N.T.B அவர்களும் ,சாகுல் ஹமீத் அவர்களும் நம் தாயக மண்ணில் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (YANBU)[20 November 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23977
1978 ஆம் வருடம் ரியாதில் அல்ஜுமேய் நிறுவனத்தின் வீட்டில் வசிக்கும் என்னையும், என் நண்பர் மெய்னாகாதரையும் சந்திக்க வந்திருந்த என் அருமை நண்பர் N.T.பாதுல் அஷாபும், மரியாதைக்குறிய ஹபீப் ஹாஜியார்(நெசவு தெரு) ஆகியோரும் ஜும்மா தொழுதபின்னர் பகல் உணவை முடித்து விட்டு,
நமதூர் மக்கள் ரியாதில் எத்தனைபேர் இருக்கிறோம் என்று எண்ணத் தொடங்கிக்னோம், ஒழுங்கா எண்ணினால் ஒன்பது, பத்தை தாண்டவில்லை. அவ்வளவு குறைவானவர்கள் இருந்தோம்.
அக்குறைவானவர்களை வைத்து அவர்களிடமிருந்து பண உதைவியைப்பெற்று நமதூரில் இருக்கும் ஏழை எளியவருக்கு உதவினால் என்ன? என்ற நல்லெண்ண கால்கோலை அன்று ஊன்றினோம். அந்த நல்லெண்ண காற்று அரபு மண்ணில் அங்கெனாதபடி எங்கும் வீசியதால், ஏராளமான நல மன்றங்கள் நான், நீ என்று போட்டிபோட்டு கொண்டு புண்ணியங்களை செய்து குவிக்கின்றன.அல்ஹம்துலில்லாஹ்!
ரியாதில் எவருக்கும் எந்த இக்கட்டான நேரத்தில் ஒரு நெருக்கடி வந்தாலும் ஓடோடிச்சென்று உதவ முன்வருபவர்களில் ஒருவரான அருமை நண்பர் N.T.B யின் சேவை என்றும் என் இதயத்தில் பதிவு ரேகையாக பதிந்துள்ளது.
EXIT அடித்து ஏர்போர்ட்டில் பயணமேற்கொள்ளவிருந்த காயல் சகோதரை காப்பாற்றி, அவருக்கு வேலை வாங்கி கொடுத்ததோடு, எராளமான நமதூர் நண்பர்களுக்கும் வேலை வாய்ப்புகளையும் பெற்று கொடுத்ததின் புண்ணிய பணியின் முன்னணி வரிசையில் ஒருவரானவர் N.T.B என்றால் அது மிகையல்ல!
அன்பு நண்பர்களான N.T.B அவர்களும் ,சாகுல் ஹமீத் அவர்களும் நம் தாயக மண்ணில் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறேன்!
அரபகத்தில் தற்போதுள்ள நிலைமை, அடுத்தவர்களுக்கு வேலைபெற்று தரக்கூடிய அளவிற்கு, அவர்களுக்கு
கால அவகாசமில்லாமல் பெரும்பாலோர்கள் பறந்துகொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்!
அது உண்மைச்செய்தி என்றால் அது வருத்தமான செய்தியே!
நம் காயல் மண்ணின் மைந்தர்களுக்காக சிறிது நேரத்தை ஒதுக்குங்கள், அப்படி ஒதுக்கும் நேரமானது அந்த வேலையற்றவருக்கு மட்டுமல்ல அந்த குடும்பத்திற்கு வாழ்ஒளி ஏற்றிய ஒப்பற்ற உன்னத காரியத்தை செய்த மன நிம்மதியைப்பெறுவீர்கள் இன்ஷா அல்லாஹ்!
உதாரணத்திற்கு தற்போது நான் வசிக்கும் யான்போ நகரத்தை எடுத்துக்கொள்ளுங்கள், அமைதியான அழகான ஊர் மட்டுமல்ல, வளர்ச்சியின் உச்சாணியை எட்ட எறும்பை விட சுறுசுறுப்பாக இயங்கும் இலட்சக்கணக்கான வேலையாட்களும், வல்லுனர்களும் விடிபொழுது வரை உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்
இங்கு நம் நண்பர்களுக்கு வேலைவாங்கி தருவதில்
நம் காயலர்கள் மும்முரம் காட்டுகிறார்கள், குறிப்பாக மரியாதைக்குறிய ஹாஜி "கலவா" அபுபக்கர் அவர்கள் அவர்களின் தம்பி இபுறாகீம், வெல்கம் சிங்கை ஹவ்ஸ், S.T.நிறுவனதர்களாகிய சுல்தான் வகையராக்கள் மற்றும் ராயல்கமிஷன் சகோதரர்கள் அனைவர்களும் மிக, மிக அக்கறையுடன் செயல்படுவதைப்பார்த்து பெருமையும் பெருமகிழ்வும் அடைகிறேன் அல்ஹம்திலில்லாஹ்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross