காயல்பட்டினத்தில் இன்று அதிகாலை முதல் இதமழை பெய்யத் துவங்கி, காலை 10.30 மணி வரை நீடித்தது. இதனால், நகரின் தாழ்வான பகுதிகளில் சிறிதளவு தண்ணீர் தேங்கியுள்ளது.
காயல்பட்டினம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்கியுள்ள காட்சி:-
1. இது எங்க மம்மி வீடு...! மறக்க மனம் கூடுதில்லையே...? posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[25 November 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24094
நமதூர் அரசு பொதுமருத்துவமனை பல தலைமுறைகளுக்கு முன்பு, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1937 ஆம் ஆண்டு, தென் திருநெல்வேலி ஜில்லா போர்டு தலைவர், திரு,R.Y.I.C.ஈஸ்வரன் பிள்ளை M.L.C அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, அந்த அமைப்பின் உறுப்பினரான, மர்ஹூம்,A.K.பிஜிலி சாகிப் பஹதூர் M.A.L.L.B அவர்களின் முயற்சியால், தென் திருநெல்வேலி மாவட்ட கழகத்தின் பொறியியல் வல்லுநர், திரு N.பாலகிருஷ்ன ஐயர் B.A.B.E. அவர்களின் மேற்பார்வையில், T.K.வீரபாகு பிள்ளை அவர்களால் கட்டிமுடிக்கப்பட்டு, 05-04-1938 அன்று, அன்றைய மதறாஸ் மாகானத்தின் பொதுப்பணித்துறை அமைச்சர், திரு,யாகூப் ஹசன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
ஒரு காலத்தில் காயல்பட்டணத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும், இம்மருத்துவமனைக்கும் ஏதாவது ஓர் முறையில் ஏதவது ஒர் தொடர்பு இருக்கத்தான் செய்தது. அநேகமான நம் பெரியோர்களின் பிறப்பும் இங்குதான் நிகழ்ந்தது. அந்த அளவிற்கு அதன் பயன்பாடும், தேவைகளும், நமதூருக்கு மட்டுமின்றி சுற்றுவட்டாரத்திலுள்ள அனைத்து ஊர்களுக்கும் ஓர் அரிய பொக்கிஷமாய்த் திகழ்ந்து வருகின்றது.
இம் மருத்துவமனைக்காகப் பாடுபட்ட பெரியோர்கள் தமது ஈகை குணத்தால் எல்லோருக்கும் பயன்படும் விதத்தில் தம் சொந்த செலவில் பல வார்டுகளைக் கட்டியும் கொடுத்துள்ளனர். அவர்களில் பலரும் இன்று நம்மிடத்திலிருந்து மறைந்து போய் விட்டாலும், அவர்களின் சேவையைப் பறைசாற்றி படர்ந்து நிற்கும் ஆலமரம் தான் அதற்கு சாட்சி. பல தலைமுறைகள் கண்ட அந்த மரத்தின் கம்பீரமும், பொழிவும் இன்னும் தளர்ந்துபோய் விடவில்லை! அதன் விழுதுகளில் தொங்கி அன்று ஊஞ்சலாடிய நினவுகள் இன்றும் பசுமை மாறாமல் மனதுக்குள் ஊசலடுகின்றது.
எத்தனையோ பல சிறந்த மருத்துவர்கள், Dr.ஜானகி, Dr.பரிமளம், Dr.பானுமதி, Dr.சன்முகசுந்தரம், Dr.அபூபக்கர், போன்றோர் பணியாற்றி மக்களுக்கு சேவை செய்துள்ளதையும் நாம் நினைவுகூரத்தான் வேண்டும்.நள்ளிரவு நேரங்களில் அழைத்த போதெல்லாம் குதிரைவண்டியிலும்,சைக்கிள் ரிக்ஷாக்களிலும் வீட்டிற்கு வந்து சிகிட்சை செய்ததையும் நம்மால் மறக்க இயலாது. எங்கள் பிறப்பிடமான இத் தாய் வீட்டை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியமைக்கு காயல்பட்டணம் டாட் காமிற்கு கோடான கோடி நன்றிகள்...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross