உண்டியல் திறப்புடன் நடைபெறவுள்ள சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டம் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 07ஆம் தேதி வெள்ளிக்கிழமை (நாளை) இரவு 07.30 மணியளவில், 100 JALAN SULTAN #09-06, SULTAN PLAZA, SINGAPORE என்ற மன்ற அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
மன்றத்தின் அனைத்து செயற்குழு மற்றும் துணைக்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் தவறாமல் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள்.
கூட்டத்தின்போது, நகர்நலனுக்கான நிதி சேகரிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியான உண்டியல் நிதி சேகரிப்புத் திட்டத்தின் கீழ், உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட உண்டியல்கள் திறக்கப்பட்டு, பெறப்படும் நன்கொடைத் தொகை மன்றக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டு, அனைத்து உறுப்பினர்களும் தமது உண்டியல்களை தம்முடன் கொண்டு வருமாறும் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
K.M.T.ஷேக்னா லெப்பை
பொருளாளர், KWAS. |