செய்தி: கடற்கரையில் வாகன நிறுத்தத்திற்கு கடற்கரை பயனாளிகள் சங்கத்தால் அமைக்கப்பட்ட எல்லைக்கோட்டை நகராட்சி ஆணையர் பார்வையிட்டார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இரண்டும் ஒன்றல்ல! posted bykavimagan (qatar)[22 November 2012] IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 24008
நான் பதில் கூற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள
உமர் காக்கா அவர்களுக்கு நன்றி! ஆனால்,களத்திலிருந்து
நேரிடையாக உண்மையை விளக்கியுள்ள நண்பர் ஹமீத்
ரிஃபாய் அவர்களது பதிலே போதுமானது என்று நம்புகிறேன்.
உமர் காக்கா அவர்களே! நீங்கள் எழுதியதைத்தான் ஆதம்
சுல்த்தான் காக்கா எழுதியுள்ளதாக எப்படிச் சொல்கின்றீர்கள்.
ஒரு விஷயத்தை அவர்கள் சுட்டிக் காட்டியுள்ள விதத்தில்,
கண்ணியமும், நளினமும், உண்மையான ஆதங்கமும்
இருக்கிறது. ஆனால் உங்கள் கருத்திலோ, குரோதமும்
காழ்ப்புணர்ச்சியும் தாண்டவம் ஆடுவதை தாங்கள் அறிய
வில்லையா?
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்பவர் என்றும், நீதானா
அந்தக் குயில் என்றும், அவன்தானா இவன் என்றும் நீங்கள்
இழிவு படுத்த நினைப்பது யாரை? எப்படி உங்கள் கருத்தும்
ஆதம் சுல்த்தான் காக்கா அவர்களது கருத்தும் ஒன்றுபடும்?
ஆதங்கத்தை வெளிப்படுத்துவற்கும், அவமானப் படுத்த
விழைவதற்கும் உள்ள வித்தியாசத்தை அனைவரும் அறிந்தே
இருக்கின்றார்கள். தூங்குபவர்களை எழுப்பி விடலாம். பாசாங்கு
செய்பவர்களை?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross