காயல்பட்டினம் நகராட்சியின் 04ஆவது வார்டு பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் நேரத்தை அப்பகுதி பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக, அந்த வார்டு நகர்மன்ற உறுப்பினர் கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, தனது முத்து மஹால் இல்லத்தின் முன்புற சுவற்றில் தகவல் பலகை அமைத்துள்ளார்.
குடிநீர் வினியோகம் செய்யப்படும் தெரு, தேதி, நேரம் உள்ளிட்ட விபரங்கள் அவ்வப்போது அத்தகவல் பலகையில் அறிவிப்பு செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நகராட்சியில் ஊழியர் பற்றாக்குறை காரணமாக குப்பை சேரிப்புப் பணியில் மந்தம் ஏற்பட்டதையடுத்து, தனது வார்டு மக்களில் விருப்பமுள்ளோரிடம் சொற்ப தொகை மாதக்கட்டணமாகப் பெற்று, அவர்களது இல்லம் தேடிச் சென்று குப்பை சேகரிக்கும் திட்டத்தை 01.12.2011 அன்று இவர் அறிமுகப்படுத்தி, இன்று வரை தொய்வின்றி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. |