செய்தி: DCW ஆலையின் அத்துமீறலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்! நகரின் அனைத்து தரப்பினரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்வுரிமைக்கான ஆரம்ப போராட்டமே இது....! posted byஅரபி ஷுஅய்ப், ( ஜித்தா.)[30 November 2012] IP: 5.*.*.* | Comment Reference Number: 24271
நம் நகர் மற்றும் சுற்றோரின் எழுச்சிமிக்க போராட்டத்தின் ஆரம்பமே இது. நம் தலைமுறைக்கு வருங்கால காயல் என்ற அமானிதத்தை ஆரோக்கியமிக்கதாக விட்டுச்செல்வது நம்மீது சுமத்தப்பட்டுள்ள தலையாய பொறுப்பு.
நாளை மறுமையில் நம் நகரின் இக்குறை பற்றிய வினா இறைவைனால் நம்மிடம் வினவப்படும்போது இதுபோன்ற அஹிம்சை போராட்டங்கள் நமக்கு பதிலாக பேசும்.
இந்த ஆரம்ப அமைதி போராட்டத்தின் மூலம் ஆள்வோரின் கதவை நம் சந்ததிகளின் நல்வாழ்விற்காக தட்டியுளோம். கதவு திறக்கப்பட்டு உரிய உபசரிப்பு கிட்டுமென நம்புவோம்.
அல்லாமல், ஆள்வோர் கதவு திறக்க தாமதமானால் நம் வாழ்வுரிமை போராட்டத்தை இன்னும் வீரியமாக்கி, சிறந்த சட்ட வல்லுனர்கள் மூலம் மேற்கொண்டு ஆக வேண்டிய காரியங்களை செய்து அந்நச்சு தொழிற்சாலையை அகற்றாமல் நாம் ஓயமாட்டோம் என சூளுரைத்து பணிகளை தொடருவோம்.
முதன் முயற்சியாக அதன் கழிவு நம் சமுத்திரத்தில் கலக்காமல் இருக்க தடுப்புச்சுவர் அமைப்பது குறித்தோ அல்லது அக்கழிவை சுழற்சி முறையில் வேறு ஏதாவது பண்ணலாமா எனபது குறித்தோ அந்நச்சு தொழிற்சாலை நிர்வாகம் யோசிப்பது நல்லது.
இல்லையேல் இப்போராட்டம் இன்னும் வீரியாமாகும் என்பதை அவர்களுக்கு நாம் தெரியப்படுத்துகிறோம்.
இதே வீரியத்துடன் ... ஏன்... இதற்கும் மேலான வீரியத்துடன் களத்தில் இறங்கி போராடி நம் குறிக்கோளை அடைவோம் இன்ஷாஅல்லாஹ்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross