தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாவட்டத்தில் கேபிள் டிவி இணைப்பு வைத்துள்ள சந்தாதாரர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சு.அமிர்தஜோதி வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
தூத்துக்குடி மாவட்டத்தில் கேபிள் டிவி வைத்திருக்கும் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் பணி - சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மூலம் தற்போது நடைபெற்று வருகிறது.
நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் உணவுப் பொருட்கள் வாங்குவதற்காக நேரில் வரும்போது, அவர்களது கேபிள் டிவி கணக்கெடுப்பு குறித்த படிவங்களை - பஞ்சாயத்து க்ளெர்க்குகள் / பில் கலெக்டர்கள் / கிராம உதவியாளர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் ஆகியோர் பூர்த்தி செய்து நிரப்பிட உதவி செய்யலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
துணை வட்டாட்சியர்கள் / வட்டாட்சியர்கள் ஒவ்வொருவரும் அவர்களது பகுதியில் மேற்கண்ட பணி குறித்து கண்காணிக்கலாம் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross