இன்ஷா அல்லாஹ் நாளையும் வெற்றியும் இனி நமதே....................... posted bySK Shameemul Islam (Chennai)[29 November 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 24197
இப்பிரசுரம் ஒரு அச்சுறுத்தல் போல உள்ளது.
இவர்களின் (DCW நிர்வாகம்) பேச்சையே காணோமே என்று இவ்வளவு நாட்கள் எதிர்பார்த்த வேளையில் இவர்களின் முதற் குமுறல் இப்போது துவங்கி இருக்கிறது.
கடுமையான செய்தியை மென்மை கலந்து வெளியிடப்பட்டுள்ள முதல் எச்சரிக்கையாகவே இப்பிரசுரத்தை நாங்கள் காண்கிறோம்.
மேலும் ஒரு காயல்வாசி எதைச் செய்ய வேண்டும் எதை உண்ண வேண்டும் என்ற நல்லுபதேசம் வேறு வழங்கப்பட்டுள்ளது.
அப்புறம் "நிச்சயமாக நாங்கள் பூமியில் சீர்திருத்தம் தான் செய்து வருகிறோம் (குர்ஆன் 2:11)" என்று கூறிய முற்காலத்து குழப்பவாதிகளின் தொனியும் தென்படுகிறது.
"அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பவாதிகள்; எனினும் அவர்கள் (இதை) உணரமாட்டார்கள். (குர்ஆன் 2:12)" என்ற அறிவுரை அதே குர்ஆனில் தான் (உங்களைப்பற்றி) எங்களுக்கும் தரப்பட்டுள்ளது.
அடுத்து எங்கள் முதியோர்களை நாங்களே வெறுப்புடன் பார்க்க வைத்திடும் ஒரு சிண்டு முடிச்சி வேலையும் செய்யப்பட்டுள்ளது. இன்றிருக்கும் பிரச்சினைகள் அவர்கள் காலத்தில் நிகழ்ந்திருந்தால் அவர்கள் தான் இப்போராட்டத்தை துவக்கி வைத்திருப்பார்கள். ஏனெனில் இன்று அதிகமதிகம் மாண்டு போவதும் அவர்களின் பிள்ளைகள் தானே.
காயல்வாசிகளுக்கு வேலைவாய்ப்பு தரவில்லை எனக்கூறுவதை மறுத்தும் காயல்பட்டணம் ஏற்கனவே ஒரு வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பூமி என்பதையும் சொல்லி அருகிலுள்ள ஊர் மக்களுக்கு மிகவும் பயனளிக்கின்ற வகையில் இந்நிறுவனம் வேலைவாய்ப்புகள் வழங்கி வருவதாகவும் வேஷம்காட்டி நாங்கள் ஆண்டாண்டு காலம் காத்து வரும் சமய நல்லிணக்கத்திற்கு வேட்டு வைக்கும் சாத்தானியச் செயலையும் செய்துள்ளீர்கள்.
எங்களைவிட பார்போற்றும் அளவிற்கு வணிகத்தில் விஞ்சி நிற்பவர்கள் எங்களின் அக்கம்பக்கத்து ஊர்காரர்கள் என்பதை அருகிலிருந்து பார்த்து வரும் நாங்கள் ஆனந்தத்துடன் கூறிக்கொள்கிறோம். அவர்களுக்கு நீங்கள் இல்லை எனில் செய்வதற்கு ஒன்றுமே இல்லை என்ற பூச்சாண்டி எல்லாம் காட்டாதீர்கள்.
அப்புறம் மெர்குரி தயாரிப்பை நிறுத்தி அந்த கட்டடத்தையும் நொறுக்கி விட்டதாக கூறுகிறீர்களே. ஒழுங்காக சுத்தப்படுத்தி விட்டீர்களா. மெர்குரி... தகர்ப்பு... என்றதுமே பகீர் என்று ஆகிவிட்டது. இதற்குத்தானே எங்களின் நேசமிகு மக்கள் பலரையும் நாங்கள் காவு கொடுத்திருக்கிறோம்.
அன்பார்ந்த ஊர்மக்களே!
இது ஒரு தொடர்போராட்டம். அஹிம்சா வழியில் இந்த அறப்போர் தொடரவேண்டும். மாசற்ற நோயற்ற ஒரு காயல்பதியை அமைத்துத் தரும் வரை ஓயாமல் போராடுவோம். இவர்கள் ஒன்றும் நமக்கு எமனல்ல.
இன்ஷா அல்லாஹ் நாளையும் வெற்றியும் இனி நமதே.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross