Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:06:58 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9718
#KOTW9718
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, நவம்பர் 30, 2012
DCW ஆலையின் அத்துமீறலைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்! நகரின் அனைத்து தரப்பினரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4614 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (15) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையின் சில பகுதிகளை மூடுமாறு, தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பரிந்துரை செய்தும், இதுவரை அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்தும், அரசின் மாசு கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையைக் கண்டித்தும், அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் ஊர் நலக் கமிட்டியினர் ஆதரவுடன்,

29.11.2012 வியாழக்கிழமையன்று (நேற்று), காயல்பட்டினத்தில் ஒருநாள் அடையாள முழு கடையடைப்பு நடத்திடவும், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் அன்று மாலை 04.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டமும், இரவு 07.00 மணிக்கு பொதுக்கூட்டமும் நடத்திட தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், அன்று காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை காயல்பட்டினத்தில் முழு கடையடைப்பு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, மாலை 04.30 மணியளவில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் பொருளாளர் ஹாஜி ஏ.ஆர்.முஹம்மத் இக்பால் தலைமை தாங்கினார். நகரின் மூத்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், 1986ஆம் ஆண்டில் துவக்கப்பட்டு செயல்பட்டு வந்த ‘ஸதக்கத்துல்லாஹ் அப்பா நலச்சங்கம்’ என்ற பெயரிலான சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் பொருளாளர் ஹாஜி பக்ரீன், அதன் செயற்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.





காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் திருக்குர்ஆன் மனனப் பிரிவு பேராசிரியர் ஹாஃபிழ் எஸ்.எச்.ஷேக் தாவூத் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.



DCW தொழிற்சாலையின் விதிமீறல்களுக்கெதிரான முழக்கங்களை, எம்.ஏ.புகாரீ (48), மன்னர் பாதுல் அஸ்ஹப், என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், ஜாஹிர் ஹுஸைன், எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ், எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் உள்ளிட்டோர் முன்மொழிய, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெருந்திரளான பொதுமக்கள் உரத்த குரலில் அதனை வழிமொழிந்தனர்.











இந்த ஆர்ப்பாட்டத்தில், காயல்பட்டினம் கடையக்குடி (கொம்புத்துறை) தேவாலயத்தின் பங்குத் தந்தை விக்டர் லோபோ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ ஆகியோர் கண்டனப் பேருரையாற்றினர்.









இந்த ஆர்ப்பாட்டத்தில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகர்மன்ற உறுப்பினர்கள், அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் கத்தீப் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ (Aud02) உட்பட - நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அனைத்து தரப்புகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். திருச்செந்தூர், வீரபாண்டியன்பட்டினம், புன்னைக்காயல், ஆத்தூர், ஆறுமுகநேரி உள்ளிட்ட - காயல்பட்டினத்தின் சுற்றுப்புற ஊர்களிலிருந்தும் திரளானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.









ஏற்பாடுகளை, அமைப்பின் தலைவர் ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல் தலைமையில், துணைத்தலைவர்களான ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர். ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா, துணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, பொருளாளர் ஹாஜி ஏ.ஆர்.முஹம்மத் இக்பால், செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி மக்கீ நூஹுத்தம்பி, ‘நட்புடன் தமிழன்’ முத்து இஸ்மாஈல், ஏ.எஸ்.புகாரீ, நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், ஷஃபீயுல்லாஹ், எஸ்.அப்துல் வாஹித், எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், கேப்டன் ஸதக்கத்துல்லாஹ், எம்.ஏ.புகாரீ, யு.நவ்ஃபல், எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய், நோனா அபூ ஹுரைரா, காஜா முஹ்யித்தீன், தங்ஙள் ஹபீப், ஹாஜி எஸ்.ஐ.புகாரீ, எம்.டி.ஹபீப் முஹம்மத், பி.ஏ.புகாரீ, எம்.ஏ.இப்றாஹீம் (48), எம்.ஏ.புகாரீ (48), எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

படங்களில் உதவி:
B.A.புகாரீ
M.ஜஹாங்கீர்
மற்றும்
A.K.இம்ரான்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. வாழ்வுரிமைக்கான ஆரம்ப போராட்டமே இது....!
posted by அரபி ஷுஅய்ப், ( ஜித்தா.) [30 November 2012]
IP: 5.*.*.* | Comment Reference Number: 24271

நம் நகர் மற்றும் சுற்றோரின் எழுச்சிமிக்க போராட்டத்தின் ஆரம்பமே இது. நம் தலைமுறைக்கு வருங்கால காயல் என்ற அமானிதத்தை ஆரோக்கியமிக்கதாக விட்டுச்செல்வது நம்மீது சுமத்தப்பட்டுள்ள தலையாய பொறுப்பு.

நாளை மறுமையில் நம் நகரின் இக்குறை பற்றிய வினா இறைவைனால் நம்மிடம் வினவப்படும்போது இதுபோன்ற அஹிம்சை போராட்டங்கள் நமக்கு பதிலாக பேசும்.

இந்த ஆரம்ப அமைதி போராட்டத்தின் மூலம் ஆள்வோரின் கதவை நம் சந்ததிகளின் நல்வாழ்விற்காக தட்டியுளோம். கதவு திறக்கப்பட்டு உரிய உபசரிப்பு கிட்டுமென நம்புவோம்.

அல்லாமல், ஆள்வோர் கதவு திறக்க தாமதமானால் நம் வாழ்வுரிமை போராட்டத்தை இன்னும் வீரியமாக்கி, சிறந்த சட்ட வல்லுனர்கள் மூலம் மேற்கொண்டு ஆக வேண்டிய காரியங்களை செய்து அந்நச்சு தொழிற்சாலையை அகற்றாமல் நாம் ஓயமாட்டோம் என சூளுரைத்து பணிகளை தொடருவோம்.

முதன் முயற்சியாக அதன் கழிவு நம் சமுத்திரத்தில் கலக்காமல் இருக்க தடுப்புச்சுவர் அமைப்பது குறித்தோ அல்லது அக்கழிவை சுழற்சி முறையில் வேறு ஏதாவது பண்ணலாமா எனபது குறித்தோ அந்நச்சு தொழிற்சாலை நிர்வாகம் யோசிப்பது நல்லது. இல்லையேல் இப்போராட்டம் இன்னும் வீரியாமாகும் என்பதை அவர்களுக்கு நாம் தெரியப்படுத்துகிறோம்.

இதே வீரியத்துடன் ... ஏன்... இதற்கும் மேலான வீரியத்துடன் களத்தில் இறங்கி போராடி நம் குறிக்கோளை அடைவோம் இன்ஷாஅல்லாஹ்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. DCW நிர்வாகமே...! உனக்குக்கோர் பகிரங்கமான எச்சரிக்கை!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [01 December 2012]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24275

DCW நிர்வாகமே...! உனக்குக்கோர் பகிரங்கமான எச்சரிக்கை! இது எங்கள் உரிமைப் போராட்டத்தின் முதல்படிதான்! ஊரைப் பகைத்துக் கொண்டு நீ வாழ முடியாது. உன் அயோக்கியத்தனத்தை நீ நிறுத்தாவிடில் எமது அடுத்தகட்ட நடவடிக்கை இன்னும் வீரியமாக இருக்கும். இனி உனக்கு தலைவலிதான்! தலைவன் வடலி முதல் தண்டுப்பத்து வரை எமது குழு கிராமம் கிராமமாகச் சென்று உன் முகத்திரையைக் கிழித்தெறிவார்கள்.

இத்தோடு நச்சுத் தன்மை வாய்ந்த கழிவுகளை எம் கடல் பகுதியில் கலப்பதை நிறுத்தி விடு!

சுவாசிக்கும் மூச்சுக் காற்றில் அமில விஷவாய்வை பரப்புவதை அடியோடு நிறுத்தி விடு!

பாமர மக்களின் இயலாமையைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் கேவலமான யுக்தியை விட்டு விடு!

மாபெரும் மக்கள் சக்தியின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பு கொடு!

உப்பளத்தை உருப்பாடமல் போகச் செய்யும் தவறை இன்றோடு திருத்திக்கொள்!

இல்லையேல் இனி வரும் காலங்களில் எதிர்ப்பும், எழுச்சியும் இதை விடக் கடுமையாக இருக்கும். எச்சரிக்கை!

காயல் நலம் கருதும்,
-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by மஹ்மூது ரஜ்வி (தம்மாம்) [01 December 2012]
IP: 79.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24277

அஸ்ஸலாமு அலைக்கும்,

எங்கள் வீரியம் உங்கள் ரசாயனத்தை விட வீரியமானது என்பதை பறைச்சாட்டும் கூட்டம் தன் இலட்சியத்தை அடைந்தே தீரும் என்பதில் ஐயமில்லை இன்ஷாஅல்லாஹ்.

மஹ்மூது ரஜ்வி,
தம்மாம்,சவூதிஅரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by b.a.buhari (chennai) [01 December 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 24278

இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட நல் உள்ளம்களுக்கு முதலில் என் நன்றினை தெரிவித்து கொள்கிறேன்.

அடுத்து வருந்த தக்கது அதிகமான counciler மட்டும் துணை தலைவர் முன்னின்று கோசம் எழுப்பி இருந்தால் எங்களுக்கு முழு திருப்தி இருந்து இருக்கும். மக்கள் குறையை நிவர்த்தி பண்ணவே நீங்கள் இருகிண்டீர்கள் என்பதை ஒரு பொழுதும் மறவாதீர். நான் சொல்வது எல்லாம் ஊரில் இருந்து வராமல் இருக்கும் counciler கு மட்டுமே பொருந்தும்.

இந்த சமயத்தில் நீங்கள் எங்களுடன் இல்லை என்றால் நாங்கள் உங்களை தேர்து எடுத்ததில் அருத்தம் இல்லாமல் போய்விடும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Salai Sheikh Saleem (Dubai) [01 December 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24279

இலட்சித்திற்காக அல்லாமல் இலட்சியத்திற்காக ஓரணியில் கூடிய கூட்டத்தை பார்க்கையில் மெய்சிலிர்த்து விட்டது. மாஷா அல்லாஹ். ஒருங்கினைத்த மற்றும் கலந்து கொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் வெளிநாடுகளில் வாழும் காயலர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.

இந்த கடையடைப்பு ஆர்ப்பாட்டம் எல்லாம் ஒரு ஆரம்பமே!!! இனிதான் நாம் ஆற்றவேண்டிய களப்பணிகள், எதிர்கொள்ள வேண்டிய வேகத்தடைகள், போர்க்களங்கள் என்று நிறைய உள்ளன.

எனவே KEPA நிர்வாகத்தினர் இந்த நிகழ்வை தங்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக, ஒரு ஊக்குவிப்பு மருந்தாக மட்டுமே கருதி மென்மேலும் விழிப்போடு இருக்க வேண்டும்.

ஒன்றுபடுவோம் !!! இன்ஷா அல்லாஹ் நன்கு வாழ்வோம் !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. மாஷா அல்லாஹ்.
posted by Mohamed Salih (Bangalore) [01 December 2012]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 24280

மாஷா அல்லாஹ்.. எல்லா புகழும் வல்ல இறைவனுக்க ..

கலந்து கொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ..

குறிப்பாக . சின்ன சிறு சிறார்களுக்கும் .... அவர்களை பார்க்கும் போது நிச்சயமாக இந்த போராட்டம் DCW ஆலை மூடும் வரை நமது வருங்கால பெரியோர்கள் உறு துணை யாக இருப்பார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது இன்ஷா அல்லாஹ் ...

பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் ஸாலிஹ் கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. அடுத்தடுத்து தோன்றிய KEPA அமைப்புக்கு மட்டும் வெற்றி அல்ல..!
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM ) [01 December 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24282

இறைவன் உதவியால் KEPA ஆர்பாட்ட குழுவின் எழுச்சி மிகிந்த பிரச்சாரத்தின் மூலம் மக்கள் பலத்தை வெளி உணர செய்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் இறைவன் கிருபையால் இது முதல் வெற்றியே...

அடுத்தடுத்து தோன்றும் அமைப்புக்களால் அடைந்த நன்மை என்ன.. ? என்று வினா எழுப்பிய அன்பு சகோதரர்கள் நீங்களும் இந்த ஆர்ப்பாட்டம் வெற்றி அடைய கலந்து இருப்பீர்கள்.. இரு கையின் ஓசை சிலரே உணர்வார்கள்...! அடுத்தடுத்து தோன்றிய பல கைகளின் ஓசையை தூரமான பலரும் உணர்ந்தார்கள்..!

அடுத்தடுத்து தோன்றிய புதிய KEPA அமைப்புக்கு மட்டும் இது வெற்றி அல்ல..! நகரின் அணைத்து பழைய அமைபுகளுக்குமே இது வெற்றியே...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...நானும் என் தூவும்.u
posted by M.S.ABDULAZEEZ (H k) [01 December 2012]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 24283

நான் இந்த போராட்ட கூட்டத்தில் இல்லை ஆனால் என் மனதும் துஆவும் இருதது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. இன்னும் பல அமைப்புகள் தோன்ற வேண்டும்!
posted by kavimagan (qatar) [01 December 2012]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 24286

அடுத்தடுத்து தோன்றும் அமைப்புகளால் என்ன பயன் என்ற விமர்சனத்தைக் குறித்து அதிகம் கவலைப்பட வேண்டாம் அன்பு நண்பர் முத்து இஸ்மாயில் அவர்களே! களத்திற்கு வெளியே இருந்து விமர்சனம் செய்து வந்த பலரும், இன்று நம்மோடு கைகோர்த்து, நகரின் நன்மைக்காக அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றத் துவங்கி இருப்பதே, இந்த அமைப்புகளின் வெற்றிக்கு சாட்சியாக நிற்கிறது.

இது வரை தோன்றிய அமைப்புகள் அனைத்தும், நமது மரியாதைக்குரிய பெரியவர்கள் வழிநடத்த, இளைஞர்கள் முன்னின்று செயலாற்றி, வெற்றிப் பாதையில் பயணிப்பதை அனைவரும் அறிந்துகொள்ளும் காலம் விரைவில் வரும். அறிந்தும் அறியாதவர்களாய், புழுதி வாரித் தூற்றும் புண்ணியவான்களின் இடையூறுகள், நமது பயணத்தை நிறுத்த சக்தியற்றவை.

நகர் நலனுக்காக இன்னும் ஏராளமான அமைப்புகள் தோன்ற வேண்டும். அதனைப் பெரியவர்கள் வழிநடத்த. கூலிக்கு மாரடிக்காத இளைஞர் கூட்டம் செயல்படுத்திக் காட்ட வேண்டும். அல்லாஹ்வின் துணையால் கனவுகள் அனைத்தும் மெய்ப்படவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...வெற்றிப்படிகளில் வீறுநடை தொடங்கி விட்டது.
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [01 December 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24287

எப்பேர்பட்ட புண்ணிய காரியமும் எளிதில் எவருக்கும் கைகூடுவதில்லை அதற்கென்று ஒரு எதிரியோ ஒரு சக்தியோ இலைமறை காயாக எதிர்த்து கொண்டேதான் இருக்கும்! அதை எல்லாம் பொருட்படுத்தாமல் நம் இலட்சிய பயணத்தில் வீறுநடை போட வேண்டும்!

இது வருமையையோ, வாழ்வின் நெருக்கடிக்கு உதவி கோறியோ போராடும் போராட்டமல்ல. உயிர் காக்க புறப்பட்டிருக்கும் உன்னத போராட்டம்!.

புனிதமும், புண்ணியமும் கலந்த ஒரு வாழ்க்கையின் உயரிய வழிகாட்டியாக விளங்கும் நம் இஸ்லாம் மார்க்கம் இன்று உலகம் முழுவதும் பரவி உன்னத நிலையை அடைந்திருக்ககிறது என்றால், அதற்காக அன்று நம் அரும்பெரும் தூதர்கள் எத்தனை வருடங்கள் பாடுபட்டார்கள்!

சுதந்திர வாழ்க்கை, சிந்தனை ,செயல்,சொல் எழுத்து என்ற அத்தனை உரிமையும் அவ்வளவு எளிதாக நாம் வாழும் இப்பூமிக்கு கிடைத்ததா? அந்நிய ஆதிக்க பிடியில் இருந்து அவ்வளவு எளிதில் வெளி வர முடிந்ததா? எவ்வளவு போராட்டங்கள், எத்தனை வருடங்கள் போராடினோம்!

இன்று நம் இதயம் குளிரும் இந்தய சுதந்திர மண்ணில் உலா வருகிறோம் என்றால் அது பொறுமையுடனும், நம்பிக்கையுடனும் நல்ல ஒற்றுமையுடனும் போராடியதால் கிடைத்த உண்மை வெற்றி!

அதே உண்மை வெற்றியை, உன்னத வெற்றியை நாம் பெரும் காலம் வெகு தூரமில்லை!

பெயர் குறிப்பிடாமல் போட்ட மொட்டை நோட்ஸ்சை எல்லாம் காண்டு கொள்ளவே கூடாது. அவர்கள் உண்மையான ஆம்பிளையாக இருந்தால், நம்மை நாடி வந்து, நச்சி தன்மை உள்ளதா? கலர் மாறும் தண்ணீரின் தன்மை என்ன ? உண்மையில் சுத்திகரிக்கப்பட்டதுதானா ?என்கின்ற விபரத்தையும் ,ஆதாரத்தையும் அல்லவா கேட்டிருப்பார்கள்!

அவர்கள் கேட்டு நாம் கொடுக்கவில்லை என்றால், இந்த நோட்டீஸ் போட்டதிற்கு அர்த்தம் உண்டு. அதை விட்டு விட்டு, எந்த பெயரும் போடாமல், நம் புனித மார்க்கத்தையும் மறைமுகமாக சாடியிருக்கும் , இச்சின்னபுத்திக்கு சொந்தக்காரர்கள் ஷாத், ஷாத் அந்த அயோக்கிய நிர்வாகமே!

உலகில் 5 அல்லது 10 சதவீகித மக்கள் மட்டுமே சைவத்தை உண்பவர்களாக இருக்கிறார்கள், இந்த துதிபாடிகளின் கூற்றுப்படி பார்த்தால் உலகில் 90 சதவிகத மக்களுக்கு அசைவம் மட்டும் உண்பதால்தான் கேன்சர் வருகிறது என்று உலக அறிக்கை கூறவேண்டுமே?
ஒரு வேலை அந்த உலக விஞ்சானிகள் இந்த ஓய்வூதியம் பெறும் DCW ஊழியர்களின் அறிக்கைக்காக காத்திருக்கிறார்களோ, என்னவோ?

திருவனந்தபுரம் கேன்சர் சென்டரிலும், சென்னை அடையார் கேன்சர் சென்டரிலும், மற்றுமுள்ள கேன்சர் சென்டரிலும் எத்தனை பேர் சைவம் மட்டும் உண்ணும் மக்கள் இவ் வியாதியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்(அவர்கள் நலம் பெற நெஞ்சார வேண்டுகிறோம்) பலர் இறந்தும் இருக்கிறார்கள் என்ற உண்மை தெரியுமா இந்த கூழ் கும்பிடு கூட்டத்திற்கு?

OK, என்றால் என் செலவிலேயே கூட்டிக்கொண்டு போய் காட்ட ஏற்பாடு செய்கிறேன். வருவார்களா இந்த வீணாப்போன வாழ் பிடிக்கும் கழிசடைகள்?

இவர்கள் எந்த கூட்டத்துடனும் ஒட்டாத "வட்டா" பெரும் கூட்டம். இவர்களை எப்படித்தான் திருத்தமுடியும்? அவர்கள் கும்பிடும் கடவுள் தான் அவர்களுக்கு அறியுரத்தனும்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...தொடரட்டும் இந்த ஒற்றுமை..
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [01 December 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24290

அல்ஹம்து லில்லாஹ், எல்லா புகழும் வல்ல இறைவனுக்கே.

கலந்து கொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். எங்களுக்கு கலந்து கொள்ள இயளவில்லையே என்ற ஏக்கமும் கூட.

இது போன்று நகர் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றாக கை கோர்த்தால் நம்மால் சாதிக்க முடியாதது எதுவும் அல்ல. இன்ஷா அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by syedahmed (GZ, China) [01 December 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 24299

This mass agitation shows our unity & integrity to strengthen our violation which taught a good lesson to DCW and that management should make good decision without further delay. Otherwise, our protest should be continue until we get solution in order to make good and fair environment in our native.

The thoughts of the retired workers of the DCW are all not acceptable one and they were unable to understand our feelings. Their willingness is only how to get pension and not eager to support the humanity. And, they also thinking reciprocally.

Our aim is to attain a good result with profound this. Tamil Nadu Environment Board must take care regarding this matter as positively , and we hope all our request will be complied with.

Our sincere thanks to KEPA for making this agitation with grand success.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by sulaiman (abudhabi) [01 December 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24301

அஸ்ஸலாமுஅழைக்கும் ,

அநியாயத்திற்கு எதிராக களம் கண்டுள்ள பெரும் மக்கள் திரளை பார்க்கும்போது உள்ளம் பூரிக்கிறது.அல்ஹம்துலில்லாஹ்,நாசகார தொழிற்சாலையை அதன் விரிவாக்கத்தை முடக்கும் வரை நம்முடைய போராட்டம் தொடரவேண்டும்.அல்லாஹ் நமக்கு வெற்றியைதருவனாக.தர்மம் வெல்லும் !அதர்மம் அழியும் !! இன்ஷாஅல்லாஹ் அதர்மம் அழிந்தேதீரும்!!!

அன்பார்ந்த சகோதரர்களே !நம்முடைய சமுதாய நலனை பாதுகாப்பதாக இருந்தாலும் சரி.ஊர் நலனை பாதுகாப்பதாக இருந்தாலும் சரி .இதற்காக எல்லா கருத்து வேறுபாடுகளயும் தூக்கி எரிந்து விட்டு ஒன்றுபட்டு போராடுவதற்கு நமது மக்கள் யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் இல்லை.எனவே இதில் யாரையும் யாருடனும் உரசிபார்க்கவேண்டாம்.

ஊர் நலன் ஒன்றை குறிக்கோளாக கொண்டு நடத்தபற்ற இந்த போராட்டத்திற்கு எல்லோரையும் அழைக்கப்பட்டது.அனைவர்களும் கலந்துகொண்டார்கள் ,தங்களின் ஆதரவுகளை தெரிவித்தார்கள் .போராட்டம் முடிந்தபிறகு இப்பொழுது சிலகருத்தளர்கள் பிரிவினை கருத்தை பதிக்கிறார்கள் .இது ஏற்புடையது இல்லை,ஆரோகியமான கருத்தும் இல்லை.

புதியதாக தோன்றும் அமைப்புகள் செய்யும் செயல்கள் எல்லாம் ஊரின் நன்மைக்குதான் என்ற கருத்தை திணிப்பது மிக மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.இப்பொழுது இந்த அமைப்பு எடுத்துள்ள இந்த போராட்டம் ஊரின் நலனுக்கான போராட்டம் ,இதற்க்கு நமது மக்களின் அதரவு எப்பொழுதும் இருக்கும்.அதே நேரத்தில் இந்த அமைப்பனாலும்,வேறு எந்த அமைப்பனாலும் ஊரை பிரித்தாலும் செயலில் ஈடுபட்டால் அதற்க்கு மரண அடி குடுத்து முடக்கவும் நமது மக்கள் தயங்கமாட்டார்கள்.

எனவே இதுபோன்ற போராட்ட விசியங்களிலாவது தங்களது குருட்டு வாதத்தை விசம கருத்தாக பதிவு செய்வதை குறிப்பிட்ட சிலகருத்தளர்கள் நிறுத்தி கொள்ளவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. களப்பணியாற்றாத வெற்று கருத்தாளிகள்!
posted by kavimagan (qatar) [02 December 2012]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 24309

எந்த ஒரு சமூக அமைப்பிலும் இணைந்து, களப்பணியாற்ற விரும்பாமல், மற்றவர்களை காயப்படுத்தும் விதத்தில் எழுதும் வெற்று கருத்தாளிகளின் கருத்துக்களுக்கு எவ்வித மதிப்பும் இல்லை. எனினும், தவறான வாதங்களுக்கு பதில் சொல்வதன் மூலம், இவர்கள் திருந்தவில்லை எனினும், ஊர் நலனில் உண்மையான அக்கறை கொண்ட சகோதரர்கள் விளங்கிக் கொள்ளவே இந்த பதிப்பு.

பெரியவர்களின் வழிகாட்டுதலோடு, இளைஞர்கள் செயலாற்ற வேண்டும் என்பதில் என்ன பிரிவினை கருத்து இருக்கிறது? ஐக்கியப் பேரவை உள்ளிட்ட அனைத்து சமூக அமைப்புகளின் பெரியவர்களோடும், அன்றாடம் தொடர்பில் இருப்பவர்கள் நாங்கள். இவர்கள் அல்லாமல் பெரியவர்கள் என்று யாரைக் கருதுவது? பிரிவினை என்று வெற்று கோஷம் எழுப்பும் இவர்கள் ஊரின் ஒற்றுமைக்காக பெரியவர்களோடு இணைந்து இன்று வரை என்ன செய்திருக்கின்றார்கள்? கடந்த பத்தாண்டு காலமாக, இன்றைய இளைஞர்கள் செயலாற்றும் அனைத்து காரியங்களிலும் பெரியவர்களின் ஆலோசனை, துஆ, மற்றும் வழிகாட்டுதல் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

கள்ள ஓட்டு போடுவதை ஆதரித்து, தேசத்தின் இறையாண்மையை எதிர்த்து கருத்து எழுதியவர்கள் (கருத்து எண்; 11124 ) ஊரின் ஒற்றுமை குறித்து பேசுவதற்கும், எழுதுவதற்கும் தகுதியற்றவர்கள்.

தவமறைந்து அல்லவை செய்தல் வேட்டுவன்
புதர்மறைந்து புள்சிமிழ்த் தற்று.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by mohmedyounus (chennai) [02 December 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24310

ஊரின் அனைத்து மக்களின் ஆதரவோடு நடைபெற்ற போராட்டங்களில் இதுவும் ஒன்று. கூடுதலாக புறநகர், மீனவர்களின் தார்மீக ஆதரவோடு...

நூற்று கணக்கான் மக்கள் கலந்து கொண்ட போதிலும் எந்த வித அசம்பாவிதமோ, சிறு கண்ணிய குறைவோ ஏற்படவில்லை. ஐந்து இடை நிலை காவலர்களே பாதுகாப்பிற்கு வந்தது இதற்கு ஒரு சான்று. அதுவும் வெருங்கைய்யோடு!.

சகோதரர் ஆதம் சுல்தான் அவர்களே! உங்கள் கருத்து முற்றிலும் உண்மை.

ஆறு மதங்களுக்கு முன்பு நான் திருவனந்தபுரத்தில் பணி புரியும்போது, திருவனந்தபுரம் பிராந்திய புற்று நோய் மருத்துவமனையில் (Regional Cancer Centre) புற்று நோய் அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரியும் மருத்துவர் இப்ராஹீம் அவர்களை சந்திக்க நேர்ந்தது. இவர் புற்று நோய் பற்றி ஆராய்ச்சி செய்யும் மாணவர் கூட. திருநெல்வேலி ஷிபா மருத்துவமனைக்கு மார்பு புற்று நோய் அறுவை சிகிச்சைக்காக அவர் வரும்போது, ரயிலில் சந்திக்க வாய்ப்பு இருமுறை கிடைத்தது. அவருடன் அலாவிடும்போது.... அசைவத்திற்கும் புற்று நோய்க்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாது என்று அடித்து சொன்னார்.

அசைவம் சாப்பிடுவதால், புற்று நோய் ஏற்படும் என்பதை நிருபிக்க எந்த வித சிறு மருத்துவ ஆராய்ச்சி முடிவு கூட இதுவரை கிடையாது என்று கூறினார். இது ஆதிக்க மற்றும் பிராமணிய சக்திகளால் புனையப்பட்ட ஒரு கட்டுக்கதை என்றும் சொன்னார். இன்னும் அசைவத்தில்தான், புற்று நோயை தடுக்கும் மருந்துகள் இருப்பதாக கூறினார்.

நம் ஊரில் அதிகமாக பரவும் புற்று நோய் பற்றி தான் அறிந்து இருப்பதாகவும், அதற்கும் அசைவம் சாப்பிடுவதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று கூறினார். இதை தான் எவ்விடத்திலும் மேடை போட்டு நிருபிப்பதாக கூறினார். நமதூரில் பாதிக்கப்பட்ட சில புற்று நோயாளிகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்ததாகவும், இன்னும் இறைவன் நாடினால் செய்வேன் என்றும் கூறினார்.. புற்று நோய் மருத்துவத்தில் அவரை போன்று இன்னும் ஒரு இஸ்லாமியர்தான் இருப்படதாகவும், அதனால் இந்த தவறான பிரச்சாரத்தை தன்னால் முறியடிக்க முடியவில்லை என்றும் என்னிடம் கூறினார்.

இந்த மருத்துவரின் அலைபேசி எண் தேவை எனில் என்னை தொடர்பு கொள்ளலாம்...

9566593367 or
mohmedyounus@yahoo.co.uk.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved