DCW ஆலையின் அத்துமீறலைக் கண்டித்து நடைபெறும் போராட்டங்களில பங்கேற்க இயலாதோர் ஜனாதிபதி, பிரதமருக்கு தந்திகள் அனுப்ப - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - Kayalpatnam Environmental Protection Association (KEPA) சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து, KEPA அமைப்பின் செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையின் சில பகுதிகளை மூடுமாறு, தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பரிந்துரை செய்தும், இதுவரை அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்தும், அரசின் மாசு கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையைக் கண்டித்தும், அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் ஊர் நலக் கமிட்டியினர் ஆதரவுடன்,
29.11.2012 வியாழக்கிழமையன்று, காயல்பட்டினத்தில் ஒருநாள் அடையாள முழு கடையடைப்பு நடத்திடவும், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் அன்று மாலை 04.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டமும், இரவு 07.00 மணிக்கு பொதுக்கூட்டமும் நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அன்றைய நாளில் போராட்டத்தில் கலந்துகொள்ள வாய்ப்பில்லாதவர்கள், தங்கள் எதிர்ப்பை நமது இந்திய ஜனாதிபதிக்கும், இந்திய பிரதமருக்கும் தந்திகள் மூலம் தவறாமல் தெரிவித்து, இப்போராட்டத்தில் உங்கள் உணர்வுகளையும் வெளிப்படுத்த வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
உங்கள் வசதிக்காக மாதிரி தந்தி வாசகங்கள் இதன்கீழ் தரப்பட்டு்ள்ளது:-
TELEGRAM TO THE PRESIDENT OF INDIA
To
The President of India,
Rasthrapathi Bhavan,
New Delhi – 110 004.
TAKE ACTION AGAINST DCW LTD FOR POLLUTING THE ENVIRONMENT. DENY PERMISSION FOR EXPANSION PLANS OF THE COMPANY AT THE SAHUPURAM UNIT IN TAMIL NADU.
_________________________________________________
TELEGRAM TO THE PRIME MINISTER OF INDIA
To
The Prime Minister of India,
South Block, Raisina Hill,
New Delhi.
India-110011.
TAKE ACTION AGAINST DCW LTD FOR POLLUTING THE ENVIRONMENT. DENY PERMISSION FOR EXPANSION PLANS OF THE COMPANY AT THE SAHUPURAM UNIT IN TAMIL NADU.
இவ்வாறு, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |