Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:12:12 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9686
#KOTW9686
Increase Font Size Decrease Font Size
திங்கள், நவம்பர் 26, 2012
DCW ஆலையின் அத்துமீறலைக் கண்டித்து நடைபெறும் போராட்டத்திற்கு புறநகர் மக்களிடம் ஆதரவு கோரப்பட்டது!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3068 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையின் சில பகுதிகளை மூடுமாறு, தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பரிந்துரை செய்தும், இதுவரை அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்தும், அரசின் மாசு கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையைக் கண்டித்தும், அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் ஊர் நலக் கமிட்டியினர் ஆதரவுடன்,

29.11.2012 வியாழக்கிழமையன்று, காயல்பட்டினத்தில் ஒருநாள் அடையாள முழு கடையடைப்பு நடத்திடவும், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் அன்று மாலை 04.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டமும், இரவு 07.00 மணிக்கு பொதுக்கூட்டமும் நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்திற்கு ஆதரவு கேட்டும், அன்று நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளக் கோரியும், காயல்பட்டினம் புறநகரில் 25.11.2012 ஞாயிற்றுக்கிழமையன்று KEPA குழுவினர் ஆதரவு கோரிச் சென்றனர்.







காயல்பட்டினம் கடையக்குடி (கொம்புத்துறை), கற்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை), அருணாச்சலபுரம், தேங்காய் பண்டக சாலை, மங்களவாடி, ஓடக்கரை, விசாலாட்சியம்மன் கோயில் தெரு, உச்சினிமாகாளியம்மன் கோயில் தெரு, இரத்தினபுரி, பாஸ் நகர், எல்.ஆர்.நகர், லெட்சுமிபுரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில், ஹாஜி மக்கீ நூஹுத்தம்பி தலைமையில், பல்லாக் அப்துல் காதிர் நெய்னா, புகாரீ (48), ஏ.எஸ்.புகாரீ, ஷஃபீயுல்லாஹ், இப்றாஹீம் (48), எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய், ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, நோனா அபூ ஹுரைரா, எம்.யு.நவ்ஃபல், ஆகியோரடங்கிய KEPA குழுவினர் போராட்டத்திற்கு ஆதரவு கோரினர்.









மக்கள் நலனைக் காக்கும் நோக்குடன் நடத்தப்படும் இப்போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக அவர்கள் அப்போது தெரிவித்தனர்.

தகவல்:
M.W.ஹாமித் ரிஃபாய்

படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அவர்களின் பகுதியில் அதிகமானோர் கொடிய புற்று நோயினால் பாதிக்க பட்டோர் உள்ளனர்...!
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM ) [26 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24110

DCW ஆலையின் (அமில கழிவு) அத்துமீறலைக் கண்டித்து நடைபெறும் போராட்டத்திற்கு புறநகர் மக்களின் ஆதரவு நிச்சியமாக இருக்கும்...

அவர்களின் பகுதியில் அதிகமானோர் கொடிய புற்று நோயினால் பாதிக்க பட்டோர் உள்ளனர்...! மேலும் கடையக்குடி மற்றும் கற்புடையார் வட்ட மீனவர்கள் அதிகம் பேர் தோல் நோயினால் அவதி படுகிறார்கள்...! சில நேரங்களில் அந்த பகுதியில் இந்த அமில கழிவின் விஷ தன்மையால் கடலில் மீன்கள் தானாகவே செத்து மிதப்பது சகஜமாக காணபடுகிறது என்ற குற்றசாட்டு எழுகிறது... ஆனால் மக்களுக்கு இந்த செய்தி பரவலாக போய் அடைவது இல்லை...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இங்கு நாம் எழுப்பும் உரிமைக்குரலால் குஜராத்திலுள்ள தரங்கதாராவே அதிர வேண்டும்...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [26 November 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24111

அநியாயத்திற்கு எதிரான ஆட்டம் துவங்கி விட்டது. காய்கள் சாமர்த்தியமாக நகர்த்தபடுகின்றன. இந்த ஆட்டத்தோடு DCW வின் ஆணவப்போக்கிற்கு ஓர் அடிக்கோடிட்டு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

புறநகர் மக்களை நேரில் போய் சந்தித்தது நாம் அவர்கள் மீது வைத்துள்ள மரியாதையையும் அன்பையும் வெளிப்படுத்துகின்றது. இந்த ஆலையின் பாதிப்பு ஒரு சமுதாயமக்களை மட்டும் குறிவைத்து தாக்குவதில்லை. ஒட்டு மொத்த ஊர் மக்களையும் தான் பாதிக்கின்றது. புறநகரில் வசிப்போரும் தோளோடு தோள் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்து மாபெரும் மக்கள் சக்தியை அரசுக்கும்,மீடியாக்களுக்கும் காட்ட வேண்டும்.

இதுவரை காயல் காணாத அனைத்து சமுதாய மக்களும் ஓர் அணியில் திரண்டு உரிமைக்குரல் எழுப்பும் போது DCW என்ன? அவங்க பரம்பரையே ஆடிப்போக வேண்டும். இங்கு நாம் எழுப்பும் உரிமைக்குரலால் குஜராத்திலுள்ள தரங்கதாராவே அதிர வேண்டும். ஆர்ப்பாட்டமும்,அமைப்புகளின் போராட்டமும் வெற்றி பெற வாழ்த்துக்கள். தயவு செய்து ஆர்ப்பாடம் மற்றும் பொதுக்கூட்டத்தின் அசைபடம்(வீடியோ)வை இந்த தளத்தில் வெளியிடவும். நன்றி! -ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. நல்ல முடிவு காணும் வரை ஓயாமல் இருந்தால் நல்லது
posted by P Azath Jawahar (kayalpatnam/Bangalore) [26 November 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 24112

புறநகர் மக்களின் ஆதரவு என்றுமே உண்டு. ஒன்று மட்டும் சொல்லி கொள்ள விரும்புகிறேன். இந்த போராட்டத்தோடு நிற்காமல் தொடர்ந்து அதை செயல் படுத்தி அந்த ஆலை கழிவுகளை எங்கே கொண்டு செல்கிறது என்று முடிவு காண வேண்டும். இல்லையேல் இந்த போராட்டம் அர்த்தம் இல்லாமல் போகிவிடும். ஆகையால் இந்த முயற்சி எடுத்தமைக்கு நன்றி. நல்ல முடிவு காணும் வரை ஓயாமல் இருந்தால் நல்லது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. சங்கே முழங்கு....!!!
posted by M.N.Sulaiman (Bangalore) [26 November 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 24113

புறநகர் மக்களையும் இணைத்து போராட்டம் நடத்த முயற்சி செய்த KEPA விற்கு நன்றிகள்.

மேலும், தவறாது அணைத்து மீடியா களுக்கும் தகவல் கொடுத்து ஒளிபரப்பு செய்யவும்.

நம் வாழ்வாதார பிரச்சனைக்காக அயராது உழைக்கும் அணைத்து அன்பர்களுக்கும், பிராத்தனையுடன் கூடிய நன்றியை மீண்டும் தெரிவிக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [26 November 2012]
IP: 5.*.*.* | Comment Reference Number: 24118

இது போன்று நமதூர், நமது மாவட்ட எல்லா அரசியல் தலைவர்கள் , நமதூர் அருகில் உள்ள ஆறுமுகநேரி,புன்னகாயல் ஆத்தூர் உளிட்ட அணைத்து சமுதாய மக்களையும் ஒன்று திரட்டி நமது பலத்தை காண்பிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் எல்லாம் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று காரணம் சொல்லி அழைக்காமல் விட்டு விடாதீர்கள். அழைத்தும் வராமல் இருக்கும் நபர்களை அடையாளம் கண்டு நமது அரசியல் வாதிகள் யார் யார் வந்தார்கள் யார் வராமல் இருந்தார்கள் என்பது மக்களுக்கு தெரியும். தயவு செய்து செய்து ஈகோ பார்க்காமல் நமதூர் அனைத்து பெரியவர்களையும் அழைத்து நமது ஒற்றுமையை ஓரணியில் காண வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் நாம் மேற்கொள்ளும் இந்த முயற்சி வெற்றி பெற அருள் புரிவானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...அருமையான முயற்சி
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [26 November 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24120

KEPA குழுவினர் எடுத்து இருக்கும் இந்த முயற்சி மிகவும் அருமையானது. அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் .

DCW ஆலையின் அத்துமீறலைக் கண்டித்து நடைபெறும் இந்த போராட்டத்திற்கு, நாம் அனைவர்களும் ஓன்று இணைந்து குரல் கொடுப்போம் . வெற்றி பெறுவோம் .

வல்ல நாயன் , இந்த நல்ல முயற்சிக்கு நமக்கு வெற்றியை தருவானாக .அமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நகரில் தொடர் தூறல் மழை!  (25/11/2012) [Views - 2649; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved