Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:50:03 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9697
#KOTW9697
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், நவம்பர் 27, 2012
DCW ஆலையின் அத்துமீறலைக் கண்டித்து நவ.29இல் நடைபெறும் கடையடைப்புக்கு KEPA குழு வணிகர்களிடம் நேரில் ஆதரவு கோரியது!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4181 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (18) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையின் சில பகுதிகளை மூடுமாறு, தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பரிந்துரை செய்தும், இதுவரை அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்தும், அரசின் மாசு கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையைக் கண்டித்தும், அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் ஊர் நலக் கமிட்டியினர் ஆதரவுடன்,

29.11.2012 வியாழக்கிழமையன்று, காயல்பட்டினத்தில் ஒருநாள் அடையாள முழு கடையடைப்பு நடத்திடவும், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் அன்று மாலை 04.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டமும், இரவு 07.00 மணிக்கு பொதுக்கூட்டமும் நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடையடைப்பு அன்று காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு கோரி, KEPA துணைத்தலைவர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, பொருளாளர் ஹாஜி ஏ.ஆர்.முஹம்மத் இக்பால், மூத்த செயற்குழு உறுப்பினர் ஹாஜி மக்கீ நூஹுத்தம்பி ஆகியோரின் வழிகாட்டலில், காயல்பட்டினம் பிரதான வீதி, கே.டி.எம். தெரு, கூலக்கடை பஜார், எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, விசாலாட்சியம்மன் கோயில் தெரு, ஸீ-கஸ்டம்ஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் வேன் - கார் - ஆட்டோ ஓட்டநர் சங்கங்களில், அதன் பொறுப்பாளர்களிடம், இன்று காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை KEPA குழுவினர் ஆதரவு கோரினர்.

மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் நலன் கருதி நடத்தப்படும் இக்கடையடைப்பிற்கு தாங்கள் முழு ஒத்துழைப்பளிப்பதாக அப்போது வணிகர்கள் தெரிவித்தனர். காட்சிகள் வருமாறு:-









































































































படங்களில் உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by kulam kabeer (chennai) [27 November 2012]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 24140

assalamu alaikum

First of all thanks to almighty allah who made a path to protest against DCW company and management through KEPA and the well wishers of kayalpatnam.

This bundh will be the great revolution in the history of kayal... lets all joint hands with the KEPA, who urge for the welfare of our society.

May allah will as a great solution in this matter...aameen!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by MAC.Mujahith (Mumbai) [27 November 2012]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 24141

மாஷா அல்லாஹ்..." மாஷா அல்லாஹ்..."

ஊரின் நலனுக்காக இப்படி பட்ட கூட்டு முயற்சி மற்றும் அயராத உழைப்பை பார்க்கும் பொழுது நிச்சயமாக தமிழக முதலமைச்சர் என்ன..." பாரத முதல் குடிமகன் (President of இந்திய) மற்றும் பிரதமரின் காதையே பிளக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை...!!!

நிச்சயமாக இன்ஷா அல்லாஹ் இந்த மாபெரும் வரலாற்று திருப்புமுனை ஆர்ப்பாட்டம் வெற்றியடையும்..! வெற்றியடையும்...! வெற்றியடையும்..!

வல்ல ரஹ்மான் நம் அனைத்து இக்லாசான முயற்சி மற்றும் சேவையை கபூல் செய்து நமக்கும் நமது சந்ததியருக்கும் நோயற்ற சுகமான வாழ்வை தந்தருள்வானாக...!ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்..."

இந்த ஆர்ப்பாட்டம் வெற்றியடைய எனது Advance வாழ்த்துக்கள்...!!!

By - MAC .முஜாஹித்
மும்பை.
27-11-2012


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. வெறும் மெல்லாமல் வீரியமாய் நிமிர்ந்து நிற்போம்!
posted by kavimagan (Doha-Qatar) [27 November 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 24142

கடலோடும் காற்றோடும் கந்தகத்தைக் கலக்கின்ற
கொடும்பாவக் கூட்டத்தின் கயமையினை கருகலைப்போம்!
உணவோடும் உயிர்மீதும் விஷம்தன்னை விதைக்கின்ற
வஞ்சகரின் வன்செயல்கள் வளராமல் வேரறுப்போம்!

அல்லாஹ்வை அஞ்சாமல் அற்பசுக பணத்திற்காய்
அன்னைஎம் பூமியதை அன்னியர்க்கு இரையாக்கும்
சண்டாளர் சதிசெயலின் துரோகத்தை தோலுரித்து
சந்ததிகள் சாந்தியுடன் வாழ்வதற்கே வழிசெய்வோம்!

வரலாற்றுப் பெருமைமிகு ஊரெனவே கதைபேசி
வெறும்வாயை மெல்லாமல் வீரியமாய் நிமிர்ந்திடுவோம்!
ஒருபாவம் அறியாத போபாலின் அவலநிலை
ஒருபோதும் காயலுக்கு நேராமல் களம்புகுவோம் !

இருபத்து ஒன்பதாம் தேதியதன் மாலையிலே
அருகாமைத் தொழிற்சாலை தரும்துன்பம் துயரங்கள்
வதைக்காமல் நம்மைநாம் காத்திடவே தோழர்களே
வள்ளல்சீ தக்காதி திடல்நோக்கி அணிவகுப்போம்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Mohamed Ali (Madinah Al Munawwara) [27 November 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24144

அஸ்ஸலாமு அலைக்கும்.

நம் ஊரின் நன்மையை கருதி, வீதி வீதியாக ஏரி, இறங்கி களப்பணி புரியும் இந்த நல்வுல்லங்களுக்கு நாம் ஒவ்வொருவரும் நன்றி கூற கடமைபட்டிருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹு இதன் மூலம் நம் ஊருக்கு நல்லதொரு பலனை தந்தருள்வானாக ஆமின். வஸ்ஸலாம்.

Mohamed Ali.
Madina (Blessed city).


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. ஆட்டம் துவங்கியதும் எதிரணி ஆட்டம் காணத் துவங்கிவிடும்...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [27 November 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24145

டடடடடைன் டைன்..டைன் ட ட ட டைன் டைன்...டடடண் டண் டைன்....என்ன புரியவில்லையா?

KEPA மற்றும் DCW வுக்கான விறு விறுப்பான ஆட்டம்!

KEPA அணி வீரர்கள் மைதானத்துக்குள் இறங்கி விட்டார்கள். இந்த போட்டியில் உள்ளூர் அணியினருக்கு ஆதரவு அமோகமாக இருப்பது பரிவத்தனமாக தெரிய வருகின்றது. இன்னும் சில மணித்துளிகளில் அவர்களது ஆட்டம் துவங்க உள்ளது. இனி விசில் ஊதுவது ஒன்று தான் பாக்கி. உற்சாகமான ஆட்டம்! பலரையும் ஆட்டம்! காண வைக்கும் அபார ஆட்டம்! இது மண்னின் மைந்தர்களின் உரிமைப்போராட்டம்! வெற்றிக் கனியைக் கொய்து தன் சொந்த மண்ணுக்கு தாரை வார்க்கத்துடிக்கும் அணி வீரர்களின் அணிவகுப்பு நடந்து கொண்டிருக்கின்றது. இன்றைய இறுதிப் போட்டியில் வெற்றி வெறும் அணியினருக்கு சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மைய்யத்தினரால் வழங்கப்படும் வெள்ளிக் கோப்பை காத்திருக்கின்றது. அனைவரும் காணத்தவறாதீர்.

நவம்பர் 29 வியாழக்கிழமை மாலை 4:30 மணிக்கு நமதூர் சீதக்காதி திடல் மைதானத்தில்...! உங்களை அன்புடன் அழைக்கின்றது KPEA அமைப்பு. வாருங்கள்...வருகை தாருங்கள்! வாழ்வுரிமைப் போராட்டத்தில் பங்கு கொள்ளுங்கள்...!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Vilack SMA (Nha Be , Vietnam) [27 November 2012]
IP: 14.*.*.* Vietnam | Comment Reference Number: 24146

மருந்து கடைகள் திறந்து இருக்கலாம் . .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:... வெற்றி நமக்கே
posted by Seyed Ismail (Singapore) [28 November 2012]
IP: 203.*.*.* Singapore | Comment Reference Number: 24148

இன்ஷா அல்லாஹ்...

வெற்றி நிச்சயம், எல்லாம் வல்ல அல்லாஹ்வின் துணையால்.

வல்லோன் நம் ஊரையும் ஊர் மக்களையும் என்றென்றும் பாதுகாப்பானாக... நோய் சிரமங்களை நீக்குவானாக... நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வைப்பானாக... இம்மையிலும் மறுமையிலும் நாம் ஒன்று ஒருமிச்சு ஒற்றுமையாக இருக்க அருள் புரிவானாக.. ஆமீன்...

மிக அருமையான புகைப்படங்கள், நம்ம ஊரு பஜாரை ஒரு ரவுண்டு அடித்த மாதிரி இருக்கிறது... மிக்க நன்றி...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. வெற்றிக்கொடி கட்டு
posted by salai s nawas (singapore) [28 November 2012]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 24149

வெற்றிக்கொடி கட்டு
மலைகளை முட்டும் வரை முட்டு

களப்பணி ஆற்றும் ஒவ்வொரு நல் இதயங்களுக்கும் வெற்றி கிடைக்கட்டும்.

தமிழன் இஸ்மாயில் முகத்தில் போராட்ட வெறி இப்போவே தெரிய ஆரம்பித்துவிட்டது. போராட்டம் ஒன்றே தீர்வுக்கு வழி என்று தினமும் கருத்து பதிவில் எழுதி வந்த தளபதி.

- மண்ணின் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Loss of Ecology (Prevention and Payments of Compensation )
posted by Kona AbuBakr & Bros (Pallavaram, Chennai) [28 November 2012]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 24150

அஸ்ஸலாமு அலைக்கும்.

KEPA வின் இம்முயற்ச்சிக்கு எங்கள் ஒத்துழைப்பும் வாழ்த்துக்களும்.

DCW தொழிற்ச்சாலையினால் காயல்பட்டணம் மற்றும் புற நகரங்களின் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுகின்ற பாதிப்பிற்கு DCW விடம் நஷ்டஈடு கோரியும் மேற்கொண்டு சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு கோரியும் உயர் நீதிமன்றத்தில் Loss of Ecology (Prevention and Payments of Compensation ) வழக்கு தொடரலாம்.

சென்னையில் இவ்வாறு தொடரப்பட்ட ஒரு வழக்கில் அனைத்து Leather Tannery களும் கோடிகணக்கில் நஷ்டஈடு செலுத்தியதோடு அரசு விதித்த கட்டுப்பாட்டின் கீழ் செயல்படாத பல Leather Tannery கள் மூடப்படுவதற்கும் இவ்வழக்கு காரணமாக அமைந்தது.

ஆகையால் இது சம்பந்தமாக நல்ல ஒரு வழக்கறிஞ்சரை அணுகி தெளிவுபெற்று உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலும் ஒரு நல்ல தீர்வு காணலாம். இன்ஷா அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. எல்லா புகழும் வல்ல இறைவனுக்க .
posted by Mohamed Salih (Bangalore) [28 November 2012]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 24151

எல்லா புகழும் வல்ல இறைவனுக்க .

மிக அருமயான , மக்களை நேரில் சென்று கடை அடைப்புக்கு அழைப்பு விடுத்தது பார்த்து மிக சந்தோசம் .. நானும் இந்த நேரத்தில் ஊரில் இருக்க முடியலைய என்று என் மனம் வேதனை அடைந்தது .

நமது ஊரின் பெரியோர் வழி காட்டுதலின் பேரில் மிக சிறப்பாக எல்லா வேலையும் வல்ல இறைவனின் துணை கொண்டு இன்று வரை இளைஞர் படை வெற்றி காரமாக நடத்தி வருகிறது ..

இன்ஷா அல்லாஹ் நாளை நடை பெரும் எல்லா நிகழ்ச்சியும் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனை இரு கரம் கூப்பி பிராத்தனை செய்கிறேன் ..

என்றும் ஊரு நலம் நாடும்,
பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் ஷாலிஹ் கே.கே.எஸ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Salai Sheikh Saleem (dubai) [28 November 2012]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24152

அருமையான திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதே இந்த ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் வெற்றிக்கனியை தட்டிச்செல்வது இறையருளால் தீர்ச்சையாகிவிட்ட ஒன்றாகிவிட்டது.

இந்த கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டதிற்க்காக தங்களது சொந்த வேலைகளையும் பொருட்படுத்தாது கடுமையாக உழைத்துவரும் எங்கள் சகோதரர்களுக்கு முதற்க்கண் எங்களின் சிரம் தாழ்த்திய நன்றிகள். எல்லாம் வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் நாம் நமது சமுதாயத்திர்க்காக போராடும் இந்த நல்ல செயல்களை அங்கீகரித்து நமக்கு அதற்க்கான கூலிகளை வெற்றிக்கனியாக தந்தருள்வானகவும் ஆமீன்.

KEPA விற்கு என் தாழ்மையான வேண்டுகோள் எல்லாம், தயவு செய்து கடையடைப்பு போராட்ட நேரத்தில் கண்காணிப்பு குழு ஓன்று மிக வியூஹம் வகுத்து செயல்படவேண்டும்.

கடையடைப்பு போராட்டங்கள் அமைதியான முறையில் வெற்றிகரமாக நடைபெற எங்களின் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும். ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. வெற்றி நிச்சயம்...!!!
posted by M.N.Sulaiman (Bangalore) [28 November 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 24153

அன்பின் KEPA அன்பர்களுக்கு,

அயராது களப்பணி ஆற்றிவரும் தங்களின் உழைப்பு நிச்சயம் மாபெரும் வெற்றி பெரும்...! அவர்கள் எத்தகைய பலம் வாய்ந்தவர்களாக இருப்பினும், இறைவனின் துணைகொண்ட நம் மக்கள் சக்தி முன் நிச்சயம் மண்டியிட போகிறார்கள்.

நம் இஸ்லாத்தில் எத்தனையோ மாபெரும் படைகளை, இறைவனின் துணைகொண்டு சின்னச்சிறு படைகள் வெற்றி பெற்றதை நாமெல்லாம் நன்கறிவோம். இன்ஷா அல்லாஹ், அதன் அடிப்படையில் நமக்கும் இதில் வெற்றி கிடைக்க இருகரம் ஏந்தி இறைவனிடம் பிராத்திப்போம்.

இத்தருணத்தில், நம் மண்ணுக்காக மக்களோடு மக்களாக இணைத்து போராட முடியவில்லை எனும் போது மனம் வெதும்புகிறது. மேலும் KEPA வேண்டுகோளின் படி, வெளிஊரில் வசிக்கும் அன்பர்கள் அனைவரும் தவறாது நம் ஜனாதிபதி & பாரத பிரதமர் அவர்களுக்கு தந்திகள் பல அனுப்பிட தாழ்மையுடன் வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. கார்னர் கிக்
posted by A.R.Refaye (Abudhabi) [28 November 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24154

மிக முக்கியமான தருணம், கால்பந்து போட்டியில் கார்னர் கிக் போல நமக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு!!!

KEPA மூலம் ஒருநாள் அடையாள முழு கடையடைப்பு நடத்திடவும், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் அன்று மாலை 04.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டமும், இரவு 07.00 மணிக்கு பொதுக்கூட்டமும் நடத்திட முனைந்துள்ள இந்நேரத்தில் மிக அவசியமாக பேணப்படவேண்டிய விசியம். பொதுக்கூட்டத்தில் தேவையற்ற கருத்துக்கள் பதியாமல் கால்பந்து போட்டியில் கார்னர் என்று ஒன்று உண்டு. கோல் கம்பத்திலிருந்து 11 மீட்டர் தூரத்திலிருந்து பந்தை கோல் போஸ்ட் நோக்கி உதைக்க வேண்டும். அந்தப் பந்து கோல் வலைக்குள் விழாமல் தடுக்க வேண்டியது கோல் கீப்பரின் வேலை. அனால் அந்த கார்னர் கிக்கை பாய்ந்து கோட்டை விடாமல் கோல் அடித்தால்தான் உலகம் உச்சுக் கொட்டும். எனவே கோல் போட்டே ஆகவேண்டும் என்ற வெறியோடு, தீராத பிரச்சினைக்கு நீங்கள் எடுத்து வைக்கின்ற வாதங்கள் கருத்துகள் சிறப்புடையதாக - தீர்வு காணக்கூடிய வகையில் பேச்சாளர்களின் வார்த்தைகள் அமைய வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.

என் அருமை காயலர்களே ரேசன் கார்டிலும், வாக்காளர் அட்டையிலும், பள்ளி கல்லூரி சான்றிதழ்களிலும் மட்டுமே காயலர்களாக வாழ்பவர்களே! சிந்தியுங்கள்!! நம் சந்ததிகளின் வாழ்விற்காக ஊரணியில் ஓரணியில் திரண்டிடுங்கள் நாசகார வஞ்சகர் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வரும் கொடும்செயலை முறியடிக்க!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. முயற்சி வெற்றி அடைய பிராத்திக்கின்றோம்......
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [28 November 2012]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24155

KEPA-உடன் இணைந்தது களப்பணி ஆற்றும் அனைத்து நல்லுள்ளங்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்.....

உங்களின் முயற்சி வெற்றி அடைய பிராத்திக்கின்றோம்......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by Velli Siddiq (RIYADH) [28 November 2012]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24156

http://www.dcwltd.com/

How ISO gave these certificates to DCW (ISO 9001, OHSAS 18001 & ISO 14001).

Thousands of email & FAX send to ISO office to cancel all ISO CERTIFCATE from DCW.

Attached all snaps waste chemicals mixed on sea.

Contact email id for ISO 9000/ ISO 14000/ HACCP/ OHSMS etc.: qscosro@bis.org.in

http://www.iso.org/iso/home/about/iso_members/iso_member_body.htm?member_id=1794

www.bis.org.in

Address
Bureau of Indian Standards
Manak Bhavan
9 Bahadur Shah Zafar Marg
IN-New Delhi 110002
Tel: +91 11 23 23 79 91
Fax: +91 11 23 23 93 99
E-mail: ird@bis.org.in
Web: www.bis.org.in

Send email snap to DCW Contact also:
ho@dcwltd.com Mumbai Office
office@shpm.dcwltd.com Sahupuram office
office@chn.dcwltd.com Chennai office
office@dhg.dcwltd.com Gujarat office
office@del.dcwltd.com Delhi Office

Sahupuram Product:
CAUSTIC SODA:
HYDROCHLORIC ACID:
BENEFICIATED ILMENITE:
TRICHLOROETHYLENE:
YELLOW IRON OXIDE:
FERRIC CHLORIDE:
UTOX:
PVC:


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. கண்கள் தேடுது காயலை உள்ளம் வாடுது காயலால் வெற்றி நிச்சியம் இன்ஷா அல்லாஹ்.மிக விரைவில்.......
posted by A.W.Md Abdul Cader Bukhari (Mumbai) [28 November 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 24160

பொறுத்து இருந்தது போதும் எத்தனை உயிர்களை பறிக்கொடுத்து விட்டோம்......காயலே விழித்துக் கொள்! அவர்கள் விழிப்பதற்கு முன் ஏனெனில் இது உன்னுடைய நேரம்...........

மச்சான் DCW நீ எங்களுக்கு எதிராக என்ன செய்தாலும் சரி இந்த நாளை நீ குறித்து வச்சுக்கோ....காயலர்கள் வல்ல அல்லாஹ்வின் கிருபைஃயால் ஒன்று கூடிவிட்டோம் இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் உன்னுடைய நாசகர வேளையை அல்லாஹ்வின் உதவிக் கொண்டு முறியெடுப்போம்.இன்ஷா அல்லாஹ்……………………………….

குறிப்பு:

வெளியூர் காயல் சொந்தங்களே!! இது நமக்கு ஒரு நல்ல தருணம் நீங்கள் மறவாமல் நாளை நம் காயல் சந்ததிகளை காப்பாற்ற தயவு செய்து நமது நாட்டின் ஜனாதிபதி,பிரதமர் ஆகியோருக்கு மறவாமல் தந்தி அனுப்புங்கள்......தெரிந்தவர்கள் தெரியாத நம் காயல் சொந்தங்களுக்கு தெரியப்படுத்துங்கள்...............

மறவாதீர்! மறவாதீர்! நாளை தினத்தை மறவாதீர்! அனுப்புங்கள்! அனுப்புங்கள்! ஜனாதிபதி,பிரதமருக்கு தந்தி அனுப்புங்கள்!

விழித்திரு! விழித்திரு! காயலே! விழித்திரு!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. நோயற்ற வாழ்வே........ குறைவற்ற செல்வம்.
posted by s.s.md meerasahib (riyadh) [28 November 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24161

அன்பு DCW சுற்றுவட்டார அனைத்து சகோதர, சகோதரிகளே...... பூனைக்கு மணிக்கட்டுவது யாரு என்று நினைத்து... நினைத்து பல வருடம்களும் நம்மைவிட்டு பிரிந்தன. நம்மில் பலரும் இந்த DCW வின் மாசுக்களால் நோயுற்று.... துன்புற்று நம்மைவிட்டு பிரிந்துள்ளனர்.

இனி இந்த DCW வின் மாசு உயிர்கொல்லி என்ற அரக்கன் நம்மையும், நம் சந்ததிகளையும் பதம் பார்க்கும் முன்பு ஒன்றுபட்டு வென்று காட்ட இதோ KEPA வின் அழைப்பிற்கு செவிமடுத்து நவம்பர் 29 வியாழன் மதியம் 4 மணியளவில் ஒன்றுகூடுவீர் காயல்பட்டினம் சீதக்காதி திடலுக்கு.

நாம் சம்பாதிக்கும் சம்பாத்தியம்களை (பணமானாலும், நம் மனித இனமாலும்) நோயிக்கு பழிகொடுக்க விடமாட்டோம் என்ற உறுதிமொழியை முன்னிறுத்தி KEPA க்கு ஒத்துளைப்பீர். "நோயற்ற வாழ்வே........ குறைவற்ற செல்வம்" என்பதை கூட உணர்ந்திடுவீர். நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. வெற்றி நமதே !!
posted by Salai.Mohamed Mohideen (USA) [28 November 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 24173

பெரியவர்களின் வழிநடத்தலில் உற்சாகத்துடன் நம் சகோதரர்கள் களப் பணியாற்றுவதை காணும் போது... காயலுக்கான விடியல் மிக அருகாமையில் உள்ளது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. இவர்களின் இம்முயற்சி... காலம் காலமாக எவ்வித சலனமுமின்றி உறங்கி கொண்டிருக்கும் நமது மக்களின் மனதில் நாசக்கார DCW என்ற அரக்கனை எதிர்த்து போராட வேண்டும் என்ற வேட்கையை ஆழமாக பதித்து வருவதை உணர முடிகின்றது.

மேலும், பம்பரமாய் சுழலும் KEPA வின் களப்பணி புகைப்படங்களை பார்க்கும் போது இப்போரட்ட களம்... வயதில் பெரிய மற்றும் இளைய தலைமுறை புதிய சமூக ஆர்வலர்களை வெளிக்கொணர்ந்துள்ளது என்றால் அது மிகையாகாது. பொதுவாக, அனைத்து அமைப்பிலும் குறிப்பிட்ட ஒரு சில சமூக பற்றுள்ள சகோதரர்களே அங்கம் வகிக்கின்றனர் என்ற கூற்று பொய்பிக்கப்பட்டு பல்கிப்பெருகி வரும் இச்சமூக ஆர்வலர்கள்தான்... வளமான காயலின் பலமான நம்பிக்கை தூண்கள் !!

எந்த ஒரு போராட்டமும் மக்களின் எழுச்சி மற்றும் ஆதரவுடன்தான் கூர்மையையும் வெற்றியையும் அடையும் என்பதனை பொதுமக்களாகிய நாம் அனைவரும் உணர்ந்து... காயல் வரலாற்றில் NOV 29th - ஐ ஒரு மறக்க முடியாத நாளாக மாற்றுவோம். ஊர் நன்மைக்காக நம்முடைய அனைத்து மனக்கசப்பு & கருத்து வேறுபாடுகளையும் புறந்தள்ளி விட்டு சகோதரத்துவத்துடன் ஓரணியில் ஒன்று திரள்வோம். வெடித்தது மக்கள் புரட்சி; மிரண்டது DCW என்று நாளைய வரலாறு எழுதட்டும் !!

உள்ளங்கை நெல்லிக்கனி போல பாமரர்களும் உணர்ந்துள்ளது போல, தேவையான காரணக் குறிக்கோளுடன் ஏற்கனவே உள்ள அல்லது புதியதாய் தோன்றும் நல்லதொரு சமூக அமைப்புகளால் நம் சமுதாயம் அடைந்து வரும் நன்மைகளை... நாளைய வரலாற்று சுவடுகள் பொன்னெழுத்துக்களால் பொறியட்டும் !!

ஒவ்வொரு நிமிடத்தையும் காசாக்க அல்லது வெட்டியாக கழிக்க நினைக்கும் இப்பூலோகத்தில்... நாளைய விடியலுக்காக தங்களுடைய சுய வேலைகளையெல்லாம் புறந்தள்ளி விட்டு தேனீக்களாய் சுறுசுறுப்புடன் களப்பணியாற்றும் அனைத்து சகோதர்களுக்கும் வல்ல இறைவன் அருள் புரிவானாக !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved