செய்தி: DCW ஆலையின் அத்துமீறலைக் கண்டித்து நவ.29ஆம் தேதி கடையடைப்பு, கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம்! வெளியூர் - வெளிநாடுவாழ் காயலர்களும் கலந்துகொள்ள அழைப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
குடத்துக்குள்ளெ பாங்கு சொன்னா...கோஸ்மறைக்கா கேட்குப்போகுது...? posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[23 November 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24027
சட்ட ஒழுங்கு பிரச்சனையைக் கருதி காவல்துறை அனுமதி மறுப்பு...? இது நமது உரிமையைத் தட்டிக் கேட்க ஆலையின் கதவுகளை தட்ட மறுக்கப்பட்ட மிக வேதனைக்குரிய விஷயம்.
காயல்வாசிகள் கட்டுக்கடங்காதவர்களோ? கன்னியக்குறைவானவர்களோ அல்ல! ஆர்ப்பாட்டம் என்பது அந்த ஆலையின் முன் ஜனநாயக விதிகளுக்குட்பட்டு கோஷங்கள் எழுப்பி மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு இவ் விஷயத்தை கொண்டு செல்வதே நம் நோக்கம். அங்கு சென்று ஆக்கிரமிப்பு நடத்தவோ? அடாவடித்தனம் பண்ணவோ அல்ல!
காவல்துறையினர் அவர்கள் தரப்பு நியாயங்களைதான் பார்ப்பார்கள். எத்தனையோ போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் காவல்துறையின் அனுமதியையும் மீறி நடந்து கொண்டு தான் இருக்கின்றது.
ஊருக்குள்லேயே கூக்குரல் இட்டு சாதிக்கப் போவது எதுவுமில்லை. சம்பந்தப்பட்ட ஆலைக்கு முன் பொது மக்கள் அமைதியாகச் சென்று தங்கள் எதிர்ப்பை வாசகங்கள் அடங்கிய தட்டிகள், பேனர்கள், கோஷங்கள் மூலம் தெரியப்படுத்தலாம். ஏன்? கருப்பு பேட்ஜ் அணிந்து வாயில் கருப்பு துணியைக் கட்டிக் கொண்டு அமைதி ஊர்வலம் கூட நடத்தலாம். இதனால் சட்ட ஒழுங்கோ? கலவரமோ ஏற்படப் போவதில்லை!
இத்தகைய உறுதி மொழிகளை காவல்துறையின் உயர் அதிகாரிகளுக்கு ஆர்ப்பாட்டக்குழு எழுத்து மூலம் உறுதி மொழிக் கடிதம் கொடுத்து DCW வுக்கு முன்பாகவே ஆர்ப்பாட்டம் நடத்தும் அனுமதியைப் பெறலாம்.
இது ஒரு தனிமனித பிரச்சனை அல்ல! ஒட்டு மொத்த ஊர் மக்களின் பிரச்சனை! உரிமைப் பிரச்சனை! இதற்கு பிறகும் காவல்துறை அனுமதி தர மறுக்குமேயானால் தடைகளை மீறி துணிவுடன் நாம் அங்கு செல்ல வேண்டும். கைது செய்வார்கள்.செய்யட்டும். வழக்குப்பதிவு செய்வார்கள் செய்யட்டும். அதிக எண்ணிகையில் கைது படலம் நடக்குமேயானால் அது அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
நம் தார்மீகப் போராட்டத்தின் நியாங்களை நீதிமன்றத்தில் ஆதாரங்களோடு எடுத்துரைக்க நல்லதோர் வாய்ப்பு. இதை ஆர்ப்பாட்டக் குழு மறு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளட்டும். சட்ட ரீதியான சவால்களை நாம் சட்டத்திற்குட்பட்டே சமாளிக்கலாம். அதை விடுத்து ஊருக்குள் கூப்பாடு போடுவதால் ஒரு பயனும் கிடைக்கப் போவதில்லை!
-ராபியா மணாளன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross