மின் பற்றாக்குறை காரணமாக தமிழகமெங்கும் ஒவ்வொரு நாளும் சுமார் 18 மணி நேரம் வரை மின்தடை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மின் பற்றாக்குறையைப் போக்கிடும் நோக்குடன் சூரிய ஒளியில் மின் உற்பத்தி செய்தல் உள்ளிட்ட புதிய மின் உற்பத்தி திட்டங்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அண்மையில் அறிவித்திருந்தார்.
இப்புதிய மின் உற்பத்தி திட்டங்களை விரைந்து துவக்கி தமிழகத்தில் மின் பற்றாக்குறையை போர்க்கால அடிப்படையில் போக்கிடுமாறும், தூத்துக்குடி அனல் மின் நிலையம் உள்ளிட்ட மின் உற்பத்தி நிலையங்களில் அடிக்கடி ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்யுமாறும், தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சார்பில், அதன் செயலாளர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் அனுப்பியுள்ள கோரிக்கை கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
1. இளைஞர் ஐக்கிய முன்னணி வேண்டுகோள் விடுத்தது இருப்பது பாராட்டுக்குரியது posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[27 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24128
இந்த நாட்டில் எந்த திட்டமானாலும் உடனே செயல் படுவது கிடையாது - அதில் பல திட்டங்கள் கிடப்பில் தான் கிடக்கின்றன...! உடன்குடி மின் திட்டம் கடந்த ஆட்சியில் அடிக்கல் நாட்டி பணிகள் நடந்து வந்தன.. இப்போது ஆட்சியையும் மாறியது... உடனே உடன்குடி மின் திட்டத்தின் காட்சியும் மாறிவிட்டன... அவதி படுவது மக்கள்...
முதலமைச்சரின் புதிய மின் உற்பத்தி திட்டத்தை விரைந்து துவக்க இளைஞர் ஐக்கிய முன்னணி வேண்டுகோள் விடுத்தது இருப்பது பாராட்டுக்குரியது...
உங்கள் முயற்சிகள் (வேண்டுகோள்) வெற்றி அடைய வாழ்த்துக்கள்... உங்கள் நகர் நல சமூக பணிகள் என்றும் தொடரட்டும்... வெற்றியை நோக்கி...
2. Re:... posted byshaik abbas faisal (kayalpatnam)[27 November 2012] IP: 180.*.*.* India | Comment Reference Number: 24139
நல்லதொரு முயற்சி, இது போல தனியார் தொலைக்காட்சிக்கும் அழைப்பு (தகவல்) கொடுத்து அவர்களும் கடை அடைப்பு மற்றும் கண்டன போராட்டத்தை பதிவு செய்து தங்கள் தொலைக்காட்சியில் ஒலிபரப்பு செய்யும் போது அதன் மூலம் நம் போராட்டம் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை ,அல்லாஹ் நம் போராட்டத்தை வெற்றியாக்குவானாக ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross