மழைப்பருவத்தையொட்டி, காயல்பட்டினத்திலுள்ள பல இடங்களில் உயர்ந்து வளர்ந்திருக்கும் பன்னீர் பூ மரங்கள் பூத்துக் குலுங்கிய காட்சி காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது.
தற்போது அம்மரங்களில் கம்பளிப் பூச்சிகள் (முசுக்கொட்டைப் புழு) கொத்து கொத்தாக உற்பத்தியாகி, வருவோர் போவோர் மீது அவையும் - அவற்றின் முடிகளும் விழுந்த வண்ணம் உள்ளன. இதனால் அவர்களுக்கு உடம்பில் அரிப்பு ஏற்பட்டு - அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது தவிர, ஆங்காங்கே வளரும் முருங்கை மரங்கள் உள்ளிட்ட - இவ்வகை உயிரினத்திற்கு விருப்பமான மரங்களில் இவற்றின் பெருக்கம் அதிகளவில் உள்ளது. அவ்வாறு பெருகும் இப்புழுக்கள், அருகிலுள்ள வீடுகளுக்குள்ளும், அவற்றின் சுவர்களிலும் தஞ்சமடையத் துவங்கியுள்ளன.
படங்களில் உதவி:
முஹம்மத் காஸிம் |