ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து, அம்மன்றத்தின் துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்பார்ந்த துபை காயல் நல மன்ற உறுப்பினர்களுக்கும், அமீரகம் வாழ் காயலர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நம் மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம், இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 30.11.2012 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு, துபை - சத்வாவிலுள்ள அல்-ஸஃபா பூங்காவில், 2ஆம் எண் நுழைவாயில் அருகில் நடைபெறவுள்ளது.
இச்செய்தியையே அழைப்பாக ஏற்று, கூட்டத்தில் தாங்கள் யாவரும் - குடும்ப சகிதம் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[செய்தி திருத்தப்பட்டுள்ளது @ 07:04 / 29.11.2012] |