சஊதி அரபிய்யா - மக்கா: காயல்பட்டினம் அலியார் தெருவைச்சார்ந்த மர்ஹூம் சிராஜுத்தீன் அவர்களின் மனைவி 84 வயது நிறைந்த அமீர் ஹம்ஸா உம்மா அவர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற தனியார் ஹஜ் நிறுவனம் மூலம் சென்ற அக்டோபர் 15 ஆம் தேதி அன்று புறப்பட்டு புனித மக்கா வந்தடைந்தார்கள்.
ஹஜ்ஜிற்கான கிரியைகளை தொடர்ந்து நிறைவேற்றி வந்த அவர்கள், கடந்த துல்ஹஜ் பிறை 9 அன்று அரஃபாவில் தரித்து வணக்கங்களை முடித்து மறுநாள் பிறை 10 அதிகாலை மினாவில் வந்திறங்கிய அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மக்கா அஜீசியாவிலுள்ள KING ABDULLAH MEDICAL CITY மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள்.
கடந்த 30 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர்கள், சிகிச்சை பலனின்றி இன்று 23.11.12 வெள்ளி அதிகாலை 04 மணியளவில் மரணமடைந்தார்கள் இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழை பாவம் பொறுத்து, அன்னாரின் ஹஜ்ஜை ஏற்றுக்கொண்டு மறுமையில் 'ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸுல் அஃலா' வெனும் மேலான சுவனபதியை தந்தருள்வானாக! அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு வல்ல ரஹ்மான் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக!
அன்னாரின் நல்லடக்க விபரங்கள் அடுத்து தருகிறோம் இன்ஷா அல்லாஹ்.
13. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[23 November 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24051
அஸ்ஸலாமு அலைக்கும்
'''''இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன் ''''''
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹும் அவர்களின் பிழைகளை பொறுத்து.மர்ஹும் அவர்களின் ஹஜ்ஜை ஏற்றுக்கொண்டு 'ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸு" எனும் அவனின் மேலான சுவனபதியை கொடுத்து.மர்ஹும் அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு வல்ல இறைவன் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக. ஆமின்..
மர்ஹும் அவர்களின் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் எங்களின் சலாத்தை தெரிவித்து கொள்கிறோம்.
14. புனித மண்னில் பிரிந்த உயிர்...பெரும் பாக்கியமே...! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[23 November 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24052
உலகில் பிறந்த அனைத்து ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன். மர்ஹூமா வர்களைன் பிழைகள் யாவையும் பொறுத்து மேலான சுவர்க்கப்பதியை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியருள்வானாக!அமீன்.
அரஃபாவில் தரித்து ஹஜ் கடமையை முடித்து விட்டு மினாவில் வைத்து உடல் நலம் குன்றியதால் மருத்துவமனையில் சேர்த்து சிகிட்சையளித்த பின் வல்ல அல்லா அவர்களை அழைத்துக் கொண்டான். அன்று பிறந்த பாலகரை போன்ற வெள்ளை மனதுடன் விட்டு பிரிந்த மர்ஹூமா அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற தரஜாவை எண்ணி மன ஆறுதல் அடைந்து அவர்களின் மஃபிரத்துக்காக துஆச் செய்வதோடு சபூர் செய்து கொள்ளும்படி நண்பர் ஜமான் மற்றும் அன்னாரது குடும்பத்தினருக்கு மிகத் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றேன்.
21. Re:... posted bySalai Sheikh Saleem (Dubai)[24 November 2012] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24068
எல்லாம் துறந்து இறை இல்லம் காணவந்த பெருமகள்
அன்று பிறந்த பாலகனைப்போல் இறைவனடியில் மீளாத்துயில் கொள்கிறார்கள் - இன்னா இல்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். மர்ஹூமா அவர்களின் சொர்க்கத்து வாசம் அல்லாஹ் அருளால் நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. இழந்து வாடும் குடும்பத்தார்களுக்கு அல்லாஹ் பொறுமையை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.
மர்ஹூமா அவர்கள் சிங்கப்பூர் தம்பிகள் ஷேக் ஜமான், சிங்கை காயல் நல மன்ற தலைவர் ரஷீத் ஜமான் ஆகியோரின் பெருமா எனபது இங்கு குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் மற்றும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் அஸ்ஸலாமு அலைக்கும்.
23. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன் posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[24 November 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24070
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்
புனித மண்ணில் ரூஹு பிரிந்திருக்கிறது!
புனித பூமியிலிருந்து அல்லாஹ்வின் புறத்தில் சென்றிருக்கும் அன்னாரின் ஹஜ்ஜையும் ஏற்றுகொண்ட ஹஜ்ஜாக ஆக்கி,அவர்களின் பிழைகளையெல்லாம் பொருத்து ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்ற நற்பதவியை எல்லாம் வல்ல அல்லாஹ் கொடுத்தருள்வானாக ஆமீன்!
அன்னாரைப் பிரிந்த துயரில் வருந்தும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபம் கலந்த ஆறுதளுடைய சலாதினை தெரிவித்து கொள்கிறோம்!
அஸ்ஸலாமு அழைக்கும்!
சபூருடன்,
முஹம்மது ஆதம் சுல்தான் மற்றும்
ஹாஜி "கலவா" அபூபக்கர், அவர்தம் இல்லமான
"காயல் ஹௌசில்" வசிக்கும் காயல் மற்றும் வெளியூர் சகோதரர்கள்!---யான்போ
24. Re:... posted bykader K.M (Dubai)[24 November 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24071
'''''இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன் ''''''
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹும் அவர்களின் பிழைகளை பொறுத்து.மர்ஹும் அவர்களின் ஹஜ்ஜை ஏற்றுக்கொண்டு 'ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸு" எனும் அவனின் மேலான சுவனபதியை கொடுத்து.மர்ஹும் அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு வல்ல இறைவன் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக. ஆமின்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross