காயல்பட்டினம் அலியார் தெருவைச் சார்ந்த அமீர் லாத்தா என்ற ஹாஜ்ஜா அமீர் ஹம்ஸா உம்மாள் - தனது ஹஜ் கடமையை நிறைவேற்றிய பின்னர், 23.11.2012 வெள்ளி அதிகாலை 04.00 மணியளவில் சஊதி அரபிய்யா மக்கா நகரில் காலமானார்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின், மக்காவிலுள்ள புனித ஹரம் ஷரீஃபிற்கு கொண்டு வரப்பட்டு, அங்கேயே ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, மக்காவிலுள்ள பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மக்கா, ஜித்தா மற்றும் புறநகர் பகுதியில் உள்ள காயலர்கள் இந்நல்லடக்கத்தில் கலந்துகொண்டனர். நல்லடக்கம் தொடர்பாக, சஊதி அரசுடனான ஆவணப்பணிகள் உள்ளிட்ட நல்லடக்க நடவடிக்கைகள் அனைத்தையும், ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் மக்கா காயலர் தன்னார்வக் குழுவினர் செய்திருந்தனர்.
இதுகுறித்து, மரணித்தவரின் குடும்பத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
எம் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூமா அமீர் ஹம்ஸா உம்மாள் அவர்கள், உடல்நலக் குறைவு ஏற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்த நாள் முதல் 24 நாட்களாக மருத்துவமனைக்கு அவ்வப்போது சென்று, அவர்களுடைய உடல் நிலை பற்றி மருத்துவரிடம் கேட்டறிந்து, மனப்பதட்டத்தோடு இருந்த எங்களுக்கு அவர்களுடைய நிலை பற்றிய தகவல்களை உடனுக்குடன் அனுப்பி ஆறுதல் தந்ததோடு மட்டுமில்லாமல், சகோதரி துணையோடு வந்திருந்த எங்கள் தாயாருக்கு - ஹஜ்ஜுடைய நேரத்தில் தனது சகோதரியின் உடல் நலக்குறைவால் தனித்துவிட்டோம் என்ற மனத்துயரை போக்கி, பெற்ற பிள்ளைகள் போல் அவர்களின் அருகாமையில் இருந்து ஆறுதல் சொல்லி, பக்கபலமாய் இருந்தது மட்டுமில்லாமல், மர்ஹூமா அவர்களுடைய நல்லடக்க காரியங்களுக்கும் எல்லா ஏற்பாடுகளும் செய்ய உறுதுணையாக இருந்த,
ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் மக்கா காயலர் தன்னார்வக் குழுவினரான ஜனாப் ஹாஜி மூசா சாஹிப், ஜனாப் ஹாஜி செய்யது இப்ராகிம், ஜனாப் ஹாஜி சீனா முஹம்மது, ஜனாப் ஹாஜி Y.M. ஸாலிஹ், ஜனாப் ஹாஜி ஷேய்க் ஸியாத், ஜனாப் ஹாஜி M.I. யூஸுப் சாஹிப், ஜனாப்அப்துல் காதர் (சீனா) அனைவர்களுக்கும் எங்கள் குடும்பம் சார்பாக மனதாழ்ந்த நன்றியையும் ஸலாத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்... جزاك اللهُ خيراً
தங்களின் இப்பெரிய உதவிக்கு வெறும் வார்த்தைகளால் நன்றியைத் தெரிவிப்பது மட்டும் போதாது. உங்கள் உதவிக்கும், ஆதரவுக்கும் கருணையாளன் அல்லாஹ் நிறைவான நற்கூலிகளை ஈருலகிலும் அளித்திட பொறுப்பாளனும், போதுமானவனும் ஆவான். …الحمد لله
இவ்வாறு மரணித்தவரின் குடும்பத்தினரான ஜமான் சகோதரர்கள் (சிங்கப்பூர்) தெரிவித்துள்ளனர்.
தகவல்:
M.R.ரஷீத் ஜமான் மற்றும் குடும்பத்தினர் |