காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையின் சில பகுதிகளை மூடுமாறு, தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பரிந்துரை செய்தும், இதுவரை அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்தும், அரசின் மாசு கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையைக் கண்டித்தும், அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் ஊர் நலக் கமிட்டியினர் ஆதரவுடன்,
29.11.2012 வியாழக்கிழமையன்று (நேற்று), காயல்பட்டினத்தில் ஒருநாள் அடையாள முழு கடையடைப்பு நடத்திடவும், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் அன்று மாலை 04.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டமும், இரவு 07.00 மணிக்கு பொதுக்கூட்டமும் நடத்திட தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், அன்று காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை காயல்பட்டினத்தில் முழு கடையடைப்பும், அதனைத் தொடர்ந்து, அன்று மாலை 04.30 மணியளவில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம் நிறைவுற்ற பின்னர், மாலை 06.00 மணியவில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட செய்தியாளர்கள், DCW தொழிற்சாலை தொடர்பான பல்வேறு கேள்விகளைக் கேட்க, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா, அதன் செயற்குழு உறுப்பினர்களான எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் அவற்றுக்கு விளக்கமளித்தனர்.
செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, அமைப்பின் தலைவர் ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல் தலைமையில், துணைத்தலைவர்களான ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர். ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா, துணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, பொருளாளர் ஹாஜி ஏ.ஆர்.முஹம்மத் இக்பால், செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி மக்கீ நூஹுத்தம்பி, ‘நட்புடன் தமிழன்’ முத்து இஸ்மாஈல், ஏ.எஸ்.புகாரீ, நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், ஷஃபீயுல்லாஹ், எஸ்.அப்துல் வாஹித், எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், கே.எம்.டி.சுலைமான், கேப்டன் ஸதக்கத்துல்லாஹ், எம்.ஏ.புகாரீ, யு.நவ்ஃபல், எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய், நோனா அபூ ஹுரைரா, காஜா முஹ்யித்தீன், தங்ஙள் ஹபீப், ஹாஜி எஸ்.ஐ.புகாரீ, எம்.டி.ஹபீப் முஹம்மத், பி.ஏ.புகாரீ, எம்.ஏ.இப்றாஹீம் (48), எம்.ஏ.புகாரீ (48), எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
முன்னதாக, காலையில் நடைபெற்ற கடையடைப்பின்போதும், மாலை ஆர்ப்பாட்டக் களத்திலும் தொடர்ச்சியாக வந்த செய்தியாளர்கள் போராட்டக் குழுவினரை தனித்தனி நேரங்களில் நேர்காணல் செய்தனர். அவர்களுக்கு, KEPA செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா தேவையான விளக்கங்களை அளித்தார்.
படங்களில் உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ |