காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப் பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்ககம் (எஸ்.எஸ்.ஏ.) திருச்செந்தூர் - இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அமைப்பின் சார்பில், பள்ளிகளுக்கிடையிலான போட்டிகள் நடத்தப்பட்டன.
06ஆம் வகுப்பு முதல் 08 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகளும், 09ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகளும் நடைபெற்றன.
இதில், முதல் மூன்றிடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்ககம் (எஸ்.எஸ்.ஏ.) சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளியின் முதுகலை தமிழ் ஆசிரியர் மு.அப்துல் ரசாக், தமிழாசிரியர் எஸ்.செய்யித் மஸ்ஊத் மற்றும் கைத்தொழில் ஆசிரியர் சு.பிரைட் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
09ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள பிரிவுக்கான - வட்டார அளவிலான பேச்சுப் போட்டியில், சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர் முஹம்மத் ஷம்சுத்தீன் முதலிடம் பெற்றார். அவரை பள்ளி தாளாளர் ஹாஜி வாவு மஸ்னவீ, நிர்வாகக் குழு உறுப்பினர்களான ஹாஜி நெய்னா ஸாஹிப், ஹாஜி வாவு எம்.எம்.உவைஸ், தலைமையாசிரியர் மு.ஷாஹுல் ஹமீத் மற்றும் அனைத்து ஆசிரியர்களும், ஆசிரியையரும் பாராட்டினர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, பள்ளியின் பட்டதாரி கணித ஆசிரியர் ஏ.பீர் முஹம்மத் ஹுஸைன் செய்திருந்தார்.
தகவல்:
நா.ரஃபீக் அஹ்மத்
படங்கள்:
G.அப்துல் காதர் கான்
ஆசிரியர்கள்,
சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம். |