இம்மாதம் 23, 24 தேதிகளில் (வெள்ளி, சனி) முஹர்ரம் 09ஆம், 10ஆம் நாட்கள் என்றும், அந்நாளில் ஆஷூறா நோன்பு நோற்கப்பட வேண்டும் என்றும் காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் சார்பில் அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், நேற்று ஆஷூறா முதல் நாள் நோன்பு நோற்றவர்களுக்காக, காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) சார்பில் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில், நகரின் பல பகுதிகளைச் சார்ந்த ஆண்கள் திரளாகக் கலந்துகொண்டு நோன்பு துறந்தனர். அவர்களுக்கு நோன்புக் கஞ்சி, வடை, பேரீத்தம்பழம், தண்ணீர் பாக்கெட் உள்ளிட்ட பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.
தகவல்:
IIM சார்பாக,
M.A.அப்துல் ஜப்பார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
[செய்தி திருத்தப்பட்டுள்ளது @ 14:21 / 24.11.2012] |