Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:58:28 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9730
#KOTW9730
Increase Font Size Decrease Font Size
திங்கள், டிசம்பர் 3, 2012
DCW ஆலையின் அத்துமீறல் குறித்து சென்னையிலுள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் - டிசம்பர் 10 அன்று - காயலர்கள் திரண்டு சென்று மனு அளிக்க ஏற்பாடு! காயலர்களுக்கு KEPA அழைப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3931 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

DCW தொழிற்சாலையின் அத்துமீறலுக்கெதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA சார்பில், இம்மாதம் 10ஆம் தேதியன்று சென்னையிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் - காயலர்களை திரளாக அழைத்துச் சென்று மனு அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துகொள்ள காயலர்களுக்கு அழைப்பு விடுத்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையின் சில பகுதிகளை மூடுமாறு, தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பரிந்துரை செய்தும், இதுவரை அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்தும், அரசின் மாசு கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையைக் கண்டித்தும், அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் ஊர் நலக் கமிட்டியினர் ஆதரவுடன்,

29.11.2012 வியாழக்கிழமையன்று (நேற்று), காயல்பட்டினத்தில் ஒருநாள் அடையாள முழு கடையடைப்பு நடத்திடவும், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் அன்று மாலை 04.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டமும், இரவு 07.00 மணிக்கு பொதுக்கூட்டமும் நடத்திட தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், அன்று காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை காயல்பட்டினத்தில் முழு கடையடைப்பும், அதனைத் தொடர்ந்து, அன்று மாலை 04.30 மணியளவில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் கண்டன ஆர்ப்பாட்டமும், அன்று மாலை 06.00 மணியவில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியும், அன்றிரவு 07.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் விழிப்புணர்வு பொதுக்கூட்டமும் நடைபெற்றது.



விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தின் நிறைவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில்,

“டி.சி.டபிள்யு நிறுவனத்தின் சுற்றுச்சூழல் விதிமீறல்கள், விரிவாக்கத் திட்டம் குறித்த அச்சங்கள் ஆகியன குறித்து எடுத்துக் கூற, சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை நிலையத்தில் காயலர்கள் பெருந்திரளாகச் சென்று மனு அளிப்பதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.”

என்று 7ஆவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இத்தீர்மானத்தின் அடிப்படையில், இன்ஷாஅல்லாஹ் இம்மாதம் 10ஆம் தேதி - திங்கட்கிழமையன்று காலையில், சென்னை கிண்டியிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை அலுவலகத்திற்கு, காயலர்களை பெருந்திரளாக அழைத்துச் சென்று கோரிக்கை மனுவை அளிப்பதென, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், சென்னையிலுள்ள காயலர்கள் உட்பட - வர வாய்ப்புள்ள அனைத்து காயலர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு, நமது உரிமைக்காக குரல் கொடுக்க வருமாறு அன்போடு அழைக்கின்றோம். இந்நிகழ்ச்சி குறித்த விரிவான விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும்.


இவ்வாறு, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஒன்றாய் இணைந்து நின்று நம் கோரிக்கையை வெல்வோம்,.............
posted by SK Shameemul Islam (Chennai) [03 December 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 24335

ஒரு நல்ல முடிவு.

என்னையும் இம்மனுவளிப்பு நிகழ்வுக்குச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஒன்றாய் இணைந்து நின்று நம் கோரிக்கையை வெல்வோம், மாசற்ற, நோயற்ற, சுகாதாரமான காயலை உருவாக்குவோம். இன்ஷா அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Cnash (Makkah) [03 December 2012]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 24336

தொடர் முயற்சிக்கு பாராட்டுக்கள்!! இறைவன் வெற்றியை அளிப்பான்.

அப்படியே , மத்திய சுற்று சூழல் அமைச்சர் திருமதி. ஜெயந்தி நடராஜன் அவர்களையும் சந்திக்க ஏற்பாடு செய்து மனு அளித்தால் கூடுதல் பலமாக இருக்கும். கூடவே திரு. ஹாரூன் MP அவர்கள் பரிந்துரை செய்த கடிதத்தோடு!!

திருமதி, ஜெயந்தி நடராசன் அவர்கள் நேற்றைய தினம் சென்னையில் இருந்ததாக ஒரு பத்திரிக்கை செய்தியில் படித்த ஞாபகம். முடிந்தால் அவரை சந்திக்க KEPA குழுவினர் ஏற்பாடு செய்யுங்களேன். அல்லாஹ் உங்களின் எல்லா நல்ல முயற்சிக்கும் துணை செய்வான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by noohu thamby (tanzania) [03 December 2012]
IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 24339

நல்ல முடிவு, இன்ஷா அல்லாஹ் இதனையும் பயன்படுத்தி கொள்ளலாம், ஊருரில் ஒன்று இணைத்தது போல் இந்த முயற்சிக்கும் ஒன்று இணைத்தால் மிக மிக நன்றாக இருக்கும், ஒன்று குடிணல் மட்டுமே நம் ஊரை நோய் அற்ற ஊராக மற்றட முடியும்,

ஒன்று படுவோம் ஊரை காப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. அன்பு சகோதரர் Cnash அவர்களுக்கு...!
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM ) [03 December 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24340

அன்பு சகோதரர் Cnash அவர்களுக்கு...! அஸ்ஸலாமு அழைக்கும்..

DCW ஆலையின் அத்துமீறலுக்கெதிரான போராட்டம்! KEPA சார்பில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜனிடம் ஜக்வா மன்றத்தினரும், டில்லி வாழ் காயலர்களும் மனு அளித்து விட்டனர்...

இதோ படித்து கொள்ளுங்கள் சகோதரரே...
http://www.kayalpatnam.com/shownews.asp?id=9717

தாய் மண்ணின் மீது உள்ள தாங்களின் பாசத்தை நேசத்தை மற்றும் ஆலோசனைகளை பாராட்டுகிறேன்...

இந்த ஒற்றுமை கடைசி வரை நமக்குள் நீடிக்க வல்ல இறைவன் கிருபை செய்வானாக.. ஆமின்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [03 December 2012]
IP: 37.*.*.* | Comment Reference Number: 24341

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் ஊர் மக்களுக்கு ...குறிப்பாக நம் ஊர் சென்னை வாழ் காயல் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள >>KEPA << அமைப்பின் வேண்டுகோளை ஏற்று ...நம் மக்கள் திரளாகவே சென்று '' மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில்'' மனு கொடுத்து.நம் ஊர் மக்களின் இக்கால / வருங்கால ....சந்ததிகளின் உரிமைக்காக குரல் கொடுத்து...இந்த >>DCW << தொழிற்சாலையின் நச்சு தன்மை உள்ள வற்றில் இருந்து...........நம் சந்ததிகளை காப்பாற்றுவது நம் ஒவ்வொருவரின் கடமை .

இன்ஷா அல்லாஹ் இந்த அமைதி போராட்டத்துக்கும் நமக்கு வெற்றியே கிடைக்கும்.

இந்த >>DCW <<தொழிற்சாலை போராட்டத்துக்கு நாம் யாவர்களும் ஓன்று பட்டு செயல் பட்டால் தான்.நாம் வெற்றி அடைவது உறுதி..............

சென்னையிலும் நம் ஊர் மக்களின் அமைப்புகள் 2 / 3 இருப்பதாகவே நமக்கு தெரிகிறது. அந்த அமைப்புக்களையும் >>KEPA << அமைப்பினர்கள் நேரில் சென்று அணைக்கலாமே......

நாம் ஏன் இன்னும் முறைப்படி அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து அதன் மூலமாகவே நாம் இன்னும் தீவிரமாக செயல் பட கூடாது .........நமக்கு அரசியல் கட்சிகளின் முழுமையான சப்போட்டும் & மீடியாக்களின் சப்போட்டும் கண்டிப்பாகவே தேவை ....ஏன் நாம் ..... . ND TV .... போன்ற சேனல்களின் தொடர்ப்பையும் வைக்க கூடாது.

>>KEPA << அமைப்பின் விடா முயற்ச்சிக்கு இன்ஷா அல்லாஹ் நல்ல பலன் நிச்சயம் நமக்கு உண்டு .......... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...KAYALAR களுக்கு DCW எதிர்த்து சென்னை இல் ஆர்பாட்டம்
posted by B,A,BUHARI (CHENNAI) [04 December 2012]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 24345

ASSALAMUALAIKUM

இன்ஷாஅல்லாஹ் இம்மாதம் 10ஆம் தேதி - திங்கட்கிழமையன்று காலையில், சென்னை கிண்டியிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை அலுவலகத்திற்கு, காயலர்களை பெருந்திரளாக அழைத்துச் சென்று கோரிக்கை மனுவை அளிப்பதென, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தயவுசெய்து மறந்து விடாதிர்கள் இந்த போராட்டம் நமகக்கவும் நம் ஊரு நன்மைகாகவும் "உயிருக்காக" போராடும் போராட்டம் என்பதை மறவாதீர்

இதனை பற்றி தகவல் அறிய

மண்ணடி (ZAKARIYA) --- 9841391830

பெரியமடு அண்ட் புரசை (SABEER ) --- 9444234690

OTHER ஏரியா ( BUHARI ) --- 9385215717


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. விடா முயற்ச்சி
posted by shahulhameed sak (malaysia) [04 December 2012]
IP: 49.*.*.* Malaysia | Comment Reference Number: 24346

விடா முயற்ச்சி!! வெற்றி வெகு விரைவில்!!!

இன்ஷாஅல்லாஹ், சென்னையில் காயலர்கள் மனு கொடுக்க ஏற்பாடு, மிகச்சிறந்த சமயோசிதமான முடிவு, என்னதான் லட்சங்கள், கோடிகள், சம்பாதித்தாலும் உடல் ஆரோக்யத்தோடு உயிர் வாழ்ந்தால்தானே அதனை அனுபவிக்க!? இல்லையென்றால் எந்த கோடியும் கடை தேராது. எனவே நமது காயல் வணிகர்கள் மனு அளிக்க செல்லும் சில மணி நேரங்களுக்கு தமது வணிக நிறுவனங்களை பூட்டி அனைத்து காயலர்களும் பங்களிக்க செய்ய வேண்டும் என்று பணிவோடு வேண்டிக் கொள்கிறேன் செய்வீர்களா?

வாழ்வுரிமை நாடி

அன்புடன்
ஷாகுல் ஹமீது sak
மலேசியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Cnash (Makkah ) [04 December 2012]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 24349

DCW வின் வலையில் வீழ்ந்த சில பத்திரிக்கைகள் உண்மை செய்தியையும், அவலங்களையும் இருட்டடிப்பு செய்து இருந்தாலும். இன்றைய குமுதம் ரிப்போர்டரில் வந்த செய்தி ஆறுதல் அளிப்பதாக உள்ளது . அந்த பக்கங்களை சகோதரர் சமூகதளத்தில் அனுப்பி இருந்தார்.

அதில் கூடுதல் செய்தியாக மதிமுக மாவட்ட செயலாளர் திரு. ஜோயல் அவர்கள் ஆலையின் விரிவாக்கத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்து இருக்கும் செய்தியையும் வெளியிட்டு அவரில் பேட்டியையும் போட்டிருந்தார்கள். நம் KEPA நிர்வாகிகளும் நம் போராட்டத்தில் அவரை இணைத்து கொள்ளலாம். வேண்டிய ஆலோசனைகளை அவரில் வழக்கறிஞர் மூலம் பெற்று கொள்ளலாமே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. struggle for pollution free kayal
posted by Jahir Hussain VENA (Bahrain) [04 December 2012]
IP: 82.*.*.* Bahrain | Comment Reference Number: 24351

அணைத்து சென்னை வாசிகளும் இதில் கலந்து கொண்டு நமது ஒற்றுமை நிலை நிறுத்தி ... சுகாதாரமான காயலை உருவாக்குவுமே......

நாம சாட்டை வீசாவிட்டால் இந்த சைத்தான் சேட்டை நிர்கபோவதில்லை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:... DCW ஆலை
posted by Salai.Mohamed Mohideen (USA) [04 December 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 24361

பலதரப்பட்ட மக்களுடன் ஒன்றிணைந்து DCW ஆலையின் அத்துமீறல் குறித்த விழிப்புணர்வையும் DCW நிறுவனத்துக்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி விட்டீர்கள். அதக்கான சாட்சியே பத்திரிக்கை விளம்பரமாக ...மொட்டை நோட்டீஸில் அம்புலி மாமா கதையளக்கும் DCW ஆலையின் முன்னாள் அல்வா கிண்டி கூட்டம்.

ஏதோ ஒரு நாள் கூத்து போல இல்லாமல் தொடர்ந்து நீதி கிடைக்கும் வரை போராடுவதட்க்கான நல்ல பல தீர்மானங்களையும் அதற்கான முயற்சிகளையும் எடுத்து வரும் KEPA வுக்கு வாழ்த்துக்கள்

"முடங்கிக் கிடந்தால் சிலந்தி கூட நம்மை சிறைபிடிக்​கும் ...
எழுந்து எழுச்சியுட​ன் போராடினால் எரிமலையும் நமக்கு வழி கொடுக்கும்"
என்பதற்கு மிகச்சிறந்த உதாரணங்களே இது போன்ற விழிப்புணர்வு தொடர் போராட்டங்கள். புரட்சிகளும் போரட்டாங்களும் உலக வரலாற்றையே புரட்டி எடுத்திருக்கின்றன. அதற்க்கு நாமும் சளைச்சவர்கள் அல்ல

ஒன்றிணைவோம்... வென்று காட்டுவோம் !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved