காயல்பட்டினம் உச்சினிமாகாளியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள காட்டுப் பக்கீர் வலிய்யுல்லாஹ் தர்கா அருகிலுள்ள நீரோடையில் DCW ஆலையின் கழிவுநீர் கலந்து வரும் காட்சிகள் பின்வருமாறு:-
18.11.2012 அன்று நண்பகல் 12.25 மணியளவில் இக்காட்சிகள் பதிவு செய்யப்பட்டது. இந்த ஓடைவழியாகச் செல்லும் கழிவு நீர் - நிறைவில் காயல்பட்டினம் கடற்பரப்பில் கலப்பது குறிப்பிடத்தக்கது.
1. இதுவே நகரில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு அவதிபெரும் நோயாளிகளின் ஆவலும் எதிர்பார்ப்பும்... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM )[20 November 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23980
நகர ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், பொதுமக்கள் மூலம் KEPA அறிவித்து இருக்கும் DCWவின் மாசு கட்டுப்பாடு விதிமீறலைக் கண்டித்து நவ.29இல் கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் சரியே...
அணைத்து மக்களும் கண்டிப்பாக இந்த DCWவின் அநீதிக்கு எதிரான ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்... இதுவே நகரில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு அவதிபெரும் நோயாளிகளின் ஆவலும் எதிர்பார்ப்பும்...
ஒற்றுமையுடன் நமது ஆர்பாட்டத்தை வலுபெற செய்வோம்... வல்ல இறைவன் துணை புரிவான்... ஆமின்..
2. Re:...ஓரணியில் நின்று போராடுங்கள்! posted byOMER ANAS (DOHA QATAR.oraniyil )[21 November 2012] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 23994
ஆகா! எவ்வளவு தெளிவாக அனைத்து மக்களும் புரியும் விதமாக எடுக்கப்பட்ட காட்சிகள். காயல்.காமின் மூலம் தினமும் நமக்கு கடல் கலங்கிய காட்சிகளும் கண்டு, இந்த DCW நாளை காயல் என்ற ஒரு ஊரே இல்லாத அளவிற்கு ஒரு வரை படத்தை நாளைய உலகுக்கு தந்து விடும் என்று புரிகிறது. எவ்வளவு பெரிய துரோகம் நமக்கு இழைக்கப் பட்டுக்கொண்டு இருக்கிறது.
இனியாவது மக்களுக்கு விடிவு காலமும், இந்த அரக்கனுக்கு முடிவு காலமும் வரவேண்டும்.
மக்களே ஊரணியில், ஓரணியாக நின்று ஒற்றுமையாக ஒன்று பட்டுக் குரல் கொடுங்கள். எங்களால் இதில் இணைந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் நீங்காமல் எங்கள் மனதில் இருப்பினும், உங்களைப் போன்றோர் KEPA மற்றும் அனைவர்களின் இந்த முயற்ச்சிக்கு அல்லாஹ் என்றும் வெற்றியை தந்தருள்வானாக என்று என்றும்இறைவனை பிராத்திதவண்ணம் இருப்போம். ஆமீன்!
3. மறவாதீர் நவம்பர் 29 ஆலைக்கு சங்கூதும் நாள்...! காயலின் உரிமைக்குரல் உலகிற்கு கேட்கும் விதம் ஒலிக்கப்போகும் நாள்...! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[21 November 2012] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24007
அட! இது என்ன புது குழப்பமா இருக்கு?
காட்டு பக்கீர் வலிய்யுல்லாஹ் தர்கா அருகிலுள்ள ஓடையில், DCW ஆலையின் கழிவுநீர் கலந்து கடலுக்கு வருதா?
எதுக்கும் நம்ம காட்டு மொகுதூம் பள்ளி பக்கம் போய் ஒரு சுத்து பாருங்க...! ஒரு வேளை பாதாள சாக்கடை மாதிரி பைப் லைன் போட்டு அண்டர் கிரவுண்டுலெ பாலப்பா, சீனியப்பா அடக்கஸ்தலங்களையும் தாண்டி அந்த பக்கமா கடலுக்குள் புகுத்தியிருந்தாலும் இருப்பானுங்க...!
சனியனுக்கு சங்கு ஊதி சாவுமணி அடிக்க, நம் மக்களின் தார்மீக உரிமைகளைத் தகர்த்தெறிந்து தான்தோன்றித்தனமாக செயல்படும் DCW வின் அட்டூழியத்தை ஒழிக்க, அதன் அதிகார வர்க்க சகவாசத்தை முறியடிக்க காயல்மாநகரத்தின் மண்ணின் மைந்தர்களே... அணி திரளுங்கள்! பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள்!
நாம் நம் மக்கள் நம் சந்ததிகள் நிம்மதியாக வாழ வேண்டும் என சூளுரைத்து நவம்பர் 29-ல் நடக்கவிருக்கும் முழு கடையடைப்பு மற்றும் ஆலைக்கெதிரான முற்றுகைப் போராட்டங்களில் சிறியவர், பெரியவர், ஆண்கள், பெண்கள், முதியோர்கள் என அனைவரும் பங்கு பெற்று காயலின் ஆயுளை திடப்படுத்த முன் வாருங்கள்!
இது நாம் நம்மக்காக, நம் சந்ததிகளின் அநியாயச் சாவுகளை தடுத்து நிறுத்தி, ஊரையும் ஊர் மக்களையும் காப்பாற்ற ஒன்று படுவோம்! மறவாதீர் நவம்பர் 29 ஆலைக்கு சங்கூதும் நாள்...! காயலின் உரிமைக்குரல் உலகிற்கு கேட்கும் விதம் ஒலிக்கப்போகும் நாள்...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross