‘தினத்தந்தி’ நாளிதழின் ஆறுமுகநேரி - காயல்பட்டினம் வட்டார செய்தியாளர் ஏ.பாஸ்கர் (கைபேசி எண்: +91 98417 49301) மனைவி ஜெஸ்மின், இன்று அதிகாலை 03.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 46.
இன்று மாலை 04.00 மணியளவில், ஆறுமுகநேரி வடக்கு பஜாரிலுள்ள புனித அன்னம்மாள் ஆலயத்தில் அன்னாரது அடக்கத் திருப்பலியும், அதனைத் தொடர்ந்து ஆறுமுகநேரி - அடைக்கலபுரம் சாலையில் பள்ளிவாசல் பஜார் அருகிலுள்ள ஆர்.சி. கல்லறைத் தோட்டத்தில் உடல் நல்லடக்கமும் நடைபெறவுள்ளது.
அன்பு நண்பர் பாஸ்கர் அவர்களின் மனைவி மரணம் அடைந்தார்கள் என்பதை அறிந்து கவலை அடைகிறேன்.நண்பர் பாஸ்கர் மற்றும் அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
4. புற்று நோயால் பல மாதங்களாக வீட்டிலும் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வரும் செய்தி நண்பர்கள் மூலம் சில மாதம் முன் அறிந்தேன்...! posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM - 97152 25227)[26 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24123
இன்று அன்னாரின் மரண செய்தி படித்து மனதுக்கு மிகவும் வேதனை அடைந்தேன்...
அன்னாரின் குடும்பத்தார்களுக்கு எனது ஆழ்த்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன்...
5. வருந்துகின்றோம். posted byM.N.L.Mohamed Rafeeq. (Holy Makkah.)[26 November 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24124
‘தினத்தந்தி’ செய்தியாளர் பாஸ்கர் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபத்தையும்,இரங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். மண்ணில் பிறந்த எல்லா ஆன்மாக்களும் ஒரு நாள் மரணத்தை சுவைத்தே தீரும். எனவே,பிரிவால் வாடும் உறவினர் யாவரும் இது கடவுளின் சித்தம் என பொறுமையைக் கடைபிடித்து இந்த இழப்பை தாங்கிக் கொள்ளும் படி தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றேன்.
8. ஆழ்ந்த அனுதாபங்கள்... posted byS.K.Salih (Kayalpatnam)[27 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24136
செய்தித் துறையில் எல்.கே.ஜி. நிலையிலுள்ள எனக்கு நல்ல பல ஆலோசனைகள் வழங்கி வழிகாட்டி வருவோர் தினத்தந்தி செய்தியாளர் அண்ணன் பாஸ்கரன் அவர்களும், தினமணி செய்தியாளர் அண்ணன் வசந்தகுமார் அவர்களும்...
நகரில் எந்தத் தரப்பு செய்தியானாலும் உடனுக்குடன் வந்து செய்தி சேகரித்து, பாரபட்சமின்றி வெளியிடுவதில் இவ்விரு மூத்தவர்களும், தினகரன் செய்தியாளர் நண்பர் சுந்தர் அவர்களும், தினமலர் செய்தியாளர் நண்பர் இளையபெருமாள், நண்பர் கண்ணன் ஆகியோரும் எப்போதுமே ஆர்வத்துடன் செயல்படுபவர்கள்.
உணர்வுப்பூர்வமாகவும், உற்சாகத்தோடும் துள்ளித்திரிந்த பாஸ்கர் அண்ணன் அவர்கள், தன் மனைவியாரின் உடல்நலக் குறைவு காரணமாக பெரிதும் துவண்டுபோய்விட்டார்கள் என்றால் அது மிகையாகாது. தனது செய்திப்பணியே பாதிக்கப்படும் அளவுக்கு அந்த சோதனை அவரை சில வருடங்களாகவே ஆட்கொண்டது.
தனக்கு இருதய அறுவை சிகிச்சை, இருசக்கர வாகனத்தில் சென்றபோது - மழை நீர் சகதியில் சறுக்கி விழுந்ததில் ஏற்பட்ட விபத்துக் காயங்கள் என இந்த சோதனைகளையெல்லாம் தாண்டி, தன் மனைவியின் உடல் நலக்குறைவு அவரை பெரிதும் பாதித்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
கடவுள் சித்தம் அனைத்தும் நன்மைக்காகவே இருக்கும். அண்ணன் பாஸ்கரனாரும், அவரது ஒரே மகளார் சகோதரி கரோலின் அவர்களும், அக்குடும்பத்தின் இதர உறுப்பினர்களும் பொறுமையாக இருக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
வல்ல இறைவன் உங்கள் யாவருக்கும் மன ஆறுதலைத் தந்தருள்வாராக...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross