செய்தி: DCW ஆலையின் அத்துமீறலுக்கெதிரான போராட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து தெருத்தெருவாக KEPA குழு பரப்புரை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்று...சும்மா அதிரட்டும்....காயல் மக்களின் தார்மீக முழக்கம்...! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[29 November 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24175
(முந்தைய கருத்துக்களின் தொடர்ச்சி..
8) போர்க்கால அடிப்படையில் இந்த ஆலைக்கு எதிராக நாம் நம் மக்கள் சக்தியை ஒன்று திரட்டி போராட முனைய வேண்டும். பொறுத்தது போதும்! இனி பொங்கி எழுவதுதான் புத்தி!
9) கேன்சர் வந்து மடிந்து கொண்டிருப்பவர்கள் கொஞ்சம் நஞ்சமில்லை! பலவிதமான நோய்க் காரணிகளுக்கு இந்த பாழாப்போன கழிவு கடலில் கலப்பதும், ஆலையின் புகை காற்றில் மிதப்பதும் தான் காராணமே அன்றி வேறேதுமில்லை!
10) குடும்பத்துக்கு ஒன்னுங்கிற கணக்கு போயி இப்ப குடும்பமே இப்படித்தான் எனும் நிலைக்கு ஆளாக்கிய அரக்கனை வேறோடு வீழ்த்த காயல் மக்களே! அணி திரளுங்கள்... நமக்காக நாம் நம்மைக் காப்பதற்காக.
11) காயலர் நலனில் அக்கறை கொண்டுள்ள நமது இணைய தளம் இதற்கான பணிகளில் மும்முரமாக இறங்கி செயல்பட வேண்டிய காலத்தின் கட்டாயமும், கடமையும் உள்ளது. இனியும் நம் மக்களை இந்த ஆலை அரக்கனுக்கு காவுகொடுக்கக் கூடாது.
12) நம் மக்களின் தார்மீக உரிமைகளைத் தகர்த்தெறிந்து தான்தோன்றித்தனமாக செயல்படும் DCW வின் அட்டூழியத்தை ஒழிக்க, அதன் அதிகார வர்க்க சகவாசத்தை முறியடிக்க காயல்மாநகரத்தின் மண்ணின் மைந்தர்களே... அணி திரளுங்கள்! பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள்!
13) நாம் நம் மக்கள் நம் சந்ததிகள் நிம்மதியாக வாழ வேண்டும் என சூளுரைத்து நவம்பர் 29-ல் நடக்கவிருக்கும் முழு கடையடைப்பு மற்றும் ஆலைக்கெதிரான முற்றுகைப் போராட்டங்களில் சிறியவர், பெரியவர், ஆண்கள், பெண்கள், முதியோர்கள் என அனைவரும் பங்கு பெற்று காயலின் ஆயுளை திடப்படுத்த முன் வாருங்கள்!
14) காலம் கடந்து கண் விழித்திருக்கும் காயலர்களே! இனியும் காலம் தாழ்த்தாமல் கடமை உணர்வோடு களத்தில் இறங்குங்கள்! அல்லாஹ் இதற்கோர் அழகிய வெற்றியையும், நிரந்தர தீர்வையும் தந்தருள்வான். இன்ஷா அல்லாஹ்...!
அன்புக்குரிய காயல் மண்ணின் மைந்தர்களே! மதம், இனம், மொழி வித்தியாசமின்றி நம்மைப் பழி வாங்கிக் கொண்டிருக்கும் இந்த உயிர்க்கொல்லி அரக்கன் DCW வுக்கு எதிராக உரிமை யுத்தம் நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு நாம் ஆளாகிவிட்டோம்.
இன்று நவம்பர் 29ஆம் நாள் நம் அனைத்து சமுதாய மக்களின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும். அந்த முழக்கத்தை பேரொலியில் DCW ஆலையின் அஸ்த்திவாரமே ஆடிப்போக வேண்டும். அயல்நாட்டில் வசிக்கும் எங்கள் சார்பாகவும் உங்கள் முழக்கங்கள் முழங்கட்டும்...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross