காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டர் புதிய கட்டிடத்தின் மேல்தளத்தில், மாணவியர் விடுதி கட்டிட தீர்மானிக்கப்பட்டு, பணிகள் துவக்கப்படும் நிலையிலுள்ளதாகவும், மொத்தம் 40 லட்சம் ரூபாய் செலவினம் கொண்ட இக்கட்டிடப் பணிக்கு ஒரு பங்குக்கு ரூ.10,000 வீதம் 400 பங்குதாரர்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஃவா சென்டர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்புள்ள சகோதர-சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
கடந்த 16 வருடங்களாக நமது தஃவா சென்டர் செய்து வரும் அரும் பணிகளுக்காக ஒத்துழைப்பு தந்து
கொண்டிருக்கும் உங்களுக்காக நமது நிh;வாகிகளும் மாணவர்களும் துஆ செய்கின்றனர்.
நமது தஃவா சென்டர் கீழ்தளக் கட்டிடம் திறக்கப்பட்டு அல்லாஹ்வின் கிருபையால் செயல்பட்டு வருகிறது. (அல்ஹம்துலில்லாஹ்) கீழ்தளத்தில் அலுவலகம், மாணவ மாணவியருக்கான வகுப்பறை, கூட்ட அரங்கம் ஆகியன இருக்கின்றது.
இதில் மாணவ-மாணவியருக்கான வகுப்பறைதான் அவர்களுக்கான தங்கும் விடுதியாகவும் இயங்கி வருகிறது.
எனவே மேல்தளத்தில் மாணவ - மாணவியருக்கான தங்கும் அறைகளுக்கான கட்டிட வேலையை துவங்கலாம் என்று எண்ணியுள்ளோம்( இன்ஷாஅல்லாஹ்). இதற்கு 6500 சதுர அடிக்கு ரூபாய் 40 இலட்சம் செலவாகும் என்று பொறியாளரால் கணிக்கப்பட்டுள்ளது.
இக்கட்டிடம் மாணவ-மாணவியருக்கான தங்கும் விடுதி, பாத்ரூம் வசதி, விடுதி காப்பாளர் அறை மற்றும் பெண்களுக்கான தனி நூலகம் ஆகிய ஏற்பாடுகளுடன் அமையவுள்ளது (இன்ஷாஅல்லாஹ்).
இங்கு தங்கியிருக்கக் கூடிய மாணவ - மாணவியருக்காக அமையவிருக்கும் இக்கட்டிடப்பணிக்கு தேவைப்படும் தொகையை நாங்கள் தலா ரூ10,000 வீதம் 400 பங்குகளாகப் பிரித்து - இறந்த பிறகும் நன்மை தரக்கூடிய ஸதக்கத்துன் ஜாரியாவாக அனைவருக்கும் கிடைக்க வழிசெய்துள்ளோம்.
இதில் முதல் பங்கை, இஸ்லாம் மார்க்கத்தைப் புதிதாக தன் வாழ்வியலாக்கிக் கொண்ட சகோதரர் அப்துர்ரஹ்மான் பென்சியான் அவர்களும், இரண்டாவது பங்கை, இஸ்லாம் மார்க்கத்தைப் புதிதாக தன் வாழ்வியலாக்கிக் கொண்ட சகோதரி ஒருவரை மணமுடிக்கவிருக்கும் செங்கோட்டையைச் சேர்ந்த சகோதரர் ஹசன் அவர்களும் தந்து - பங்கு வரிசையைத் துவக்கியுள்ளார்கள். (அல்ஹம்துலில்லாஹ்)
நீங்களும் இத்திட்டத்தின் கீழ் பங்குதாரர்களாகி, அல்லாஹவிடம் - இந்த நிலையான மறுமைக்குரிய நன்மையை அடைந்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு, காயல்பட்டினம் தஃவா சென்டர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |