நல்லோருக்குப் பெய்யும் மழை எல்லோருக்கும்...! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[23 November 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24054
நம் உயிரினும் மேலான நபிகள் நாயகம் மழை மேகம் மற்றும் இடியோசை கேட்கும் போது பரபரப்போடு விண்ணை நோக்கியவர்களாக இறைவனிடத்தில் பிரார்தனை செய்வார்கள். காரணம் அல்லாஹ்வின் அருட்கொடையான மழைத்துளி வானிலிருந்து புறப்பட்டு பூமியை அடைவதற்கு முன் இடைவெளியில் இறைவனால் நிச்சயிக்கப்படுகின்றது முஸீபத்தானதா? முபாரக்கானதா? என்று!
எனவே, நாயகம் கற்றுத்தந்த மழைக்கான துஆ மற்றும் தொழுகையில் நாம் நல்ல ரஹ்மத்தான மழைக்காக இன்றளவும் பிரர்த்தனை செய்து வருகின்றோம். கிலோ கணக்கில் காய்ந்த வற்றலைக் கொட்டி எறியூட்டி யாகம் நடத்துவதும் கழுதை மற்றும் நாய்களுக்கு திருமணம் செய்வித்து மழை பெற வேண்டி மடமைகளில் மூழ்கும் மனித குலத்திற்கு, மா நபிகள் காட்டித் தந்த வழிமுறைகளே உகந்தம் தகுந்ததுமாகும். வல்ல நாயன் வான் மழையை வளம் கொழிக்க நலம் செழிக்க வாகய் வரச் செய்திடுவானாக! ஆமீன்.
“நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை”
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross