இம்மாதம் 24, 25 தேதிகளில் (சனி, ஞாயிறு) முஹர்ரம் 09ஆம், 10ஆம் நாட்கள் என்பதால், அந்நாட்களில் முஸ்லிம்கள் பலர் நோன்பு நோற்றனர்.
அதனடிப்படையில், இன்று ஆஷூறா இரண்டாம் நாள் நோன்பு நோற்றவர்களுக்காக, காயல்பட்டினம் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியின் சார்பில் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில், நகரின் பல பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு நோன்பு துறந்தனர். அவர்களுக்கு நோன்புக் கஞ்சி, வடை, பேரீத்தம்பழம், தண்ணீர் பாக்கெட் உள்ளிட்ட பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன. பெண்களுக்கு தனியிட வசதி செய்து நோன்பு துறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தகவல் & படங்கள்:
Y.M.முஹம்மத் தம்பி
AKM ஜுவல்லர்ஸ், காயல்பட்டினம். |