் பாடலில் வரும் சில வரிகளே நினைவிற்கு வந்தது.

"முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனே,
சில முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனே,
பணம் முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே"
என்ற வரிகள்தான் அவை.

இத்தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பொருட்கள், அதனால் ஏற்படும் இயற்கைக்கு எதிரான தீங்குகள் குறித்தெல்லாம் சென்ற வருடம் இந்த நாசகார ஆலையின் விரிவாக்கம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தில் ஆதாரப்பூர்வமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களில் பெறப்பட்ட அறிக்கைகள் மூலம் முன்வைக்கப்பட்டபோது இந்த ஆலையின் சார்பில் விளக்கமளிப்பதற்காக வந்தவர் முன்னுக்குப்பின் முரணாக விளக்கங்களை விழுங்கி விழுங்கி விழி பிதுங்கி தெரிவித்ததை நாங்கள் பார்க்காமலா இருந்தோம்?

சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான (எங்கள் ஊர் உட்படத்தான், ஏன் முழு தமிழ்நாடு, இன்னும் ஏன் முழு இந்தியாவிலும் உள்ள) சுகாதார ஆய்வாளர்கள் அவர்களது பணிகளை எவ்விதம் செய்கிறார்கள் என்பதை நாடே அறியும். ஆக, போதும் உங்கள் விளக்கமும் விசுவாசமும். கலங்கரை விளக்கத்திற்கு மிகப்பெரிய களங்கமாக விளங்கும் இந்த ஆலை களை எடுக்கப்பட வேண்டும். எடுக்கப்படும் இறைவன் நாடினால்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...நுணலும் தன் வாயால் கெடுமாம்.
posted by OMER ANAS (DOHA QATAR.) [29 November 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 24215

ஆஹ்ஹாஹ்ஹா! என்ன திட்டமிட்ட அறிக்கையை ஓய்வு பெற்ற முதியோர் நா கூசாமல் DCW வுக்கு பிடில் வாசித்து இருக்குகிறார்கள். ஃபுல்லா மோடி மஸ்த்தான் வேலையினை இங்கேஒரு பீடி மஸ்த்தான் திட்டமிட்டு செய்துள்ளான்.

இதில் ஏதோ சதி விளையாடி உள்ளது போல் தெரிகிறது. அறிக்கை வெளியிட்ட அன்பர்களே எங்கள் ஊருக்கு ஒரு அனாக்கூட வருமானம் வேண்டாம். குச்சியையும் குடிசையையும் கிளப்பிக் கொண்டு வேறு யாருக்கு வருமானம் தேவையோ அங்கே இந்த ஃபாக்டரியை கொண்டுபோங்கள்.

அவர்கள் ஒரு அடி நிலம் கூட உங்கள் எஜமானனுக்கு தருகிறார்களா பாருங்கள்.

உங்களை ஏவி விட்டவன் குடும்பம் நாசமாகு முன்போ உங்கள் குடுப்பம் நாசமாகு முன்போ உங்கள் பாவங்களுக்கு வல்லோன் இறைவனிடம் மன்னிப்பு கேளுங்கள். அதைத்தான் இறைவனும் விரும்புகிறான்.

இல்லையேல் அணு அணுவா இறைவனின் சித்ரவதையினை நீங்கள் கால காலமாக அனுபவிப்பீர்கள்!இது நிச்சயம்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by Muhammad Ibrahim (Guangzhou (China)) [29 November 2012]
IP: 58.*.*.* China | Comment Reference Number: 24217

அய்யய்யோ என்ன சார் திடிர்ன்னு கூடங்குளம் நியாபகம் வந்துடுச்சோ!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [29 November 2012]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24221

அம்புகளின் பெயரில் வெளிவந்துள்ள அறிக்கை. அம்பை எய்தவர் யார் என்பதும் அனைவர்களுக்கும் தெரிந்த உண்மை. சொக்கா..!!

* வாசகங்கள் எல்லாம் சரியாகத்தான் உள்ளது. உலக சரித்திரத்தில் எந்த ஆலை தங்களுடய தவறை ஒத்துக்கொண்டுள்ளது.

அது செய்கின்றோம், இது செய்கின்றோம், இவ்வளவு நபர்களுக்கு வேலை கொடுத்துள்ளோம், இவ்வளவு வருமானம் ஈட்டியுள்ளோம் என்று ஈட்டி எரிகின்ற பசப்பு வார்த்தைகளைதானே கூறி வருகின்றார்கள்.

* உங்களை குற்றம் சொல்லி பிர்யோஜனம் இல்லை. உங்கள் விசுவாசதை காட்டினீர்களோ அல்லது காட்டப்பட்டீர்களோ... தெரியவில்லை.

நான் அறியாவயது சிறுவனாக இருந்த காலம் முதலே இந்த அரக்கனின் கொடுமைகளை அறிந்தவன்.

* நடு சாமத்தில் வீட்டின் தோட்டத்தில் கட்டிபோட்டு இருக்கும் மாடுகள் உசுக்கு.. உசுக்கு.. என்று தும்மல் அடித்துக்கொண்டே இருக்கும்.

படிப்பு அறிவே இல்லாத என் கம்மா அலுத்துக்கொண்டே " கேமிக்களில் (அதான் DCW ) இருந்து என்னத்தையோ தொறந்து விட்டுட்டானுவோ.. பாவம் இப்படி இளைப்பு வந்து சாவுகின்றதே" என்று கவலைப்படுவார்கள்.

* மாலையில் நன்றாக இருந்த முருங்கை மரம், அடுத்த நாள் அதிகாலையில் அனைத்து இலைகளையும் உதிர்த்து விட்டு, எலும்புக்கூடு மாதிரி பாவமாக நிற்க்கும். விசாரித்தால் " கெமிக்களில் இருந்து எண்ணத்தையோ திறந்து விட்டுட்டாணுவோ..!! என்று சொல்லுவார்கள்.

* குழந்தைகளுக்கு மூச்சு திணறல், கண் எரிச்ச்சல், இருமல் வந்தால், உடனே தெரிந்து விடும், " DCW என்னத்தையோ திறந்தது விட்டுட்டான்வோ..!!" என்று.

* இப்படியே மருவி மருவி கேன்சர் வரை வந்து விட்டது.

இப்படி என்னதையோ திறந்து விட்டுட்டானுங்க..!.. என்னதையோ திறந்து விட்டுட்டானுங்க..! என்று சொன்ன அறியா தலைமுறை இல்லை இந்த தலைமுறை.

* இந்த அறப்போராட்டம் வெற்றியாகவும், நன்மையாகவும் அமைந்து நிம்மதியான வாழ்வு அமைய பிராதிக்கின்றோம்.

** மீண்டும் கூறுகின்றோம், நாங்கள் D C W விற்க்கு எதிரானவர்கள் அல்ல. அவர்கள் செய்யும் அட்டூலியமான மாசுபடுத்துதலுக்கு தான் எதிராக இருக்கின்றோம். வல்ல இறைவனிடம் பாதுகாப்பு கேட்க்கின்றோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. நோயற்ற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
posted by JENISTAN FERNANDO (PUNNAIKAAYAL) [29 November 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 24223

இந்த போராட்டம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்...... மேலும் 50 ஆண்டுகளாக இந்த அமில கழிவுகள் கடலில் கலந்து வந்தாலும், கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இதே அமில கழிவுகள் முறையாக தேக்கி வைத்து அதன் விச தன்மையை குறைப்பதற்கு சுண்ணாம்பு கற்கள் மற்றும் பவுடர் தூவப்பட்டு விசதன்மை தரையில் தாழ்ந்த பின்புதான் கடல் நீர்ல் கலக்கப்படும். ஆனால் தற்போது இந்த முறை கடை பிடிக்க படுவதில்லை. மாறாக ஆலையிலிருந்து வெளியாகும் விச அமிலகழிவு எவ்வித சுத்திகரிப்புமின்றி நேரிடியாக கடலில் கலக்கப்படுகிறது.

மேலும் கடலில் கலக்கப்படும் இந்த அமில கழிவுகள் கடலில் தட்ப வெப்ப நிலைகளை அறியாமலும் நீரோட்டங்களின் தன்மையை அறியாமலும் கடலுக்குள் செலுத்துவதால் கடல் நீர் விஷ நீராக மாறுகிறது. இதை முறையாக DCW நிறுவனம் செய்கிறதா? ஓய்வு பெற்ற தொழிலாளர்களே, இது உங்களுக்கு தெரியுமா? கடலுக்கு மிக அருகாமையில் உள்ள காயல் மக்கள் பாதிப்படைவதற்கு இதுவும் ஒரு காரணமே. மாசு கட்டுப்பாடு வாரியமே இதை கண் காணிப்பது உண்டா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by NMZ.Ahamedmohideen (KAYALPATNAM) [29 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24226

சாகடிக் காதீர்கள் !!சாகடிக் காதீர்கள் !!!! சந்ததியினரை சாகடிக்காதீர்கள் !!! .சந்ததியினரை வாழவிட்டு சாதனைப் படையுங்கள் . ஓயாமல் போராடி மாசற்ற நோயற்ற ஒரு காயல்பதியை உருவாக்க இந்த அறப்போர் அஹிம்சா வழியில் தொடறும் . வெற்றியின் முதற்படி இந்த அறிக்கைதான்.

ஓய்வு பெற்ற தொழிலாளர்களே !!!சும்மா டென்ஷனை ஏத்தாதீங்க...! உங்களுக்கு எல்லாம் உங்களது ஓய்வு ஊதியம் பறிபோய்விடும் என்றுதான் பயப்படுகிறீர்கள் .ஆனால் எங்களுக்கு எல்லாம் விலை மதிப்பற்ற எங்களது வாரிசுகள் பறிக்க துடிக்க எங்களை விட்டும் பரிபோகிறதே என்று இரத்தக் கண்ணீர் ஓயா அலையாக பெருக்கு எடுத்து ஓடுகிறது........

ஓயாது !!!ஓயாது !!! ரசாயன ஆளை டிசிடபில்யுவை ஒழித்து கட்டும் வரை எங்களது போராட்டம் ஓயாது......இது நிச்சயம்!!!!!!!!!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [29 November 2012]
IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24227

அஸ்ஸலாமு அலைக்கும்

உண்மையை எப்படி மூடி மறைக்கிறார்கள் பாருங்கள். உயிர் போவது நம் ஊர் பொது மக்கள் தானே ....இவர்கள் இந்த நச்சு தன்மையை நம் ஊர் கடலில் கலக்க விடுவதால் .....கடற்கரையின் இயற்க்கை காற்றை நாம் சுவாசிக்க முடியாமல் ...நாம் இந்த நச்சு தன்மை உள்ள காற்றை சுவாசிப்பதால் .... பாதிக்க படுவது யாராம் ??

இந்த >> DCW << தொழிற்சாலையின் ஓய்வுபெற்ற தொழிலாளர்களை ... >>DCW << அலுவலர்கள் பணம் கொடுத்து வேலைக்கு வங்கி விட்டார்கள். என்று தான் அறுத்தம் ....இல்லை சார் ....இது தான் 100 % உண்மை .....கூட.......

நாம் இவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லவேண்டியது கிடையாது .....நம் ஊர் மக்களின் உயிர் தான் நமக்கு முக்கியமே தவிர ....நம்மை கேட்பதற்கு யார் சார் இவர்கள் ??

இந்த மாதிரியான நோட்டிஸை >>DCW << காரனே அடித்து இருக்கலாம். அல்லவா ...........

ஆக மொத்ததில் >>DCW << நம் ஊர் பொது மக்களின் போராட்டத்தை கண்டு பயப்பட தொடங்கி விட்டது ......வெற்றி நம் பக்கம் நெருங்கி விட்டது என்று தான் அறுத்தம்...............நாம் இன்னும் போராட்டத்தை தீவிர படுதுவோம்.......

நாம் இந்த நோட்டிசை கொஞ்சமும் பெரிது படுத்தவே கூடாது......... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...
posted by mohideen (jeddah) [29 November 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24229

ஆடு நனையுதெண்டு ஓநாய் கவலை பட்ட கதையாக இருக்கிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by SEYED ALI (ABUDHABI) [29 November 2012]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24231

இவர்கள் கூறுவதுபோல் அந்த தொழிற்ச்சாலை மிகவும் சுத்தமானது என்றால் மஞ்சள் நிறத்தில் ஆறாய் ஓடும் அந்த நீர் கழிவு நீரா அல்லது புனித கங்கை நீரா?

அறிக்கை விட்டவர்கள் அதை திருப்பி தங்கள் பகுதியில் ஓடவிட்டு புனித மஞ்சள் நீராட தயாரா?

வெறும் வால்போஸ்டர் ஓட்டினால் போதாது. அந்த தொழிற்ச்சாலையின் முழு நடவடிக்கைகளுக்கும் அவர்கள் ஒரு வெள்ளை அறிக்கை தர வேண்டும்.

நெருப்பில்லாமல் புகையாது. ஏற்கனவே தூத்துக்குடி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அந்த தொழிற்ச்சாலையின் சில பிரிவுகளை மூட உத்தரவிடும்படி பரிந்துரைத்தது சும்மா செய்திருக்க மாட்டார்கள். இதில் எதோ சூது நடக்கிறது. குரானிலிருந்து அவர்கள் எடுத்து காட்டிய வரிகள் அவர்களுக்குத்தான் பொருந்தும்.

யா அல்லாஹ் முனாபிக்குகளையும் கொடியவர்களையும் கருவருத்துவிடுவாயாக. இவர்கள் மூலம் வரும் கொடிய நோய் நொடிகளிலிருந்து காப்பாற்றுவாயாக.ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...dcw கு kayalar கொடுக்கும் முதல் அடி
posted by suaidiya buhari (chennai) [30 November 2012]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 24234

assalamualkum

dcw நிர்வாகி மட்டும் ஊழியர்களே! நாங்கள் வரம்பு மீறவில்லை, நீங்கள் தான் சுற்று சூழல் பாதுகாப்பதில் வரம்பை ரொன்ப மீறி விட்டிர்கள், நீங்கள் சம்பாதிக்க எங்கள் உயிரை நாங்கள் காவு கொடுக்க வேண்டுமா?

நாங்கள் உங்களிடம் வேலை கேட்டு போராடவில்லை, எங்கள் உயிரை பாதுகாக்க போராடுகின்றோம், என்பதை நீ எபோழுதும் மறந்து விடாதே , உண் வேலை எங்களுக்கு அவசியம் இல்லை, எங்கள் மக்களை வாழ விடு.அல்லா எல்லா மக்களையும் பாது காத்து அருள் பாலிபனக.ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. பிழைக்க வழி இல்லாமல் உன்னை நம்பி வாழவில்லை
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM - 97152 25227) [30 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24236

தங்கள் பணி காலத்தில் தொழிற்சாலையின் நடப்புகள் (ஆபத்துக்கள்) தெரியாமலே நீங்கள் பணி வாங்க பட்டுள்ளீர்கள்...

உங்கள் அணைத்து தகவலும் எங்களின் கேள்விகளுக்கு மாற்றமாகவே உள்ளது... சுற்று புற மக்களில் நாடார் சமுதாய மக்களும் சரி இன்னும் பிற சமுதாய மக்களும் சரி நாங்களும் சரி பிழைக்க வழி இல்லாமல் உன்னை நம்பி வாழவில்லை அதை முதலில் நீங்கள் விளங்கி கொள்ளவும்...

உனது ஆதாயத்திற்காகவே நீ இங்கு வந்துள்ளாய் சுற்று வட்டார மக்களுக்கு பிழைப்பு (வேலை) கொடுக்க வரவில்லை...

DCW நிர்வாகமே... இனி மேல் உனது அணைத்து நடவடிக்கையும் பின்தொடரப்படும்..! இந்த ஆர்ப்பாட்டம் உனக்கு ஒரு முன் எச்சரிக்கை மட்டுமே...! அடுத்து உனது முகப்பு வாயிலில் மிக பெரிய போராட்டம் அமையும் உன்னை நீ மாற்றி கொள்ளாத வரை...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Retired..notice
posted by Jahir Hussain VENA (BAHRAIN) [30 November 2012]
IP: 188.*.*.* Bahrain | Comment Reference Number: 24238

இந்த நோட்டீஸ் நமக்கு முதல் வெற்றி ....

பொதுவாக ஒரு நோட்டீஸ் என்றல் முகவரி இருக்கும்..ஒன்னும் இல்லை.....

We all know who has instructed to issue such of notice...

காயல் பட்டினம் கடல் நீர் நிறம் மட்டும் ஏன் மாறுகிறது..

உங்கள் கழிவை எங்கே நீங்கள் கடலில் கலக்குகிரிர்கல்

கடல் நீர் மாறும் அளவிற்கு நச்சு தன்மை உங்கள் கழிவில் உள்ளது.....

இதனை ஆறிவு உள்ள எவரும் சிந்திப்பார்..

Jahir Hussain Vena
Kingdom of Bahrain.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:...
posted by Cnash (Holy Makkah) [01 December 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24296

ஓய்வு பெற்ற பிறகும் DCW நிறுவனத்திற்கு ஓய்வின்றி உழைக்க துடிக்கும் நண்பர்களே, நீங்கள் ஓய்வு பெற்று சுகமாக இருக்கிறீர்கள் ஒத்துகொள்கிறோம், எங்களையும் எங்கள் சந்ததியிரனையும் தான் உங்கள் சுகத்திற்காகவும், உங்கள் முதலாளியின் பணத்தாசைக்காக வேண்டி காவு கொடுத்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்ததான் இந்த போராட்டம். .நீங்கள் விசுவாசத்தை காட்டுவதற்கு வெளியிட்ட நோட்டீஸ் ஆகா இருந்தாலும் உங்களை பயன்படுத்தி இருந்தாலும் சரி! பொருளாதாரம்தான் உங்களின் நோக்கம் என்றிருக்கும்போது, எங்கள் மண்ணையும் எங்கள் மக்களின் உயிரையும் காப்பதில்உள்ள எங்கள் மக்களின் நோக்கம் உங்கள் அற்ப நோக்கத்தை விட ஆயிரம் மடங்கு உன்னதமானது எனபதை நீங்கள் முதலில் அறிந்து கொள்ளவேண்டும்.

நீங்கள் செய்யும் அட்டுழியங்களை நாங்கள் மட்டும் சொல்லவில்லை, எத்தனையோ ஆய்வுக்கு பிறகும், ஆராய்ச்சியாளர்களின் முடிவிற்கும் பிறகுதான் தெளிவு பெற்று வீதிக்கு வந்து போராடுகிறோம், ஆண்டாண்டு காலம் எங்களை முட்டாளாக்கி கொண்டிருக்கமுடியாது. இவ்வளவு விளக்கம் கொடுத்திருக்கும் நீங்கள் எங்கள் கடலை சிகப்பாக்கி எங்கள் ஊரின் அழகிய சூழலை நாசமாக்கி கொண்டிருப்பதைபற்றி ஏன் வாய்திறக்கவில்லை.

கேரளா மாநிலம் கொச்சியில் அமைத்துள்ள CENTRAL MERINE FISHERIES RESEARCH INSTITUTE CMFRI )1995 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில் உங்கள் DCW நிறுவனம் வருடந்தோறும் நவம்பர் முதல் ஜனவரி மாத மழைகாலங்களின் அந்த தொழிற்சாலையின் திரவ கழிவுகளை காயல்பட்டினம் கடலின் கலப்பதாகவும், இதனால் அத்தொழிற்சாலையை சுற்றி உள்ள கடல் பகுதிகளின் கடல்மீன்கள் நட்சுதன்மையால் இறந்து ஒதுங்குவதாக ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளதே அது பொய்யா? அவர்களுக்கு என்ன காழ்புணர்ச்சி உங்கள் மீது!!!

உங்கள் நிறுவனத்திற்கு முன் பலகையில் "உயிரை கொன்று உணவாக உண்ணாதே" என்று போர்டு போட்டு கொண்டு இத்தனை லட்சகணக்கில் கடல் உயிரை கொலை செய்கிறீர்களே அது உங்கள் பார்வையில் உயிராக தெரிவதில்லையா? வாயில் துணி கட்டி, வழியை பெருக்கி கொண்டு உயிருக்கு தீங்கு செய்ய மாட்டோம் என்று உங்கள் முதலாளிகள் மத கோசம் போட்டு கொண்டு, இப்படி கடல் உயிர்களை கொள்ளுவது தான் நியதியா?

இறந்துபோன மீன்களை ஆராய்ந்த போது அதன் வயிற்றில் நச்சு தன்மை கொண்ட MERCURY போன்ற உலோகங்கள் உட்கொள்ளபட்டிருக்கின்றது என்று அதே CMFRI இன் ஆய்வு சொல்லுகிறதே!! அதற்கு என்ன பதில்? இப்போது அழித்துவிட்டதாக சொல்லும் மெர்குரி பயன்பாட்டை, கடந்த 40 வருடங்களாக கடலின் கரைத்து நச்சு தன்மையாக்கியதற்க்கு யார் பொறுப்பு? பயன்பாட்டை நிறுத்தி விட்டோம் என்று சொன்னபின்னும் கூட எடுக்கபட்ட ஆய்வின் மெர்குரி மற்றும் நச்சு உலோகங்கள் வரையறுக்கபட்ட அளவைவிட அதிகமாக கழிவில் கண்டெடுக்கபட்டுள்ளதே அதற்கு உங்கள் பதில் என்ன?

எல்லாவற்றிலும் அழிவு உள்ளது என்பது எங்களுக்கும் தெரியும் பறக்கும் விமானத்தில் பணிக்கதான் செய்கிறோம், ஆனால் வானிலை சரி இல்லை விமானம் கோளாறு என்று தெரிந்தும் ஒரு விமானி விமானத்தை இயக்கினால் தெரிந்து கொண்டே ஏறி சாவை விலைக்கு வாங்க நாங்கள் மூடர்கள் அல்ல!

உங்களைபோல தான் சில வருடங்களுக்கு முன் பீடியை அரசு தடைசெய்த போது தங்கள் பொருளாதாரம் வாழ்வாதாரம் பாதிக்கபடுவதாய் சில முதலாளிகளின் தூண்டுதலின் அப்பாவி மக்கள் போராட்டம் நடத்தினர், அவர்கள் சாவை அவர்களே சுவாசிப்பது தெரியாமல்!!! பாவம் அவர்கள் படிப்பறிவில்லா மக்கள் !! ஆனால் நீங்கள் அப்படி இல்லை படிப்பை அறிந்து, பாதிப்பையும் அறிந்து அதே சமயம் மிக பெரிய பலனை அறிந்தவர்கள்.

உங்களுக்கோ உங்கள் வாரிசுகளுக்கோ எந்த நோயும் இல்லாமல் நலமுடன் வாழ்வதாக சொல்லி இருக்கிறீர்கள் சந்தோஷம்!! ஆனால் வேலை செய்யும் உங்களுக்கு சகல விதமான பாதுகாப்பு உபகரணங்கள் , மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டு இருப்பது போல் எங்கள் அப்பாவி மக்களுக்கு இல்லையே!! கூடங்குளம் அனுமின் நிலையத்தால் பலன் பணிபுரிபவர்க்கு தான் ஆனால் பாதிப்பு அப்பாவி மக்களுக்கு என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தானே! உங்களுக்கு ஏதும் ஏற்பாட்டால் கூட அந்நிறுவனம் காப்பீடு வழங்குகிறது, பொருளாதார தேவைகளுக்கு நீங்கள் விருப்பபட்டு பணிபுரிகிறீர்கள். எங்களுக்கு என்ன அவசியம் நோயை வாங்குவதற்கு!!

கழிவுகள் உங்கள் பகுதியில் கலக்கபடவில்லை, எங்கள் கடலின் கலக்கபடுகிறது!! உங்கள் இடம் சோலையாகவும் சொர்க்கமாகவும் இருந்தால், கடலின் கலக்கும் அந்த கழிவுகளை உங்கள் பகுதியில் கலக்க விட்டோ அல்லது உங்கள் நிறுவனத்தில் மறுசுழற்சி செய்தோ உபயோகித்து பாருங்கள். எங்கள் மக்களின் உயிரோடு விளையாடுவதை நிறுத்தி கொள்ளுங்கள்.

இந்த DCWவால் காயல்பட்டினத்தில் எத்தனை இளைஞர்கள் பயன் பெற்றார்கள் என்று புள்ளிவிகித கணக்கு சொல்ல முடியுமா? யாருக்கு வேலை கொடுக்கபட்டு வருகிறது என்பதை ஒப்பிட்டு பார்ப்போமா? அப்படியே நாங்கள் பயனடைந்து இருந்தாலும் சுற்றுபுறத்திக்கும், உயிருக்கும் ஆபத்து என்றால் அப்படி ஒரு பயன் எங்களுக்கு தேவை இல்லை? உயிரை விலையாக்கி பயன் யாருக்கு வேண்டும்?

காயல் நகராட்சி ஏதோ இந்த DCW கொடுக்கும் வரியில் தான் ஓடுவது போன்று சொல்லி இருக்கிறீர்களே? காயல் நகராட்சியின் மொத்த வருமானம் என்ன தெரியுமா .. ஆண்டுக்கு 4 கோடி ...உங்கள் DCW அளிக்கும் வரி வெறும் 6% மட்டுமே ...கட்டாத காலி மனை வரி கணக்கு எல்லாம் நோட்டீஸ் அடிச்ச உங்களுக்கு தெரியுமா?

இந்த இளைஞர்கள் மற்றும் பெரியோர்களால் எங்களையும் எங்கள் மக்களையும் பாதுகாக்க அமைக்கபட்ட அமைப்பு எங்கள் பெரியோர்கள் ஊர்மக்கள், மற்றும் மாற்றுமத சகோதரர்கள் எல்லோருடைய ஆதரவும் இதற்கு இருக்கிறது, பெரியோர்கள் ஆதரிக்க வில்லை, ஊர்மக்கள் ஆதரிக்க வில்லை என்று நோட்டீஸ் மூலம் சிண்டு முடிந்து விட வேண்டாம் , இன்று வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும் கடையடைப்பு மூலம் ஊர்மக்களின் ஆதரவை அறிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இது எங்கள் உரிமை போராட்டம் .... வாழ்வுரிமை போராட்டம்.. இறுதி வெற்றி அல்லாஹ்வின் உதவியால் பாதிக்கபட்ட எங்கள் மக்களுக்கே! இன்ஷா அல்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. நீங்களும் போராட முன்வாருங்கள்!
posted by M.N.Mohammed Aboobacker (a) Bakrin (Kayalpatnam) [03 December 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24326

DCWவில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் என்ற ஒரு நோட்டீஸ் இரு பக்கங்கள் உள்ளது பார்த்தேன். DCWவில் இஸ்மத் காக்கா அவர்கள், அன்பு சகோதரர் ஹபீபு முஹம்மது மற்றும் சிலறும் பணி செய்தது உண்மை. ஆனால் DCWவில் பணி செய்த நம் ஊர் மக்கள் DCWவின் வளர்ச்சிக்கு தக்க பணி செய்த மக்கள் மிக மிகக் குறைவு.

ஆனால், DCWவால் நம் ஊர் ஆண்கள் - பெண்கள் - மக்கள் சுற்றுப்புறச் சூழலால் பலப் பல வியாதிகளால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது கண்கூடாகும்.

எனது அன்பும், பாசமும் கொண்ட DCWவில் பணியாற்றிய தொழிலாளர்கள் - ஓய்வுபெற்றவர்களே! இந்த இயக்கத்தின் உண்மையான குரலுடன் நீங்களும் இணைந்து செயல்படுத்திட போர்க்கால அடிப்படையில் முன்வாருங்கள், முன்வாருங்கள்!

இறைவன் மிகப் பெரியவன். நன்றி.

அன்புடன்,
M.N.முஹம்மது அபூபக்கர் (எ) பக்ரீன்
தலைவர்:
கித்மத் சிரமதான சேவா மையம்,
காயல்பட்டினம்.

(காயல்பட்டினம் DCW ஆலை குறித்து 1986இல் துவக்கமாகக் குரலெழுப்பிய முன்னாள் “ஸதக்கத்துல்லாஹ் அப்பா நலச்சங்க”த்தின் பொருளாளர்.)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:...
posted by salai s nawas (singapore) [03 December 2012]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 24332

அன்புடன் பதில் கொடுத்த M.N.முஹம்மது அபூபக்கர் (எ) பக்ரீன் ஹாஜியார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். இந்த அன்பான பதிலுக்கு DCW நிர்வாகம் கூனி குறுக வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் மனிதர்களே இல்லை.

காயல்பட்டினம் DCW ஆலை குறித்து 1986இல் துவக்கமாகக் குரலெழுப்பிய முன்னாள் “ஸதக்கத்துல்லாஹ் அப்பா நலச்சங்க”த்தின் பொருளாளர் அவர்களே, அப்படியே இதையும் முடித்து வைப்பீர்கள் என்ற நம்பிக்கையில்.

அல்லாஹ் உங்களை பூரண ஆரோக்கியத்துடன் ஆக்கி வைப்பானாக!!! ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2025. The Kayal First Trust. All Rights Reserved